Bio Data !!

25 July, 2019


காலையிலிருந்தே
காம தேனு போல்
மடி சொரிந்து
கிடக்கிறது.
பிலானியின்
மழை மேகங்கள்!!

களைப்பில்லாமல்
களிப்போடே
கலவி முடித்த பெண்
தடையின்றி
சொன்னதற்கெல்லாம்
தலையாட்டுவதைப்
பார்ப்பது போலே
வந்து வந்து
மறைகிறது
அதிகாலைச் சூரியன்!!

13 March, 2019

Take care of girl children

The  voice of Pollachi young girls is roaring in my ears. I am unable to sleep since i am also a mother of two daughters. 

My suggestion to the parents of girls, from childhood tell them about their plus. Never lower their self confidence while scolding them. "I am also a better human" this is what we have to sow in them strongly. 

Because when a boy who is handsome or rich or very well educated apraise her she gets self confidence without knowing they are fake. That pulls her into a great disaster.

With a false idea that they should not loose a rare person they yield little by little and in the end they loose the wholesome and then they understand what a rascal he is.

Normally girls long for what they don't get at home. From childhood we should teach them getting everything we desire is not possible and we should be happy with what we get.

Then a doubt may rise is it not necessary for male children. Normally in our country being a male itself gives them more self confidence. But some boys too are cheated by beautiful or rich or well occupied ladies thinking that they are an asset to them. 

There are exemptions in all rules.

The pathetic truth in both cheated boys and girls is that they are poor. Take care of girl children dears.

03 January, 2019


காதல்
என் பார்வையில் காதலைப் பற்றி சொல்கிறேன். இப்படிப்பட்ட காதலைத் தவிர்த்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

அனேகமாக காதலித்தவர்களைப் பார்த்தீர்களென்றால் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்களாய் இருப்பார்கள்.
அது கல்லூரியாக இருக்கலாம்.
கடவுளின் இருப்பிடமாக இருக்கலாம்.
சங்க கூட்டங்களாக இருக்கலாம்.
ஏதானும் கலை பயிலும் இடமாக இருக்கலாம்.
தான் தினமும் செல்லும் ஆட்டோவாக இருக்கலாம்.
பணி புரியும் இடமாக இருக்கலாம்.
தான் தினமும் செல்லும் தெருவாக கூட இருக்கலாம்
இன்றைய கால கட்டத்தில் முக நூலாக கூட இருக்கலாம்.

அனேகமாக அத்தனை காதல்களும் இந்த இடங்களுக்குள் அடங்கி விடும். ஒருவரை அடிக்கடி பார்க்கும் போது அவரது உடை உடுத்தும் பாணி, பேசும் தோரணை, அவரது அழகு, நிர்வாக நேர்த்தி, அவர் எழுதும் விதம், கற்பிக்கும் திறன் இவற்றுள் ஏதோ ஒன்றில் விழுந்து விடுகிறோம். அதன் பின் அவர் செய்யும் எல்லாமே நமக்கு பிடித்ததாகவே ஆகி விடுகிறது. பிடிக்காவிட்டாலும் அதற்கொரு காரணத்தை நாமே தேடி சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.

பிறர் வந்து நாம் காதலிப்பவரைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அதை நம் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. நாம் நினைத்தது நிறைவேறும் வரை அந்த ஒன்றைத் தவிர நம் மனம் வேறு ஒன்றைப் பற்றியும் நினைப்பதில்லை.
இதில் காதல் ஜெயிக்க வேண்டும் என்பதை விட நாம் தோற்று விடக் கூடாது என்ற தீவிரமே அதிகமாக இருக்கிறது. 

எல்லாம் நடந்து திருமணமும் முடிந்த பிறகு " நான் காதலித்ததும் திருமணம் செய்த தும் தவறு தான்" என்று சொல்லி பயனில்லை.

இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாம் தினசரி பார்ப்பவரை காதலிக்க கூடாது. நாம் காதலிப்பவர் கண்ணில் படாமல் இருந்தாலும் நம்மால் அவரைக் காதலிக்க முடிகிறதா?  அவர் நடத்தையை நம்ப முடிகிறதா எனப் பார்க்க வேண்டும். யாரேனும் நாம் காதலிப்பவரைப் பற்றி தவறாகச் சொன்னால் உடனடியாக எதிர்வினை ஆற்ற வில்லை என்றாலும் மனதின் ஒரு ஓரத்தில் அதை வைத்தபடியே இருந்தால் பல நிகழ்வுகளை கலைத்து போட்டு அடுக்கும் போது கட்டடம் அமைந்து விடும்.

அன்பு செய்யுங்கள். அரவணையுங்கள். அடுத்த கட்டம் செல்லும் முன் தாமதியுங்கள். ஆபத்தை தவிர்க்கலாம்.

03 April, 2018

உண்ணா விரதம்.
அப்பொழுது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். டைப் ரைட்டிங் லோயர் முடித்து ஹையர் படித்திருந்தேன். என் கணவர் வீடு எங்க வீட்டுக்கு அருகில் தான். டைப் பரீட்சை வைத்திருந்த வளாகத்தில் தான் என் கணவரின் தந்தை பணி புரிந்து கொண்டிருந்தார். என் வீட்டில் காதல் பிரச்னை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் நான் பரீட்சை முடித்து என் கணவரின் தந்தையை சந்திக்க விரும்பினேன். னஙே அவருடைய வீட்டுக்குப் போய் என் கணவரிடம் பேசி விட்டு வந்தேன். திரும்பி வருவதை தொலைவிலிருந்து பார்த்த எங்க அம்மா அவர்கள் வீட்டுக்குச் சென்று என் கணவரின் தம்பியிடம் நான் ஏன் வந்து போனேன் என விசாரித்திருக்கிறார். அவன் உள்ளதை சொல்லி விட்டான். வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் டமால் டுமீல். நான் வாக்குவாதம் முடிந்ததும் இனி இங்கே சாப்பிட மாட்டேன் என பிரகடனப்படுத்தி என. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தேன். இரண்டு நாட்கள் "உண்மையான" உண்ணா விரதம். இரண்டாம் நாள் டைப் பரீட்சை. அதைக் காரணம் காட்டி சாப்பிட வைக்கப் பார்த்தனர். நான் ம்ம்ம்கூம். பரீட்சைக்குப் போனால் என் கணவரின் தந்தையை நான் சந்திப்பேன் என நான் சொல்ல அம்மா அப்போ பரீட்சையே வேண்டாமென்றார்கள். அதன்பின் அந்த தேர்வு தொங்கலிலேயே நின்று விட்டது. மூன்றாம் நாள் எங்க தாத்தா, குடும்ப நண்பர் என பெரியவர்கள் வந்து வற்புறுத்தியதால் உண்ணாவிரதம் தோல்வியில் முடிவுக்கு வந்தது. இருந்தும் பின்னொரு நாளில் என்தந்தையின் கணவர் "உன்னை விட என் மகனுக்கு சிறந்த பெண் கிடைக்க மாட்டாள். என்றும் நான் உங்கள் பக்கமிருப்பேன்" என்று சொன்ன படியே திருமணத்தையும. முடித்துக் கொடுத்தார். அதனால் அந்த உண்ணாவிரதம் வெற்றி என்றே கொள்ளலாம்