Bio Data !!

06 December, 2009

மலரட்டும் மழலைகள் !!

குழந்தை ஜனித்தும்
குருதி கசியுது,
நஞ்சுக்கொடியோ
நேரம் வரும் முன் சாகுது,
நஞ்சுக்கொடி அல்பாயிசில்
மரணித்ததால்
மழலையின் ஜனனம்
மரணம் ஆகுது .
ஜெனிப்பது முதல் ஜனனம் வரை
வகை வகையாய் எத்தனை சிக்கல்கள்,
விதம் விதமாய் எத்தனை தொல்லைகள்.
கருவறையே போர்க்களமாய்
அமர்க்களமாய் வெளியேறும்
என் செல்ல சிசுக்களே !!
என்னை கவர்ந்த கதாநாயகன்
இனி நீங்கள் அல்லால்
வேறு எவர்..
பதிவுலகம் சார்ந்த என் இனிய மருத்துவ நண்பர்களே !
இந்தக் கவிதை என்னை பாதித்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடு.
மருத்துவ ரீதியாய் உதவும் தகவல்களை இங்கு பதியுங்களேன்.

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி பிரசவம் குறித்த தேதிக்கு மூன்று தினங்கள் முன் மருத்துவரை சந்திக்க , தாயும் தாயினுள் சேயும் நலம். குறித்த தேதியில் வந்தால்போதும் என்று அனுப்பி விட்டார்.
இந்த பெண் தன் தலைச்சன் குழந்தையை பிரசவத்தின் கடைசி நிமிடத்தில் பறி கொடுத்தவள்.இதை மருத்துவரும் நன்கு அறிந்தவர். போன இரு நாட்களில் திரும்பி வந்தாள், வயிற்றில் துடிப்பு இல்லை என. சுலபமாய் மருத்துவர் சொன்னார் " நஞ்சுக்கொடி திடீர்னு செத்து விட்டதால் குழந்தை வயிற்றின் உள்ளேயே இறந்து விட்டது. தாய் பிழைத்ததே உங்க பாக்கியம்னு நினைச்சிக்கோங்க." சொல்லி மறைந்து போன மலரை கைகளில் கொடுத்து அனுப்பினார்.

எனது சந்தேகம் எல்லாம் ,
குழந்தையின் மரணம்
மருத்துவரின் அலட்சியமா??
மருத்துவத்தின் புரியாத பல புதிர்களில் ஒன்றா??
அந்தத் தாயால் முன்னமேயே உணர முடிந்திருந்தால் அறுவை சிகிச்சையில் குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாமா??
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்,
உங்கள் செய்தி சில மழலைகளையேனும் மறையாமல் காப்பாற்றுமே!
வாருங்கள் நண்பர்களே!!
9 comments:

 1. //என்னை கவர்ந்த கதாநாயகன்
  இனி நீங்கள் அல்லால்
  வேறு எவர்.. //

  நிச்சயமாக வெளிவரும் அவர்கள் தான், உண்மையான கதாநாயகர்கள்.

  பத்து மாதம் சுமந்து உயிரற்ற மலராய் பார்க்கையில் அந்த தாய்மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும்?கொடுமைங்க.

  ReplyDelete
 2. பாராட்டுக்கு நன்றி தியாவின் பேனா,
  நாடு கடந்த பாராட்டு கொஞ்சம் கூடுதல் உற்சாகமே தருகிறது

  ReplyDelete
 3. நல்ல இடுகை தோழி...
  நானும் சிலநேரம் நினைத்ததுண்டு... மருத்துவர்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நோயாளியை காப்பாற்ற/குணப்படுத்த முடிந்திருக்குமோ என்று...
  நிச்சயம் மருத்துவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்களே... ஒருசிலர் மட்டுமே இந்தத் துறையில் வணிக நோக்குடனும் அலட்சியப் போக்குடனும் செயல்படுகின்றனர்...

  ReplyDelete
 4. மிகவும் அருமை. தாய்மைக்குத்தானே தெரியும் தான்பட்டவேதனை...

  நாய்குட்டி மனசு அழகு..

  ReplyDelete
 5. மறுபடியும் ஒரு தாய் பதிவு..இந்த மாதிரியான பதிவுகள் உங்களை எங்கள் மத்தியில் அழகாக்குகின்றன..

  ReplyDelete
 6. நன்றி அன்புடன் மணிகண்டன்
  நன்றி மலிக்கா

  ReplyDelete
 7. மருத்துவருக்கு - நாம் ஆயிரம் நோயாளிகளுள் ஒருவர். ஆனால் நம் குழந்தை நமக்கு. கோடி பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று. எந்த துறையிலும் அலட்சியம் இருக்கலாம். ஆனால் மருத்துவ துறையில் மட்டும் கூடாது.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!