Bio Data !!

10 December, 2009

டைரி என்னும் பைபிள்

போன பதிவுக்கு பிறகு மகளிடம் கேட்டேன் " அம்மா எழுதினதைப் பாரு. இந்த தடவை நல்லா வந்திருக்கு."
"பார்த்திட்டேன்"
" அப்புறம் ஏன் அம்மாட்ட எதுவும் சொல்லல"
"அழுகையா வருதில்ல "
அடடா, அவளோட mood மாறணுமே. அதுக்கு தான் இது.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு . கதையிலேயோ சினிமாவிலேயோ இல்ல யாராவது பேசும் போதோ கிடைக்கிற நல்ல விஷயங்களை டைரில எழுதிக்கிறதுண்டு. எப்போவாவது மனசு சரியில்லேனா அதை பார்ப்பேன். எனது டைரிகள் தான் எனது பைபிள்.
அதிலிருந்து சில :
ஞான பீட விருது வாங்கிய ஜெயகாந்தனிடம் ஒரு நிருபர் கேட்டார்:
"நாம் மட்டும் வட மொழியில் இயற்றப்பட்ட கீதையை படிக்கணும். வடக்க உள்ளவங்க தமிழில் எழுதப்பட்ட திருக்குறளை படிக்க மாட்டாங்களா ? "
அதுக்கு ஜே.கே "தினமும் நான் பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுறேன். ஆனா அவன் மட்டும் ஒரு நாள் கூட எனக்கு பிச்சை போட மாட்டேன்கிறானேனு கேட்கிற மாதிரி இருக்கு" னு சொன்னாராம். நெத்தியடி!!
அன்புக்கும் இதே பதிலை எடுத்துக்கொள்வோம். எதிர்பார்ப்பற்ற அன்பு எவ்வளவோ ஏமாற்றங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
"மனசாட்சிக்கு எதிரான அநீதியை எதிர்த்து போராடக் கற்றுக்கொண்டேன். வெள்ளச் சூழலுக்குள் பாய்வதற்கு முன்னால் அதை அளந்து பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. மனசசாட்சி விரும்பினால் உடனே பாய்ந்து விடுவேன்."
-கிரண் பேடி
இன்றைய அவசர உலகில் இது அத்தியாவசியத் தேவை. எண்ணித் துணிக கர்மம் துணிந்த பின் எண்ணுவம் எல்லாம் பேச்சுக்கு ஆகாது.
செயலில் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம்மைத் தாண்டி இத்தகைய பலர் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
ready, set ,go
"பேச்சுக்கு நடுவே
புகை போல் எழும்
மெளனத்திடம்
எச்சரிக்கையாய் இருங்கள்.
அதில் ஒளிந்திருப்பது
கடவுளாகவும் இருக்கலாம்,
பூதமாகவும் இருக்கலாம்"- நா. முத்துக்குமார்.
இத்தகைய மௌனங்கள் தான் இன்று பல உறவுகள் சின்னாபின்னமாக காரணம். கவனமாய் இருங்கள்.
"மனிதனுக்கு இரண்டு வகையான பிரச்னைகள் .
ஒன்று விரும்பிய பொருள் கிடைக்காத போது.
மற்றது விரும்பிய பொருள் கிடைத்து விடும் போது.
-மாதா அமிர்தானந்த மயி.
உலகத்தின் எல்லா பிரச்சினைகளும் இந்த இரண்டில் அடங்கி விடும்.right ஆ wrong ஆ ??

3 comments:

 1. இப்போதும் டைரி எழுதும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா. ஆச்சர்யம் தான். எனக்கும் இருந்தது. இப்போது இல்லை, இங்கே இது தான் வேடிக்கை. நமக்கு ஒரு பழக்கம் இல்லை என்றால், ஊரில் யாருக்குமே அந்த பழக்கம் இருக்காது என்று கருதுகிறோம். நமக்கொரு பழக்கம் இருந்துவிட்டால், ஊரில் எல்லோருக்கும் அந்த பழக்கம் இருப்பதாக கருதுகிறோம். சரி... உங்கள் டைரியை நீங்கள் அடுத்தவரிடம் படித்து காட்டலாம்மா

  ReplyDelete
 2. //எனது டைரிகள் தான் எனது பைபிள்.//
  கண்டிப்பா..
  இருக்குறவனுக்கு ஆயிரம் கவலை
  இல்லாதவனுக்கு ஒரே கவலை இல்லையேன்னு..சரிதானாம்மா..

  ReplyDelete
 3. நன்றி தமிழ் உதயம் .
  நன்றி சிவாஜி சங்கர் .யாருக்கும் கவலையே தேவை இல்லை சிவா

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!