Bio Data !!

22 December, 2009

உங்க காய்ச்சல் எப்படி இருக்கு!!

இப்போ எதாவது ரெண்டு பேர் பார்த்துக்கிட்டா
" உங்க காய்ச்சல் எப்படி இருக்கு?"
"அதை ஏன் கேட்கிறீங்க. முட்டிக்கு முட்டி வலிக்குது. சரி, உங்க காய்ச்சல் எப்படி இருக்கு?"
இப்படி உங்க குழந்தைகள் எப்படி இருக்குங்கறதைப் போல கேட்டுக்கிட்டு இருக்காங்க. நாம எவ்வளவுக்கு எவ்வளவு சேர்த்து வச்சிருககிரமோஅவ்வளவுக்கு சுகமா இருக்கலாம். நான் சொல்றது சொத்து பத்து இல்லேங்க . ஆரோக்கியம். மழைக் கால எறும்புகளாய் ஆனந்தமாய் இருக்கலாம் provided மீதி நாட்களில் சுகத்தை சேகரித்திருக்கணும்
கொஞ்ச நாள் முன்ன உணவு பற்றிய ஒரு கருத்தரங்கம் போயிருந்தேன். அத எப்படா பதியலாம்னு இருந்தேன் இப்ப சான்ஸ் கிடைச்சது. ஆரோக்கியம்ங்கறது,
சாப்பாட்டில இருந்து மட்டும் இல்ல வேற சில விஷயங்களில் இருந்தும் கிடைக்கும். அதை வருஷம் முழுவதுமா சேர்த்து வைச்சிகிட்டா மழை காலத்தில் உதவும்.
உங்களுக்கு தெரியுமா ?ஆழ்ந்த நல் உறக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்றைக்கு எத்தனை பேருக்கு அது கிடைக்கிறது . பரபரப்பான வாழ்க்கையில் குடும்ப பிரச்னை பேச கிடைக்கும் நேரம் படுக்கைக்கு முன்பு தான். எந்த பிரச்னையை நாம tension இல்லாம பேசி தீர்த்துருக்கோம். ஆக படுக்க போகுமுன் எல்லா tension ஐயும் அதிகரிச்சிட்டு அப்பறம் நல் உறக்கம் எப்படி.
எந்த விஷயத்தையும் நிதானமா பேசப் பழகிக்குவோமே!!
நேர் மறை சிந்தனைகளை அதிகரித்து கொள்ளணும். உள்ளத்திலிருந்து சிரித்து சந்தோஷமாவைத்து கொள்ளணும். உள் உறுப்புகள் jogging போனது போல தன்னை புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்ளும். MGR படத்தில நம்பியார் ரெண்டு கையையும் தேய்ச்சுக்கிட்டு சிரிப்பாரே அப்படி எல்லாம் சிரிக்க கூடாது. நல்லா கண்களில் நீர் துளிர்க்க அடி வயிறு குலுங்க சிரிக்கணும் அது உள் உறுப்புகளுக்கு ஒரு உடற் பயிற்சி.

எதிர்மறை சிந்தனையை கொண்டிருக்கும் நபர்களிடம் இருந்து எட்டியே இருப்பது சாலச் சிறந்தது. நேர்மறை சிந்தனைகள் தான் நமது மூளைக்கு நாம் கொடுக்கும் உணவு .
இந்த மாதிரி பல வழிகளில் நம்மை அழகா ஆரோக்கியமா வைச்சிக்கலாம்.

"ஒரு வயதுக்கு அப்பறம் (ரெண்டாவது வயசிலயானு கேட்கக் கூடாது) பெண்கள் தங்கள் உடலைக் கவனிப்பதிலோ ஆரோக்கியத்தைக் கவனிப்பதிலோ அதிக அக்கறை காட்டினால் மிகுந்த சுயநலவாதியாக சித்தரிக்க படுகிறார்கள். "
ஒரு வாரப் பத்திரிகையில் படித்தது . வீட்டிலுள்ள எல்லோருடைய உடல் நிலைக்கு ஏற்ப சமைத்து கவனித்துக் கொள்ளும் பெண் தன் உடலைக் கவனித்துக் கொண்டால் சுயனலவாதியாம். நல்லா இருக்கே கதை.

மயான வைராக்கியம் கேள்வி பட்டு இருக்கீங்களா? .யாராவது திடீர்னு இறந்து போனால் அவரது இறுதி சடங்குகள் முடித்து வரும் போதுஅத்தனைபேரும் நமது உணவு சிக்கல்கள் வாழ்க்கை நடத்தும் முறையின் சிக்கல்கள் பற்றி பேசிட்டு வருவோம் . ஆனால் கொஞ்ச நாட்களுக்குத்தான் அப்பறம் பழைய படி தான் எல்லாம் நடக்கும்.
அப்படி இல்லாம எப்போவுமே health consious யோட இருப்போம்.
நலமோடு வாழ்வோம்!! வளமோடு வாழ்வோம் !!

13 comments:

 1. நல்ல சிந்தனைகள், அருமையா இருக்கு

  //மயான வைராக்கியம் கேள்வி பட்டு இருக்கீங்களா?//

  நான் 'பிரசவ வைராக்கியம்' தான் கேள்விப்பட்டிருக்கேன் :))

  ReplyDelete
 2. நலமோடு வாழ்வோம்!! வளமோடு வாழ்வோம் !!”
  நிச்சயமா.....

  ReplyDelete
 3. நல்ல கட்டுரைங்க..... அருமையா எழுதியிருக்கிங்க‌

  //ஆழ்ந்த நல் உறக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்//
  //நேர்மறை சிந்தனைகள் தான் நமது மூளைக்கு நாம் கொடுக்கும் உணவு .//

  த‌க‌வ‌லுக்கு மிக‌ ந‌ன்றிங்க‌.

  ReplyDelete
 4. நல்ல தேடல்
  நல்ல தகவல் .
  நன்றி

  ReplyDelete
 5. //அடி வயிறு குலுங்க சிரிக்கணும் அது உள் உறுப்புகளுக்கு ஒரு உடற் பயிற்சி//
  இத தான் ஃபீஸ் வாங்கிகிட்டு laughing therapy சொல்றாங்க..

  ReplyDelete
 6. நல்ல பதிவும்,பகிர்தலும்..வாழ்த்துக்கள் நண்பரே !!!

  ReplyDelete
 7. இதுவும் அதைப்போல ஒண்ணு தான் சங்கர்
  வருடப் பிறப்பன்று புதுசா ஒரு add on வைராக்கியம் கொடுத்திருக்கேன்

  ReplyDelete
 8. நன்றி அண்ணாமலையான்
  நன்றி கருணாகரசு, தங்கள் வரவு நல்வரவு ஆகுக !

  ReplyDelete
 9. நன்றி நினைவுகளுடன் நிகே
  தங்கள் வரவு நல்வரவு ஆகுக

  ReplyDelete
 10. நன்றி சிவா நான் கூட பீஸ் வாங்கறேன். அது உங்கள் அன்பும் பின்னூட்டமும்

  ReplyDelete
 11. Romba nalla topic Akka. Neenga touch panna ovoru item-um romba mukiyamana karuthukkal. Ithai pathi ezhuthunathukku romba nandri.

  ReplyDelete
 12. //நேர்மறை சிந்தனைகள் தான் நமது மூளைக்கு நாம் கொடுக்கும் உணவு .//

  ம்

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!