Bio Data !!

31 January, 2010

எண்ணச் சிதறல்கள் !

நீயா ? நானா? நான் பார்க்கிற ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று. நேற்று தலைப்பு " இந்தக் கால பெண்கள் விரும்புவது chocalate பையன்களையா இல்லை rustic பையன்களையா" ஒரு வரிசைக்கு மட்டும் இளைஞர்களை "உட்கார வைத்து " (இதை ஏன் குறிப்பிட்டு சொல்றேன்னா அவங்களை ஒரு வார்த்தை கூட பேச விடல்ல . அடப் பாவமே! ) பெண்களை பேச விட்டார்கள். Dr ஷாலினி நச் னு ஒரு கருத்து சொன்னாங்க . இப்படிப்பட்ட வெளித் தோற்றம் உள்ள பையன் இப்படிதான் இருப்பான்னு பெண்கள் நினைப்பது அவர்களுக்கும் தெரியும் ஆதலால் அதற்கேற்றாற்போல் நடந்து சுலபமாய் பெண்களை ஏமாற்றலாமே. அதில் ஒரு பெண் " ஆண் என்றால் அடக்கணும் , பெண் என்றால் அடங்கணும்." னு சொன்னது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது மீடியா வுக்காக மட்டும் பேசியது என்றால் பரவாஇல்லை. உண்மையில்லேயே ஒரு இளம் பெண்ணின் மனதில் இருந்து எழுந்த கருத்தாக இருந்தால் வருந்த வேண்டும். பாரதியின் கனவு தோற்றதாய் ஆகுமே. எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பெண்கள், நடை உடையை வைத்து ஒருவர் இப்படிதான் என்று சொல்வது உண்மைதானா என்பதை அந்த ஆண்களை வைத்தே சொல்ல வைத்திருக்கலாமே கோபி? என் எண்ணம்வெளித் தோற்றத்துக்கும் உள் மனதுக்கும் பெரும்பாலும் தொடர்பே இருப்பதில்லை என்பது தான். எனக்கு தெரிந்த ஒரு பெண் தான் காதலித்த ஆணின் தீய பழக்கங்களை (smoking, drinking etc.,) manliness என்று வளர்த்து விட்டு இறுதியில் நாசமாப் போன கதை தெரியும். எது எப்படி இருந்தாலும் இளம் பெண்களே உஷாராய் இருங்கள். " முள்ளில சேலை பட்டாலும், சேலையில முள் பட்டாலும் கிழியப் போவதென்னவோ சேலை தான் என்பது காலம் மாறினாலும் மாறாத பழமொழி.

நண்பர் ஒருவர் சொன்னார் "நீங்க அப்பப்ப நெல்லைச் செய்திகளை எழுதலாமே. நெல்லை சேர்ந்த வெளி மாநிலத்திலோ , வெளி நாட்டிலோ இருப்பவர்களுக்கு ருசிகரமாய் இருக்குமே." என்று. நல்லா இருக்கே எழுதலாமேன்னு பார்த்தா நம்ம ஊர் ரஸ்டிக் பாய்ஸ் நிறைந்த தென் மாவட்டங்களில் ஒண்ணா இருக்கிறதால முதுகுப் பக்கம் உருவற செய்தியாவே இருக்கு. சலிச்சி சல்லடை போட்டதில ஒரு வித்தியாசமான செய்தி.

.... நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் வித்யா லட்சுமி பூஜை நடந்தது. பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தம் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இந்த வேள்வியில் பேனா, புத்தகம், பென்சில் வைத்து பூஜை நடத்தி மாணவர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். ..

கடந்த வாரம் கடந்து சென்ற கடுகுச் செய்திகளில் ஒன்று பேருந்து வசதிகள் அதிகம் இல்லாததால். ஒரு படகை தானே ஓட்டிச் சென்ற மாணவர்களில் ஒரு சிலரின் குதூகலத்தால் படகு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக எல்லோரும் காப்பாற்றப் பட்டார்கள். ஒரு உயிர் போயிருந்தாலும் அது பேரிழப்பு அல்லவா? இலவசமாக பல பொருட்கள் கொடுக்கும் அரசு முக்கியமாக கொடுக்க வேண்டியது மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி,செய்தி கொடுக்கும் என்று நம்புவோம் பேரூந்து வசதியை.
ஆனந்த விகடனில் ராமகிருஷ்ணன் பரிசு கொடுப்பதைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார். பரிசு எதிர் பாராமல் கொடுக்கும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும். பிறர் எதிர்பார்த்து நாம் செய்யும் செயல் நம் கடமை ஆகி விடுகிறது. அது முழு மகிழ்ச்சி தருவதில்லை. அதனால் அடிக்கடி பரிசு கொடுப்போம் எதிர்பாராத நேரத்தில் , எதிர்பாராத நபர்களுக்கு.

5 comments:

 1. நீங்க முதல் பாராவில் சொன்னது 100% சரி. ஆனா அத தெரிஞ்ச பொன்னுங்க எத்தன பேர்?

  ReplyDelete
 2. உண்மைத்தான். ஒருவன் or ஒருத்தி ஏமாற முடிவு செய்து ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

  ReplyDelete
 3. நன்றி அண்ணாமலையான்
  நன்றி தமிழ், ஏமாறுபவர்களை விழிக்க வைக்க நாம் முயலலாமே

  ReplyDelete
 4. வாவ் நம்ப ஊரு செய்திகளா?? குட் குட்..
  என்ன நியுஸ்-ன்னு உங்க ப்ளாக் பார்த்தே தெரிஞ்சுக்கலாம்.. :)

  ReplyDelete
 5. நன்றியும் வாழ்த்துக்களும் சிவா
  வர வர உங்கள் எழுத்துக்களில் மெருகு கூடிக் கொண்டே போகிறது

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!