Bio Data !!

02 March, 2010

இனியவை இருபது.

நேரம் இன்மை காரணமாக கொஞ்சம் ஒப்பேத்தல் போல் தோணினாலும், கவனிச்சு வாசியுங்கள் நமக்கு தேவையானவை தான் இந்த இனியவை இருபது.
--> நமக்கு கிடைக்கும் நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை பனைமரம், தென்னை மரம், பாக்கு மரம்.
நம்மைத் தேடி வந்து வலிய உதவி செய்பவர்கள் பனை மரம் போன்றவர்கள்.
பனை மரம் தானாக முளைத்து, தானாக தண்ணீர் குடித்து, தானாக வளரும்.
எப்போதோ நாம் செய்த உதவியை நினைவில் வைத்து நமக்கு அடிக்கடி உதவுபவர்கள் தென்னை மரம் போன்றவர்கள். எப்போதாவது தண்ணீர் விட்டால் போதும் தென்னை வளர்ந்து விடும்.
தினமும் உதவி செய்தால் தான் நம்மைக் கவனிப்பார்கள். அவர்கள் பாக்கு மரம் போன்றவர்கள். தினமும் தண்ணீர் விட்டால் தான் பாக்கு வளரும்.
--> மனிதன் ஒரு கருத்தைக் கேட்கும் போது அவன் சிந்திக்கும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 500 சொற்கள், பேசும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 100சொற்கள் என கணக்கிட்டு இருக்கின்றனர்.
--> கடலின் பாசிகள் சிகப்பு, நீளம், பச்சை என் பல வண்ணங்களில் காணப்படுகின்றன. வழவழப்பும் மென்மையும் நிறைந்த பாசி தான் கடல் தாயின் முதல் குழந்தை. இது ஜப்பானியர்களின் விருப்ப உணவு.
--> மோர், தயிர், தேன் போன்றவற்றை சாப்பிட்டவுடன் சூடான பொருட்களை உண்ணக் கூடாது.
--> கோதுமையை நல்லெண்ணையுடன் சமைத்து சாப்பிடக் கூடாது.
--> வெறும் வயிற்றில் காபி சாப்பிடக் கூடாது. {இது நம்மால் ஆகாதுன்னு சொல்லறீங்களா , சிரமம் அதிகம் இல்லை gentle man முதலில் தண்ணீர் குடித்து பின் காபி குடிக்கவும்.}
--> பழங்களை தனியே சாப்பிட வேண்டும். உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது.
--> ஓசோன் கலந்த காற்றைப் பற்றி நாம் இப்போ அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் அன்றே வள்ளலார் அதைப் பற்றி காலை நான்கு மணி முதல் ஐந்தே முக்கால் மணி வரை அமுதக் காற்று வீசுவதாக சொல்லி இருக்கிறார். அதி காலையில் எந்தக் காரியம் செய்தாலும் சித்திக்கும். காலையில் நான்கு மணிக்கா ? அது எங்கள் mid night ஆச்சேனு சொல்றீங்களா, முயற்சி செய்து பார்க்கலாம்.
--> நம் உடலில் தோன்றும் பல வியாதிகள் நம் கால்கள் மூலமாகவே பரவுகின்றன என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள். { சிக்கென் குனியா அதில் உண்டா? தெரியவில்லை. நாட்டில் பலரும் நடப்பதே பரிதாபமாக இருக்கிறது.}
--> கடினம் மிகுந்து ஒளிகதிர்களுடன் குளிர்ச்சியான பச்சை நிறத்துடன் இருக்கும் மரகதக் கல் நரம்பு மண்டலத்தின் சகல நோய்களையும் தீர்க்க வல்லது.
--> காலம் துவங்கிய போதே புழக்கத்திற்கு வந்து விட்டது தங்கம். (அட!) இந்த உலகத்தின் முக்கால் பகுதி தங்கம் தென் ஆப்பிரிக்காவில் தான் இருக்கிறது. { உடனடித் தேவை தென் ஆபிரிக்காவில் இருந்து ஒரு பெண், நம் பதிவு உலகத்தின் திருமணம் ஆகாத நண்பர்களுக்கு!}
--> வலம்புரிச் சங்கு கிடைத்து விட்டால் அதன் நீளம், அகலம், எடை, வாய் நிறம் இனம் இவற்றைப் பொறுத்து அது மதிப்பிடப் படுகிறது.
--> சுறா மீன் நீரில் மிதக்கும் ஒரு பொருளை பிடிக்க வேண்டும் என்றால் அது மல்லாந்து தான் பிடிக்க வேண்டும். ஏன் என்றால் அதன் வாய் அடிப்பாகத்தில் தான் அமைந்திருக்கிறது.
--> ஒரு நிமிடத்திற்கு குறைந்தது பத்து முறை கண்கள் இமைக்க வேண்டும். கண்களை எப்போதும் அகலத் திறக்கக் கூடாது. { அதாவது எதிரில் யாராவது நச்சுனு போனா இமைக்காம முழிச்சு பார்க்க கூடாது.} இதனால் இமைப்பது தடைப் படும். பார்வை திருப்பும் திசையில் தலையும் திரும்ப வேண்டும். { ஓரக் கண்ணால் பார்க்கிற கதையெல்லாம் கூடாது.}
--> "பெண்ணே ! ஏழு அடி தூரம் என்னுடன் வந்த நீ எனக்கு "சகா" வாவாய். நாம் இருவரும் சிநேகிதர்கள் ஆகி விட்டோம். உன்னை விட்டு நான் பிரிய மாட்டேன். என்னை விட்டு நீ பிரியக் கூடாது. நம் இருவர் மனமும் ஒத்து இருக்கட்டும்" எங்கேயோ கேட்ட குரலாக் கீதா? திருமணத்தின் போது சொல்லும் மந்திரத்தின் தமிழ் பதிவு.
--> கேசல் எனும் ஒரு வகை மானும் ஒட்டகக் குடும்பத்தை சேர்ந்த லாமாவும் தண்ணீரே குடிப்பதில்லை.
--> முன் காலத்தில் எவ்விதப் பதவியும் வகிக்காத ஒரு சாதாரணப் பிரஜையை "இடியட்" என்று அழைப்பார்கள். அதுவே பிற்காலத்தில் ஒரு வகை சொல்லாக மாறி விட்டது.
--> வாசனை அறியும் சக்தி பாம்பிற்கு அதன் நுனி நாக்கிலே இருப்பதாலேயே அது அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுகிறது.
--> தேவைக்கு அதிகமாக நாணப்படும் ஆண் பிள்ளையும் தேவைப்படும் போது கொஞ்சம் கூட நாணப் படாத பெண்ணும் சந்தேகத்திற்கு உரியவர்கள். { ரஜினி படத்தில இந்த வசனத்தை உபயோகித்தால் எனக்கு ராயல்டி வேணும்.}
--> மனிதன் உயிர் வாழ ஒரு நுரையீரலே போதுமானது.

14 comments:

 1. வாவ் கலக்குறீங்க.. நல்ல பயனுள்ள தகவல்கள்..

  ReplyDelete
 2. நன்றி சிவா, என்ன ரொம்ப நாளா காணோம்?

  ReplyDelete
 3. உண்மையிலேயே நல்லா இருக்கு. இத போய் ஒப்பேத்தல்னு சொல்லலாம்மா.

  ReplyDelete
 4. கருத்தாழமான நல்ல பதிவு

  ReplyDelete
 5. மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ளகூடிய விஷயங்கள்...

  ReplyDelete
 6. இருபதும் உபயோகமானது செல்ல நாய்க்குட்டி மனசு அருமை தொகுப்பு

  ReplyDelete
 7. பனை மரம்
  தென்னை மரம்
  பாக்கு மரம்
  //
  அருமை

  ReplyDelete
 8. மனிதன் ஒரு கருத்தைக் கேட்கும் போது அவன் சிந்திக்கும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 500 சொற்கள், பேசும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 100சொற்கள் என கணக்கிட்டு இருக்கின்றனர்.
  //
  எல்லாமே நல்லா இருக்கு :)

  //
  தேவைக்கு அதிகமாக நாணப்படும் ஆண் பிள்ளையும் தேவைப்படும் போது கொஞ்சம் கூட நாணப் படாத பெண்ணும் சந்தேகத்திற்கு உரியவர்கள். { ரஜினி படத்தில இந்த வசனத்தை உபயோகித்தால் எனக்கு ராயல்டி வேணும்.}
  //
  Ha ha ha. Nice

  ReplyDelete
 9. நன்றி தமிழ், சில நேரங்களில் குறைந்த சமயத்தில் பதிவு போட நேர்ந்து இப்படி எழுதும் போது கொஞ்சம் குற்ற உணர்வு அதன் வெளிப்பாடு தான் அந்த வார்த்தைகள். மீண்டும் நன்றி.

  ReplyDelete
 10. நன்றி Dr. M.K. முருகானந்தன், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

  ReplyDelete
 11. நன்றி வசந்த், பிரியமுடன்

  ReplyDelete
 12. நன்றி தேனம்மை
  நன்றி சேது, உங்கள் நட்பு பனை மர நட்பு enbathu என் கணிப்பு, சரியா?

  ReplyDelete
 13. இது ஒப்பேத்துன பதிவு இல்லிங்க.... உயர்வான பதிவு.... அத்தனையும்.... ”நச்” ரகம்.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. நன்றி கருணாகரசு, உங்கள் நட்பு கவிதையில் நடப்பது பல அலுவலகங்களில் உயர் அதிகாரிகளால்.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!