Bio Data !!

07 March, 2010

பெண்மையை போற்றுவோம் !!

"என்னங்க , ஏந்திரிங்க"
ஒரு நொடி தன் கணவனின் அகன்ற மார்பையும் புடைத்த தோள்களையும் ரசித்த படி விரல்களால் மெல்ல எழுப்பினாள் சரண்யா. அவள் காதல் விரல்களின் மூலம் அவனுக்குள் சென்றதோ? மெல்ல அவளை இழுத்து அணைக்க முயன்றான் பாலன். "ஷ், எழும்புங்க, அவளை கொஞ்ச நேரம் பார்த்துக்கங்க, எனக்கு தூக்கம் வருது."

இந்த
வார்த்தைகள் சொடுக்கியதில் விருட்டென்று எழுந்தான் பாலன். நேற்று இரவு நடந்தது மெல்ல நினைவு வர எழுந்து முன் அறைக்கு விரைந்தான். அங்கே அவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். புடவை கட்டியதால் ஒரு பதினெட்டு வயது மதிக்கலாம். பாவாடை சட்டை போட்டிருந்தால் பதினைந்து தான். காதுகளில் சின்ன தங்கக் கம்மல். கழுத்தில் ஒரு மெல்லிய கவரிங் செயின். தனக்கு அறிமுகம் இல்லாத வீட்டில் உறங்கும் உணர்வே இன்றி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். "நான் பார்த்துக்கறேன், நீ தூங்கும்மா" என்று மனைவியை படுக்கச் சொல்லி பாலகுமாரன் புத்தகம் ஒன்றை எடுத்த படி அமர்ந்தான். நேற்று இரவு நடந்தது திரைப்படம் போல் நினைவில் ஓடியது.

ஈரோடு
.

அகன்ற
பிரப் ரோட்டில் கணவனும் மனைவியுமாக சைக்கிளில் செல்வது இருவருக்குமே பிடித்த ஒன்று. சில சமயம் எதுவும் வாங்காமல் வெட்டியாக திரும்புவதும் உண்டு. அதிலும் இந்த சரண்யா அடிக்கும் கூத்து இருக்கே. யாரிடமாவது சைக்கிளில் காலை ஊன்றிய படியே பேசிக் கொண்டிருக்கும் போது இறங்காமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து "இறங்கலாம்ல, குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருக்கே. " னு பாலன் திட்டினான்னு இன்னொரு நாள் சாலைக் கடக்க காலை ஊன்றிய நேரம் இறங்கி இருக்கிறாள். பார்க்காமலே ஜங்ஷன் வரை சென்று " பரணி சில்க் தானே போகணும்னு சொன்னே?" னு கேட்டா பதிலே காணோம். திரும்பிப் பார்த்தால் சைக்கிள் கேரியர் "நஹி சாப் " என்றது . பதைத்துப் போய் வந்த வழியில் திரும்பி வந்தால் சாவகாசமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள். " கூப்பிட்டு இருக்கலாம்ல " என்றால் " நான் சத்தம் போட்டு கூப்பிட்டேன் நீங்க தான் பார்க்காமலே போயிட்டீங்க. சரி எப்படியும் திரும்பி இங்கே தான வரணும்னு மெதுவா வந்திட்டிருந்தேன்" ங்கறா

அதை விடுங்க. நேற்று இரவு இப்படித்தான் இரண்டு பேரும் சைக்கிளை மெதுவா தள்ளிக்கிட்டு சின்ன எழுத்து a ஜோக் ஒன்றை பாலன் சொல்ல " எங்கே இருந்து தான் இதெல்லாம் கத்துக்கிட்டு வரீங்களோன்னு " சொல்றப்போ சரண்யா தன்னை ஒட்டினாற்போல் ஒரு பெண் நடந்து வருவதைப் பார்த்தாள். அவள் புடவை கட்டியதால் ஒரு பதினெட்டு வயது மதிக்கலாம். பாவாடை சட்டை போட்டிருந்தால் பதினைந்து தான். காதுகளில் சின்ன தங்கக் கம்மல். கழுத்தில் ஒரு மெல்லிய கவரிங் செயின். இயல்பான பாதுகாப்பு உணர்வில் தன் கைப்பையை தன்னோடு இறுக்கிக் கொண்டாள். தன் அபார்ட்மெண்டை நெருங்கும் போது தான் கவனித்தாள் அந்தப் பெண் பயந்தபடி சாலையின் எதிர் பக்கம் இருக்கும் ஒரு வாலிபனை பார்ப்பதை. " நான் அப்பவே நினைச்சேன் இரு வரேன்னு" பாலன் அந்த வாலிபனை நோக்கிச் சென்றான். அவன் கல்லூரி மாணவனைப் போல இருந்தான். கொஞ்சம் வசதியானவனைப் போல தெரிந்தது. பாலன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும் எட்டி நடை போட்டு சட்டென மறைந்தான்.

அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது திருச்சி தன் சொந்த ஊர் என்றும் ஒரு ஜட்ஜ் வீட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு பெண் கூட்டி வந்து தன்னை ஏமாற்றி வழியிலேயே இறங்கி விட்டதாகவும், தந்தை தன்னை "தண்டச் சோறு" என அடிக்கடி திட்டியதால் தான் வீட்டை விட்டு வந்ததாகவும், அந்த வாலிபன் காலையில் இருந்து தன்னை lodge க்கு வரச் சொல்லி தொல்லை தருவதாகவும் அழுது கொண்டேகூறினாள். சரண்யா பாலன் இருவருக்கும் தம் வீட்டில் வைத்து மறு நாள் திருச்சிக்கு பஸ் ஏற்றி விடத் திட்டம். ஆனால் அபார்ட்மென்டில் உள்ளவர்கள் ,
"அந்தப் பெண் திடீர்னு உங்க வீட்டில் தற்கொலை செய்திட்டா என்ன செய்வீங்க?" " பாலன் மேல் அபாண்டமா பழி போட்டுட்டா என்ன செய்வீங்க? "
ஏதாவது தப்பு தண்டா செய்திட்டு வந்திருந்தா போலிசுக்கு என்ன பதில் சொல்வீங்க "
" இப்பவே வெளியே அனுப்புங்க அது எப்படியாவது ஊருக்கு போய் சேரட்டும்" என்று ஆளுக்கொன்றாக சொன்னார்கள். சரண்யாவும் பாலனும் விடாப்பிடியாக மற்றவர்கள் சொன்னதை மறுத்து அந்தப் பெண்ணை தன் வீட்டுக்கு கூட்டிசென்றார்கள். மாடி ஏறும்போது சரண்யா " என்னங்க , ஒரு நாள் தானே, ரெண்டு பேறும் மாற்றி மாற்றி முழிச்சு அந்த பெண்ணை கண்காணிசிக்குவோம் விடிஞ்சதும் அந்த பெண்ணை திருச்சிக்கு பஸ் ஏற்றி விட்டுடலாம்." னு சொன்னாள்.

யோசிச்சு முடிக்கும் போது பனி மூட்டத்தை கஷ்டப்பட்டுக் கிழித்துக் கொண்டு வானில் சூரியன் பிரசவித்துக் கொண்டிருந்தான். முந்தைய நாளின் அலுப்பும் பயமும் துடைத்து விட்டது போல் நீங்கி இருக்க அந்த பெண் எழுந்து ஊருக்கு புறப்படத் தொடங்கியது சரண்யா பாலன் இருவரும் அந்த பெண்ணிடம் உலகம் எவ்வளவு ஆபத்து நிறைந்திருக்கிறதுன்னு சொல்லிக் கொண்டு வர புரிந்தது போல் தலையை அசைத்துக் கொண்டே வந்தது. அந்த பெண்ணின் கையில் செலவுக்கு காசு கொடுத்து, டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்த பாலன் டிரைவரிடம் " அண்ணே ! இந்த பொண்ணு திருச்சி போய் இறங்குதான்னு பார்த்துக்கங்க, வழியில இறங்கிடாம." னு சொல்லி பஸ் புறப்பட்டதும் சரண்யா கையை அழுந்தப் பிடித்துக் குலுக்கியபடி சொன்னான் " மகளிர் தின நல் வாழ்த்துக்கள்"

19 comments:

 1. மகளிர் தின நல் வாழ்த்துக்கள்..
  கதையும் அருமை....
  தங்கத்தை பாதுகாக்க தகர பெட்டி தேவையாய் இருக்கிறது..!

  ReplyDelete
 2. தகரப் பெட்டியிடம் இருந்து தான் சிவா காப்பாற்ற வேண்டி இருக்கிறது. எல்லா ஆண்களும் மோசமானவர்கள் அல்ல என சொல்ல வந்தேன். இது கதையல்ல நிஜம்

  ReplyDelete
 3. மிக அருமை செல்ல நாய்க்குட்டி மனசு மகளிர் தின வாழ்த்துக்களுடன் அருமையாய் ஒரு கவிதை

  ReplyDelete
 4. நல்ல கதை...

  -
  DREAMER

  ReplyDelete
 5. நன்றி தேனம்மை, கவிதைகளில் கலக்குறீங்க போலிருக்கு

  ReplyDelete
 6. nandri dreamer sir, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக !

  ReplyDelete
 7. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!
  :)

  ReplyDelete
 8. கதை அருமை...

  -அகல்விளக்கு...

  ReplyDelete
 9. நன்றி மணிகண்டன். இந்த வருடம் ஸ்பெஷல் மகளிர் தினம், 33% pass ஆயாச்சே. என் பெயர் வந்து சேர்ந்ததா?

  ReplyDelete
 10. நன்றி பின்னோக்கி, ஏதாவது ஆலோசனை சொல்லி இருக்கலாமே? நீங்க சொன்ன நினைவில் தான் பத்தி பிரித்தேன். நன்றி

  ReplyDelete
 11. ந‌ல்லாயிருக்கு:)

  ஆனா, அபார்ட்மெண்ட்டில் வ‌சிப்ப‌வ‌ர் சைக்கிளில் செல்வ‌துதான் கொஞ்ச‌ம் நெருட‌லா இருக்கு

  ReplyDelete
 12. கதை உண்மையில் நடந்தது போல் இருக்கிறது
  கதை சொல்லிய விதம் ரசிக்கும் படி இருந்தது


  hmmmm. முதல் கதையிலே முதல் பரிசு வாங்கினிங்க. உங்க எழுத்து நல்லா இல்லாம இருக்குமா என்ன...? ;)

  ReplyDelete
 13. ரகு தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. appartment நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ரகு, மிடில் கிளாஸ் க்காக உள்ளது. நீங்க சொல்ற appartment இல என்ன நடந்தாலும் என்னன்னு கேட்க மாட்டங்களே .

  ReplyDelete
 14. கதை உண்மையிலேயே நடந்தது தான். அதனால தான் twists and turns இல்லாம இயல்பா இருக்குது கதை. நன்றி ssr

  ReplyDelete
 15. வந்து சேர்ந்ததுங்க மேடம்.. நன்றி.. :)

  ReplyDelete
 16. உதவும் உள்ளம் படைத்த தம்பதிகள் பாராட்டுக்குரியவர்கள்...எழுத்து நடை நல்லா இருக்கு..

  ReplyDelete
 17. நன்றி கண்ணகி தங்கள் வருகைக்கு
  சில விஷயங்கள் தெளிவு படுத்தப் படாமலே கடந்து விடுகின்றன. அந்தப் பெண் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்தாளா என்பது இன்னும் பதில் கிடைக்காத ஒரு கேள்வி.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!