Bio Data !!

22 March, 2010

தண்ணீ !! தண்ணீ !!

குடி நீருக்கு பயங்கரமான தட்டுப்பாடு வரப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி தான் அறிவிக்கப் பட்டுள்ள "World Water Day"

கடலைப் பற்றி ஒரு கவிஞர் சொன்னது "Water water everywhere , not a drop to drink" தான் நினைவிற்கு வருகிறது. ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு வரப் போகிறது என்றால் அது இல்லாமல் போவது. இது அப்படி இல்லை இருந்தும் பயனற்றுப் போவது. நீரின் தரம் இழந்து போவது.

நாம் இது வரை நீரின் உபயோகம் என்ன என்று கேட்டால் குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க என ஐந்தாம் வகுப்பு மாணவனைப் போல பதில் சொல்வோம். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கீழே நான் கொடுத்துள்ளதைப் பார்க்காமல் பதில் சொல்லவும்.

" நம் உடலின் எந்தெந்த பாகங்களில் நீர் எவ்வளவு இருக்கிறது?"
எல்லோருக்கும் முதலில் தோன்றும் பதில் சிறு நீரகம் தான். ஆனால்

இரத்தத்தில் 83%
தசைகளில் 75%
எலும்புகளில் 22% (!!!)
ஒரு பெண்ணின் உடலில் 55% இலிருந்து 65% அதுவே ஆணின் உடம்பானால் 65% இலிருந்து 75% நீர் இருக்கிறது .

நாம் வழக்கமாக தாகம் தணிக்க தண்ணீர் குடிப்போம். ஆனால் 'உடலின் தேவைக்கு உரிய நீரின் அளவு குறைகிறது, தணித்துக்கொள்' என்னும் அறிவிப்பு மணி தான் தாகம். ஆனால் நம் உடலின் நீர்த்தேவை பூர்த்தி அடையும் முன்பே தாகம் தணிகிறது. தேவையான நீரை உட் கொள்ளாத போது தான் மலச்சிக்கல் உண்டாகிறது. அத்தனை வியாதிகளின் ஆரம்பப் புள்ளி மலச்சிக்கல் தான்.


இரத்தத்தில் எதற்காக நீர். ஏதாவது ஒரு உறுப்பு காயம் பட்டால் உடனடியாக படை வீரர்களாய் நோய் எதிர்ப்பு செல்கள் அங்கு குமியும் என்பது நமக்கு தெரியும். அதை குரியர் சர்வீஸ் போல உடனடியாக கொண்டு சேர்க்கத் தான் இரத்தத்தில் நீர். தாயின் வயிற்றில் கருவுக்கு ஒரு மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தருவதும் நீர் தான். கருவுற்ற தாய்க்கும் பாலூட்டும் பெண்களுக்கும் நீரின் தேவை அதிகம். இந்தக் கொளுத்தும் வெயிலில் பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு பாலூட்டலுக்கும் இடையில் தண்ணீர் தரத் தயங்காதீர்கள்.

உணவுக்கு இடையே தண்ணீ குடிக்காதே என்பது வழக்கமான கண்டிப்பு. ஜீரண நீரை நீர்த்து போகச் செய்து ஜீரனத்தைக் குறைக்கும் என்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தேவையான உணவு எடுக்கும் முன்பே வயிறு நிறைந்தது போல் உணர்வைக் கொடுக்கும். இது யாருக்கு உபயோகம்னு கண்டு பிடிங்க பார்க்கலாம். Right .உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள் உணவின் நடுவே நீர் அருந்துவது எடுக்கும் உணவின் அளவைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். மாரத்தான் நெடும் ஓட்டத்தில் நீர் பற்றாக்குறையால் மரணங்கள் கூட நிகழ்வது உண்டு.

நான் ரொம்ப பயப்படுற ஒரு விஷயம் சுட்டெரிக்கும் சூரியனில் வெளியே பயணம். அதிக பட்ச நேரம் அலுவலகத்தில் AC யில் இருப்பதாலோ என்னவோ வெயில் பட்டால் உடல் எரியும். அதற்கு நான் கண்டு பிடித்துள்ள வழி "வரு முன் காப்போம்' தான். தாகம் எடுத்த பின் தண்ணீர் அருந்துவதில்லை. வெளியே கிளம்பும் முன் தேவையான தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். இடையில் தேவைப்பட்டால் கொஞ்சம் குடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின் வெயிலினால் இழந்த நீரை சமன் செய்து கொள்ள வேண்டும்.

எல்லாம் சரி. இதெல்லாம் நல்லாப் போகணும்னா நீரின் தரத்தைக் காக்க வேண்டும். செய்வோம். நீரின் தரத்தைக் காப்பதைப் பற்றி நிறைய பேர் எழுதிட்டதால இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம்.

21 comments:

 1. //இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். //
  க‌ண்டிப்பா வித்தியாச‌ம் தான்.. புள்ளி விப‌ர‌ங்க‌ள‌ அருமை..

  ReplyDelete
 2. இந்நாளில் பதிவர்கள் அனைவரும் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்துவது மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்... நீரைப்பற்றி நீங்க சொன்ன இவ்வளவு விஷயங்களைப் படித்தும், ஆச்சர்யமாகவும், நீரின்றி அமையாது உலகு-ன்னு எப்பவோ எழுதிட்டு போன வள்ளுவரை ஞாபகப்படுத்தி மலைக்க வைக்கிறது.

  பகிர்வுக்கு நன்றி!

  -
  DREAMER

  ReplyDelete
 4. இதெல்லாம் நல்லாப் போகணும்னா நீரின் தரத்தைக் காக்க வேண்டும். செய்வோம். நீரின் தரத்தைக் காப்பதைப் பற்றி நிறைய பேர் எழுதிட்டதால இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம்.


  ........நிச்சயமாக, வித்தியாசமாக சிந்தித்து எழுதப்பட்ட பதிவு.

  ReplyDelete
 5. காலத்திற்கு ஏற்ற பதிவு.. சில கருத்துக்கள் பல வகையில் உதவும்..

  ReplyDelete
 6. தண்ணீரைப் பொறுத்த வரையில் ஏதோ சிக்கல் வரப் போகுதுன்னு தெரியுது. ஆனால் அதோட தீவிரம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. நன்றி தமிழ்

  ReplyDelete
 7. நன்றி ட்ரீமர் (தருமர்)

  ReplyDelete
 8. நன்றி சித்ரா , ஏதோ நம்மாலானது

  ReplyDelete
 9. நாய்க்குட்டி மனசு நல்ல வித்யாசமான பதிவு எல்லோரும் சேமியுங்க எனும்போது நீங்க தேவையான அளவு அருந்தச்சொல்வது சிறப்புதான் நல்ல பகிர்வு பாராட்டுக்கள்

  ReplyDelete
 10. தண்ணீர் தான் மிகச் சிறந்த சத்து பானம்னு ஒரு இடத்தில படித்தேன். அந்த தண்ணீருக்கே ஆபத்து என்னும் போது கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 11. //இரத்தத்தில் 83%
  தசைகளில் 75%
  எலும்புகளில் 22% (!!!)
  ஒரு பெண்ணின் உடலில் 55% இலிருந்து 65% அதுவே ஆணின் உடம்பானால் 65% இலிருந்து 75% நீர் இருக்கிறது .//


  நல்ல மேடரா இருக்கே, (நம்ம கேப்டன்னுக்கு நீங்கதான் புள்ளிவெவரம் தர்ரிகளோ)

  ReplyDelete
 12. தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக.
  மதுரைக்காரவுக எங்க பக்கத்தூர்க்காரவுக . அதனால வந்திருக்குமோ ...
  எங்க ஊர்ல என்ன செஞ்சாலும் அசையாது இருக்கிறவகள மங்குனி னு சொல்வோம். நீங்க எப்படி?

  ReplyDelete
 13. //நாய்க்குட்டி மனசு said...
  தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக.
  மதுரைக்காரவுக எங்க பக்கத்தூர்க்காரவுக . அதனால வந்திருக்குமோ ...
  எங்க ஊர்ல என்ன செஞ்சாலும் அசையாது இருக்கிறவகள மங்குனி னு சொல்வோம். நீங்க எப்படி?//

  நாங்களும் உங்க பக்கத்து ஊருதேன் ,
  உங்க ஊர்ல மன்குனிய அவ்ளோ பெருமையாவ சொல்லுவாக

  ReplyDelete
 14. ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ள், ஆக்சுவ‌லா ஒரு ம‌னுஷ‌ன் தின‌மும் ச‌ராச‌ரியா 6 லிட்ட‌ர் த‌ண்ணி குடிக்க‌ணும்னு சொல்லுவாங்க‌.....ஆனா எங்க‌ முடியுது? அட்லீஸ்ட் 4 லிட்ட‌ராவ‌து குடிக்க‌ணும்!

  ReplyDelete
 15. ஒரு சின்ன திருத்தம் ரகு. ஆறு லிட்டர் 'சுத்தமான' தண்ணீர் குடிக்கணும். அது தான் சிக்கலே. அத்தனை வியாதிகளும் நீரிலிருந்து தான் ஆரம்பிக்கின்றன.

  ReplyDelete
 16. பயனுள்ள தகவல். நன்றி. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது.

  ReplyDelete
 17. நன்றி மன்னார்குடி, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
  தொடர்ந்து வாருங்கள்,
  நீங்கள் சொன்ன தகவல் நிறைய பேருக்கு தெரிந்திருக்குமேனு விட்டுட்டேன்.

  ReplyDelete
 18. மிக அருமையான கட்டுரை..

  தெளிவான புள்ளி விவரங்களுடன் தகவல்கள்..

  நானும் அதிகத் தண்ணீர் குடிக்கிறேன்.. அலுவலகத்தில் இருக்கும்போது.

  ஆனால் வீட்டில் வந்தால் அந்த எண்ணமே இருப்பதில்லை. நல்ல சுத்தமான பாத்திரத்தில் கண்ணுக்குத் தெரியும்படி தண்ணீரை வைத்தாலே போதும். அடிக்கடி எடுத்து குடிக்கத் தோணும்...

  உங்க அளவுக்கு எழுத முடியாது.. இருந்தாலும் என்னுடைய சின்ன பதிவையும் வந்து பாருங்கள்..

  நன்றி...

  ReplyDelete
 19. அக்கா, ரொம்ப நல்ல தஹவல்கள். தீரமான ஆராய்ச்சி மட்டும் இன்றி வாசிக்க ரொம்ப intersting-a எழுதுனதுக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!