Bio Data !!

07 April, 2010

தொலைபேசி திருமணம் !

பிரபல வெளி நாட்டு கிரிக்கெட் வீரருக்கும், டென்னிஸ் வீராங்கனைக்கும் திருமணம் என்ற அறிவிப்பு வருகிறது. உடனே ஒரு பெண் அந்த விளையாட்டு வீரர் ஏற்கனவே என்னைத் திருமணம் முடித்திருப்பதால் என்னை விவாகரத்து செய்த பின் அந்த திருமணம் நடக்க வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்கிறார். அது பொய்யான செய்தி நாங்கள் தொலைபேசித் திருமணம் செய்யவில்லை என்று அடித்துக் கூறுகிறார் வீரர்.

இந்த இடத்தில் அது என்ன தொலைபேசித் திருமணம்? வெளி நாட்டில் பணி புரிந்து தன் திருமணத்துக்கே (!) வர முடியாத சந்தர்ப்பத்தில் உதவிக்கு வருகிறது இந்த தொலைபேசி திருமணம். எப்படியும் குடும்பம் நடத்த நேரில் தான் வரவேண்டும். தொலைபேசியில் இயலாதது அது. அப்படி இருக்க நேரில் வரும்போது திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே?


'என்னுடன் திருமணம் முடித்ததற்கும் ஹைதராபாதில் வாழ்ந்ததற்கும் என்னிடம் சாட்சி இருக்கிறது ' என்று அந்தப் பெண் விடாப் பிடியாய் நின்றதும் இறங்கி இருக்கிறது 'சமூகம்' ( எதற்ககெல்லாம் தான் சாட்சி தயார் செய்வது. )


தான் திருமணம் செய்ததை ஒத்துக் கொண்டு விவாகரத்து செய்த பின் சானியாவை மணம் முடிக்கிறேன் என்று சம்மதித்துள்ளார். மிகப் பெரிய இடம் என்றதும் பதறி விரைவில் மணம் முடித்து விடுகிறோம். அதன் பின் எத்தனை சிக்கல்கள். எத்தனை வேதனைகள்.

திருமணம் என்று வரும்போது பணத்துக்கு இரண்டாம் இடம் தருவோம்

எங்கள் நெல்லையில் நடந்த ஒரு செய்தி.
நண்பர்களுடன் கன்யாகுமரி பார்த்து விட்டு அன்று மாலையே வந்து விடுவதாக சொல்லிச் சென்ற பெண் மாலையாகியும் வரவில்லை. பெற்றவர்கள் சென்று பல இடங்களிலும் தேடி வீட்டுக்கு வந்து தந்தை, தாய் , ஒரு teenage மகன் மூவரும் தற்கொலை செய்து விட்டார்கள், காவல் துறைக்கு ஒரு கடிதத்துடன். தங்கள் சொத்தை தேடிச் சென்ற அந்த மகளுக்கு மாற்றி விடும் படி.
அந்தப் பெண்ணைப் பற்றிய எதோ ஒரு செய்தி அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. குடும்பம் குடும்பமாக சாவது இப்போது அதிகரித்துள்ளது. விரும்பத்தகாத வகையில் ஏதும் நடந்தால் அவளை ஒதுக்கி வையுங்கள். காலம் காயத்தை ஆற்றும் போது அவளுடன் சேர்ந்து விடலாம். அதை விடுத்து அவளை காலமெல்லாம் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் இந்த செயல் தேவை தானா?

கர்ப்பவாய் கான்சருக்கான மருந்தை , ஒரு அந்நிய நாட்டுடன் இணைந்த கம்பெனி ஏழைப் பெண்களுக்கு கொடுத்து பரிசோதித்ததில் நூற்று இருபது பேர் பாதகமான விளைவுகளுக்கு உள்ளாகி உள்ளனர். நான்கு பெண்கள் சாவைச் சந்தித்துள்ளனர். பெண்ணே உன் போராட்டம் வறுமையோடு மட்டும் அல்ல.

தொடர்ந்து பெண்களைப் பாதிக்கும் செய்தியாக பார்த்ததால் இந்த பதிவு. உங்கள் பலவீனங்களை பாம்புச் சட்டையாய் உரித்து புது உயிர் கொள்ளுங்கள் பெண்களே.

23 comments:

 1. நாம் ஆயிரம் சொன்னாலும், பெண்கள் தங்களை உணர வேண்டும். இல்லையேல் சொல்வதனால் எந்த புரியோஜனமும் விளையப் போவதில்லை, பெற்றவர்களின் வளர்ப்பில், அவர்களின் நடத்தையில் நிறைய விஷயங்கள் உள்ளன.

  ReplyDelete
 2. பெண்ணே உன் போராட்டம் வறுமையோடு மட்டும் அல்ல. .....true. Be smart!

  ReplyDelete
 3. //உங்கள் பலவீனங்களை பாம்புச் சட்டையாய் உரித்து புது உயிர் கொள்ளுங்கள் பெண்களே. ///
  அருமையான‌ வ‌ரிக‌ள்..

  ReplyDelete
 4. அப்படி இல்லை தமிழ் , அறியாமல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம் பேர் இருப்பார்கள் . மறுபடியும் மறுபடியும் சொல்லும்போது சிலராவது தப்பிப்பார்களே
  என்ற நல் எண்ணம் தான் .

  ReplyDelete
 5. நன்றி சித்ரா, செல்போன் கிடைத்ததா?

  ReplyDelete
 6. நன்றி நாடோடி, நாம் ரசித்து எழுதும் வரிகள் ரசிக்கப்படும் போது கிடைக்கும் சந்தோஷமே தனி தான்.

  ReplyDelete
 7. ரொம்ப வேதனையான விஷயங்கள் ஒவ்வொண்ணும். :(

  ReplyDelete
 8. உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்

  ReplyDelete
 9. நன்றி விக்னேஸ்வரி, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

  ReplyDelete
 10. உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

  பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

  ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

  நன்றி
  தமிழ்10.காம் குழுவினர்

  ReplyDelete
 11. நன்றி பார்வையாளன்
  நன்றி தமிழினி, சேர்ந்திடுவோம்

  ReplyDelete
 12. //அதை விடுத்து அவளை காலமெல்லாம் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் இந்த செயல் தேவை தானா?
  //


  தண்டனை கொடுக்குறாங்களாமா?
  வித்தியாசமான சிந்தனை. குறிப்பாக வழக்கமான இலக்கிய அழுகாச்சி இல்லாமல் யதார்த்த சிந்தனை.

  ReplyDelete
 13. தொலை பேசியிலே , விவாகரத்து செய்யும் கொடுமையும் இருக்கிறது

  ReplyDelete
 14. நன்றி விசா , தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
  எனது சந்தேகக் கேடு கதை படிச்சிட்டு ஒரு பின்.. போடுங்களேன், ப்ளீஸ்.

  ReplyDelete
 15. //உங்கள் பலவீனங்களை பாம்புச் சட்டையாய் உரித்து புது உயிர் கொள்ளுங்கள் பெண்களே//

  Romba nalla padhivu.. vazhthukkal.. :)

  ReplyDelete
 16. நன்றி ஆனந்தி, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

  ReplyDelete
 17. பெண்ணே உன் போராட்டம் வறுமையோடு மட்டும் அல்ல. ..... ஆம் ராஜ் பெண்கள் எல்லாவற்றோடும் போராட வேண்டி இருக்கிறது

  ReplyDelete
 18. //ஒரு அந்நிய நாட்டுடன் இணைந்த கம்பெனி ஏழைப் பெண்களுக்கு கொடுத்து பரிசோதித்ததில்//

  இதென்ன‌ங்க‌ அநியாய‌ம்! ஏதோ லேப்ல‌ பூச்சிங்க‌ள‌‌ வெச்சு ப‌ரிசோத‌னை ப‌ண்ற‌ மாதிரி.....ரொம்ப‌வும் வ‌ருத்த‌மான‌ விஷய‌ம் :(

  ReplyDelete
 19. நன்றி தேனம்மை, ஆண்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட அவர்களது ஒரு easy going life தான்

  ReplyDelete
 20. நன்றி மணிகண்டன், சந்தேகக் கேடு கதை முடிவு படித்தீங்களா?

  ReplyDelete
 21. எப்படியோ ஆரம்பித்து அக்கபோர் பேசாமல் - எழுதாமல், அழுத்தமாக சொல்லிய கருத்துக்களுக்கு ஒரு சபாஷ் ! ! !

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!