Bio Data !!

22 June, 2010

அல்வா தின்னக் கூலி

கேபிள் சங்கர் ஜி  தன் பதிவில் செல் போன் கம்பெனியாளர்கள் வாடிக்கையாளர்களை மதித்து நடந்து கொள்வதில்லை என்று எழுதியதைப் பார்த்ததும் எனக்குள் கொசுவத்தி சுத்தி  நானும் ஒரு பதிவு போட்டேன் " வாடிக்கையாளர் சேவை மையம்" என்று.
அது எழுதிய கை முகூர்த்தம் (சொன்னது நடந்தா வாய் முகூர்த்தம்; எழுதியது நடந்தால் கை முகூர்த்தம் தானே) நான் பணி மாற்றம் செய்யப் பட்டேன். ஆனால் எனக்கு பிடித்த வாடிக்கையாளர் சேவை மையம் (பொறுப்பு )  நான்கு இடங்களில் நான்கு மையங்கள். நான்கையும் நன்கு செயல் படுவதை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. சுவைக்க அல்வா வும் கொடுத்து அது தின்னக் கூலியும்  கொடுக்கிறார்கள்.

சிலர் என்னிடம் கேட்டார்கள் "இப்பொழுது மிக முக்கியமாக உள்ள பிராட் பாண்டில் இருந்து மாறி விட்டீர்களே வருத்தமாக இல்லையா ?"
" இல்லவே இல்லை. நான் பணி புரியும் இடம் எதுவாக இருந்தாலும் அது எனக்கு முக்கியமான இடம் தான். கோப்புகளுடனும் இயந்திரங்களுடனும் இயங்கிக் கொண்டு இருந்த நான் உயிருள்ள மனிதர்களுடன் இயங்கப் போகிறேன் .  அது ஒரு விதமான புத்துணர்வைத் தான் தருகிறது. "

பொறுப்பை எடுத்ததும் ஒரு அனுபவம். இன்று அலுவலகத்துக்கு ஒரு இளைஞன் ஒரு பெரிய புத்தகக் கட்டோடு வந்தான். இந்த மாதம் வந்த தொலைபேசி பில்லில் அதிகமாக பிடித்து விட்டார்களோ என்று சந்தேகம். பில் செய்யும் சிஸ்டத்தில் ஒரு மாற்றம் செய்வதால் அந்த சந்தேகம். அந்த புத்தகக் கட்டை என் முன் விரித்தான். தொலை பேசி பில்கள் அழகாக அடுக்கப் பட்டு புத்தக வடிவில். " இங்க பாருங்க மேடம், 1993 இல் தொலை பேசி வாங்கினோம் முதல் பில்லில் இருந்து இன்று வரை நான் சேர்த்து வைத்து இருக்கிறேன். ஒரு தடவையும் பில் கட்ட தாமதம் ஆனது கிடையாது. "

 எனக்கு பிரமிப்பு. அவனைப் பாராட்ட வேண்டும் என்று விருப்பம். எப்படி எடுத்துக் கொள்வானோ? நான் சொல்லும் ஒவ்வொரு பதிலுக்கும் மாற்றுக் கேள்வி கேட்டான். அந்த கண்கள் " என்னை ஏமாற்ற முடியாது? என்றன.

இறுதியில் போன மாதம் பாக்கி என்று சொல்லி இருந்தாலும் அடுத்த கட்டத்திலேயே அந்த தொகை வரவு எடுக்கப் பட்டதைக் காட்டி, இரண்டு பில்களிலும் அடுத்தடுத்த மாதங்கள் வந்து இருப்பதை விளக்கி இன்னும் அவனது சந்தேகங்கள் அனைத்தையும்  விளக்கிய உடன் திருப்தியானவனாக "சந்தேகத்தை தெளிவு படுத்தி விடுவது நல்லது தானே. அதான் வந்தேன்." என்றான். எனக்கு ஏனோ சிவசு வாத்தியார் நினைவுக்கு வந்தார்.

இளைய வயதில் அவனது முதிர்ந்த நடவடிக்கை எனக்கு சந்தோஷத்தை தந்தது.  இந்த பணி எனக்கு பல அனுபவங்களையும் உங்களுக்கு பல பதிவுகளையும் தரும் என்று நம்புகிறேன்.

காத்திருங்கள்.

29 comments:

 1. காத்திருக்கிறேன்:). தலைப்பு தான் பின்னூட்டம்:))

  ReplyDelete
 2. முதல் தேதியே கரண்ட் பில் கட்டுபவர்கள், போன் பில் கட்டுபவர்கள், வாடகை பணம் கொடுப்பவர்கள்... இவர்களில் யாரையும் நாம் அலைகழித்து விடக்கூடாது.

  ReplyDelete
 3. இளைய வயதில் அவனது முதிர்ந்த நடவடிக்கை எனக்கு சந்தோஷத்தை தந்தது. இந்த பணி எனக்கு பல அனுபவங்களையும் உங்களுக்கு பல பதிவுகளையும் தரும் என்று நம்புகிறேன்.


  ..... nice..... Keep rocking!

  ReplyDelete
 4. சுவையான பின்னூட்டம் வானம்பாடிகள் ஐயா

  ReplyDelete
 5. முதல் தேதி மட்டும் அல்ல தமிழ், பணம் கட்டுபவர்கள் யாரையும் அலைக்கழித்து விடக் கூடாது என நினைக்கிறேன். சில இடங்களில் அது செயல் படுவதில்லை. நன்றி தமிழ்

  ReplyDelete
 6. நன்றி சித்ரா, profile ல போட்டோ மாற்றிகிட்டே இருக்கிற மாதிரி இருக்கு, மாறாத ஒன்று மாற்றம் மட்டுமே

  ReplyDelete
 7. தமிழ் உதயம் சொன்னது ரிப்பீட்டு அருமை.. ராஜ்

  ReplyDelete
 8. அனுபவத்தை அழகாக பகிர்ந்து கொண்டுள்ளீர்..
  ரொம்ப கேள்வி கேட்டா சிலர் கோபித்து கொள்கிறார்கள்...

  ReplyDelete
 9. அவ்வளவும் அனுபவம்
  எவ்வளவும் கொடுத்தாலும் கிடைக்காது ....அதாங்க கா...சு

  நல்ல பகிர்வு..

  எனக்கு ஏனோ சிவசு வாத்தியார் நினைவுக்கு வந்தார்.

  இளைய வயதில் அவனது முதிர்ந்த நடவடிக்கை எனக்கு சந்தோஷத்தை தந்தது. இந்த பணி எனக்கு பல அனுபவங்களையும் உங்களுக்கு பல பதிவுகளையும் தரும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 10. தலைப்பே வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்கள் :). முதல் அனுபவமே அருமை. காத்திருக்கிறோம் அனுபவத்திற்கு.

  ReplyDelete
 11. அது ஒரு விதமான புத்துணர்வைத் தான் தருகிறது. "

  செய்யும் வேலையை ரசித்து செய்பவர்களை பார்ப்பது அரிதாக உள்ளது....

  மக்கள் தொடர்ப்பு பணியில் இருப்பவர்களுக்கு , இந்த ஆர்ர்வம் மிகவும் அவசியம்.. அதுதான், அவர்கள் சார்ந்த நிறுவனத்துக்கு நற்பெயர் வாங்கி தரும்...

  நல்ல பதிவு... தொடருங்கள்.

  ReplyDelete
 12. பிடித்த‌ பிரிவில் வேலை என்றால் , ம‌ன‌துக்குள் ஒருவ‌கை ச‌ந்தோச‌ம் தான்.. வாழ்த்துக்க‌ள்... அப்ப‌ உங்க‌ளிட‌ம் இருந்து ப‌ல‌ ப‌திவுக‌ளை எதிர்பார்க்க‌லாம்...

  ReplyDelete
 13. தங்களிடமிருந்து இதுபோன்று நிறைய கட்டுரைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..!

  ReplyDelete
 14. தமிழ் வெங்கட், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. சந்தாதாரர்களை சந்திக்கும் இடத்தில் கோபம் தள்ளி வைக்கப் பட வேண்டிய ஒன்று.

  ReplyDelete
 15. செந்தில்குமார் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
  எனது பதிவின் பகுதிகளே பின்னூட்டமாய்.
  நன்றி செந்தில்

  ReplyDelete
 16. நன்றி பின்னோக்கி,
  பதிவு எழுதும் போது தலைப்பு capturing ஆ வந்திட்டா ரொம்ப சந்தோஷம் ஆகிடும். இதுவும் அப்படித்தான்.

  ReplyDelete
 17. அந்த இளைஞன் , நான் அல்ல

  ReplyDelete
 18. அந்தக் காலத்தில் திருநவேலியின் லாலாக்கடைகளில், அல்வா வாங்கி அங்கேயே சாப்பிடுவோம், கை துடைக்க துண்டுப் பேப்பரும், அதில் ஒரு குத்து மிக்சரும் தருவார்கள்...சந்திப் பிள்ளையார் கோயில் முக்கு சங்கரன் பிள்ள லாலாக்கடையிலென்றால்...”இந்தாரும் வேய் பேரப்பிள்ளை..வாய்ப்புணுக்கு நல்லது..என்று அல்வாவை தாம்பாளத்தின் உள் ஓரத்தில் தேங்கியிருக்கும் நெய்யில் தோய்த்துத் தருவார்..இப்பல்லாம்..இனிப்பு பக்கமே போகமுடியலை...

  ReplyDelete
 19. சிவாஜி சங்கர் சொன்னது :)
  நாய்க்குட்டி மனசு சொல்றது (:

  ReplyDelete
 20. பார்வையாளன், எப்போதுமே என்னை ஊக்குவிக்கும் விதமாக நீங்கள் எழுதும் பின்னூட்டத்திற்கு நன்றி.
  //அந்த இளைஞன் நான் அல்ல//
  !!!

  ReplyDelete
 21. பிடித்த பிரிவில் வேலை தான் " அல்வா தின்னக் கூலி" நாடோடி.

  ReplyDelete
 22. பிரவீன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
  நிறைய எழுத முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 23. கலாப்பிரியா சார், இந்த அல்வாவைப் போல tempting சமாசாரம் வேற எதுவுமே கிடையாது. எங்க தாத்தா 92 வயதில் இறந்தாங்க. இறக்கும் வரை காலை சாப்பாட்டோட ஒரு துண்டு அல்வா.
  எனக்கு ரெண்டு ஆச்சரியம் ஒண்ணு அந்த வயதில் அல்வா எப்படி செரிமானம் ஆகிறது. ரெண்டு ஒரு துண்டோட எப்படி முடிக்க முடிகிறது.

  ReplyDelete
 24. நல்ல பகிர்வுங்க....

  "இப்பொழுது மிக முக்கியமாக உள்ள பிராட் பாண்டில் இருந்து மாறி விட்டீர்களே வருத்தமாக இல்லையா ?"
  " இல்லவே இல்லை. நான் பணி புரியும் இடம் எதுவாக இருந்தாலும் அது எனக்கு முக்கியமான இடம் தான். கோப்புகளுடனும் இயந்திரங்களுடனும் இயங்கிக் கொண்டு இருந்த நான் உயிருள்ள மனிதர்களுடன் இயங்கப் போகிறேன் . அது ஒரு விதமான புத்துணர்வைத் தான் தருகிறது//

  இருக்கும் இடத்தையே தனக்கு சாதகமாக மாற்றும் திறன் வேண்டும்.

  ReplyDelete
 25. இருக்கும் இடத்தை மட்டும் அல்ல கருணாகரசு, நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்கான விஷயங்களை எடுத்துக் கொள்வேன். வாழ்வின் சிக்கல்கள் பல அப்படித்தான் தீர்கின்றன

  ReplyDelete
 26. ஆசான் துட்டு விசயத்துல கொஞ்சம் கராரு போலருக்கு!...:)

  ReplyDelete
 27. தக்குடு பாண்டி அதேயாணு.
  தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. தொடர்ந்து வருகை தாருங்கள் .

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!