Bio Data !!

15 August, 2010

எண்ணச் சிதறல்கள் !!

ஓவியர் புகழேந்தி யின் ஓவியக் கண்காட்சி நெல்லை சகுந்தலா ஹோட்டல் ஒட்டி உள்ள ஒரு அறையில் போடப் பட்டுள்ளது போர் முகங்கள் என்ற தலைப்பில்.   அது ஈழ நிலையை எடுத்து இயம்பும் ஓவியங்கள் என்றதும், போகலாம் என்று எண்ணம். மூன்று மணிக்கு தொடங்கிய அலுவலக மீட்டிங் முடிய நேரமாகியதால் ஒரு சின்ன தடுமாற்றம். வேகமா ஒரு பார்வை பார்த்திட்டு ஓடி வந்திடலாம்னு போனேன். திரு வை. கோ அவர்களால் திறந்து 'வை' க்கப் பட்ட கண்காட்சி. 

ஓவியர் புகழேந்தி சென்னை ஓவியக் கல்லூரியின் ஆசிரியர். 
ஓவியங்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தை உலுக்குபவை.
ஓவியத்தின் அருகில் சின்ன சதுரக் காகிதத்தில் கவிதை வரிகள். 
நான் ரசித்த ஓவியங்களை விவரிக்கத்தான் முடியும். கவிதை வரிகளை அப்படியே தருகிறேன்.

ஒரு பெண் ஒரு முலை அறுந்த நிலையில் அமர்ந்திருக்கிறாள். அருகில் சில முலைகள். 
கவிதை: 
                                    "இனவெறி தனது 
                                கால் வைக்கும் இடமெல்லாம 
                                மிதிபட்டுக் கசியும் 
                                   தாயின் முலைகள்."   

மற்றுமோர் கவிதை :
"விழ விழ எழுவோம்,
வீழும் அருவி 
ஆறாய் விரியும்."
இது ஈழப் போராளி பற்றியது மட்டும் அல்ல நமக்கும் தன்னம்பிக்கை தரும் வரிகள். 

பிரபாகரனை அழகாக வரைந்த ஒரு ஓவியம். கருப்பு வெள்ளையில் பிரபாகரனை ஒரு ஓவியம் வரைந்து இருந்தார்.கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். அவ்வளவு அழகு. ஓவியமும், பிரபாகரனும். 

கொலைக் கயிறுகள் என்ற தலைப்பில் ஒரு தூக்குக் கயிற்றில்  மாட்டிக் கொண்ட ஒரு மனிதனின் படம், 
கவிதை:
                                                "மறுதலிக்கப்படுகின்றது
                                                இயல்பான வாழ்வு மட்டுமன்றி 
                                                 இயல்பான சாவும் "                          
படம் :
செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு துப்பாக்கியின் உச்சியில் ஒரு அமைதிப் புறா, 
 கவிதை :
                                                   "அமைதி 
                                                   ஒரு நாள் 
                                                  துப்பாக்கியைச் சுடும்"
கண்காட்சி முடியும் இடத்தில் கனத்த நம் இதயத்தை கலகலப் பாக்க ஒரு கவிதை,
                                                "விடுதலைக்கும் 
                                                 மரணத்துக்குமான
                                                இடைவெளியில் 
                                                பனை மரமே! 
                                               உன் வேர்களுக்கும்
                                              குருத்துகளுக்கும் 
                                             இந்தா என் இசை" 
சாகும் நொடி வரை அடுத்தவரை மகிழ்விக்க நினைக்கும் அழகான மனது. 

ஓவியங்கள் ஒவ்வொன்றும் சட்டமிடப் பட்டு அலங்கரித்தன. அவற்றில் ஒரு வரிசை முழுவதும் கருப்பு வெள்ளை ஓவியங்கள். அந்தக் கால கருப்பு வெள்ளை புகைப் படங்களை நினைவூட்டின. எனக்கு ஓவியங்கள் பற்றிய அறிவு,  ரொம்ப அதிகம்  ஒன்றும் இல்லை என்ற காரணத்தால், ஒன்று மட்டுமே சொல்ல முடிகிறது. "அருமையாய் இருந்தன" இன்னும் ஈழத்தின் பாதிப்பில் இருந்து வெளி வர முடியவில்லை. முக்கியமான ஊர்களில்  கண் காட்சி நடத்தி வருகிறார்கள். உங்கள் ஊருக்கு வந்தால் மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

9 comments:

 1. என‌க்கு ஓவிய‌ங்க‌ள் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு உண்டு... நானும் ஒரு கால‌த்தில் கிறுக்கினேன், உங்க‌ளின் பார்வையில் உள்ள‌ ப‌கிர்வுக‌ள் ந‌ல்லா இருக்கு.. க‌விதைக‌ள் ம‌ன‌ம் க‌ன‌க்கிற‌து.

  ReplyDelete
 2. "விடுதலைக்கும்
  மரணத்துக்குமான
  இடைவெளியில்
  பனை மரமே!
  உன் வேர்களுக்கும்
  குருத்துகளுக்கும்
  இந்தா என் இசை"


  ..... ஓவியங்களை பற்றி சொன்ன விதமும் , கவிதை தொகுப்பின் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 3. அருமை. இன்னும் சில படங்களைப் போட்டிருக்கலாம்.

  ReplyDelete
 4. உங்கள் பார்வையில் ஓவியங்கள் இன்னும் ஜொலிக்கின்றன . கவனிப்பு திறனும் , மொழி விளையாட்டும் இந்த பதிவிலும் தெரிகிறது. ஆனால் ஒரு குறை . . .

  கண்காட்சி உங்க ஊருக்கு வந்தா பார்த்துகோங்க னு சொல்லிட்டீங்க . எங்க குக்கிராமத்துக்கெல்லாம் கண்காட்சி வராது. நாங்க எல்லாம் ஒங்க ஊருக்கு வந்து அந்த ஓவிய கண்காட்சிய பார்கலாம்னு நினைச்சோம் . ஃபார்மாலிக்காக கூட இன்வைட் பண்ணல :-(

  ReplyDelete
 5. நன்றி நாடோடி, உங்கள் கிறுக்கல்களை
  மன்னிக்கவும் படங்களை, பதிவுகளில் ஏற்றலாமே?

  ReplyDelete
 6. சித்ரா இப்படிப் பண்ணிட்டீங்களே? மோதிக் கவிழ்ந்து கடலெல்லாம் எண்ணைக் கறை ஆக்கியது நீங்கள் தானாமே?

  ReplyDelete
 7. நானும் நினைத்தேன் பின்னோக்கி. ஆனால் அந்தக் கவிதை வரிகள் படங்களை சென்று பார்க்கத் தூண்டும் என்று நினைத்தேன்.
  i have also a doubt whether they will allow it.

  ReplyDelete
 8. உங்க குக்கிராமம் பேர் இன்னா பார்வையாளன். சென்னையா?

  ReplyDelete
 9. நானும் கேள்விப்ப்ட்டு இருக்கிறே ராஜ்..பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!