Bio Data !!

22 August, 2010

மகிழ்ச்சி கொள்ளடி பெண்ணே !!

ஒரு பதிவர் வலைப்பூ இல்லாதவர்கள் படைப்புகளை அனுப்பினால் நான் பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தார், நல்ல எண்ணமாக தோன்றியது.  அதில் ஒரு சின்ன மாற்றம் செய்து தன் வலைப்பூவின் ஸ்டைலுக்கு மாறுபட்ட ஒரு படைப்பு இருந்தால் நாம் அதை பதிவு செய்யலாமே என நினைத்தேன், 
கர்ஜிக்கும் பதிவர் ஒருவரிடம் கவிதை கேட்டேன் பெண்ணை ப(போ)ற்றி , இதோ இங்கே !
யாரென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். 

மகிழ்ச்சி  கொள்ளடி  பெண்ணே !.
மண்ணின்  திறமுனக்கு  ..!
மெய்  பொருள்  யாதெனில் 
பொய்யன்றி  இருத்தல் .
பேறு காலத்து   பெருந்துயர்  கொண்டாய் ..
மண்ணில்  யாவர்க்கும் மற்றுயிர்  தந்தாய்..
அகழ்வானை  தாங்கு  நிலம்  போல ,
இகழ்வானை  தாங்குக  பெண்ணே !

கர்வங்  கொள்  பெண்ணே !
கடலின்  நிறமுனக்கு
ஆழி  எனும்  பரப்  பிரம்மம் .
அள்ளி  வீசும்  மலை  போல ,
வீறு  கொள்ளுக  பெண்ணே !
நீ  ஓடி ஒழிந்திடலாமோ ..
நீல  கருப்பை  தனிலே 
நித்திலம்  சுமந்த  தாயே !
ஊது  சங்கி னொலி போல ,
நீ  வீதி  முழங்குதலாகும் 

காதல்  கொள்ளடி  பெண்ணே !
காற்றின்  கனமுனக்கு .
வீசு  தென்றலென  மேவி 
நீ  பேசும்  பாங்கினதற்க்கு ,
நேச  மொழி  தனிலே 
வேறு  பாஷை  உண்டோ டி ..?

ஈரமுலர்த்து  மொறு  காற்று .,
விழி  ஈரம்  நீக்குதல்  போல ,
வாசம்  கொள்ளடி  பெண்ணே!
நீ  தென்றலடி ..
நீ  தென்றல் ..

வாஞ்சை  கொள்ளடி  பெண்ணே !
வானின்  வனப்புனக்கு .
வெம்மை  உலவுமொரு  காடு 
தண்ணிலவு , குளிருமொரு  சோலை 
குறும்பு  செய்யுமொரு  மேகம் 
உன்  குழந்தை  என்று  காண் பெண்ணே !

புன்னகை  செய்யும்  நட்சத்திரம் ,
பொன்  நகை  என்று  நீ  சூட்டு .
ஒளி  மின்னலென  தவறு  சுட்டு 
பேரிடி  என  தலையில்  குட்டு ..

கண்டு  கொள்ளடி  பெண்ணே !
கனலின்  கண்ணுனக்கு .
தீயில்  வேகு மொரு தங்கம் .
அன்றி  வேறு  பயனிலை  அதற்கு ..
வீடு  நிறையுமொளி விளக்கு ..
திரி  தூண்டும்  விரலும்  நீ யதற்கு..
சூழும்  பகையினை  யகற்று..
வேகு  விறகென  கொழுத்து ..
தேடல்  பேரொளியாம்  .
பெண்  நீ  அதிலொரு  பொறியாம் ..

கருணை   கொள்ளடி  பெண்ணே!
கடவுளின்  கரமுனக்கு ..
நிற்பதும் 
நிகழ்வதும்
நிலைப் பதும்
பெண் 
பெண் .
பெண் .

15 comments:

 1. காதல் கொள்ளடி பெண்ணே !
  காற்றின் கனமுனக்கு .
  வீசு தென்றலென மேவி
  நீ பேசும் பாங்கினதற்க்கு ,
  நேச மொழி தனிலே
  வேறு பாஷை உண்டோ டி ..?

  ..... அழகிய கவிதை..... எழுதியவருக்கு பாராட்டுக்கள்! :-)

  ReplyDelete
 2. இன்னொருவருக்கு வாய்ப்பளிப்பது நல்ல விஷயம் . பாராட்டுக்கள் . அந்த கவிஞருக்கும் பாராட்டுக்கள்

  ReplyDelete
 3. இன்னொருவருக்கு வாய்ப்பளிப்பது நல்ல விஷயம் . பாராட்டுக்கள் . அந்த கவிஞருக்கும் பாராட்டுக்கள்

  ReplyDelete
 4. யார் எழுதியிருந்தாலும் க‌விதை ந‌ல்லா இருக்கு... நீங்க‌ளே சொல்லிடுங்க‌ள்..

  ReplyDelete
 5. அனைவருக்கும் நன்றி, அலுவலகத்தில் நிறைந்து கிடக்கும் ஆணியினால் இந்த நிலை. பாராட்டிய அனைவருக்கும் நன்றி சொல்ல சொன்னது சிங்கம். ஆனால் பெயரை மட்டும் சொல்லக் கூடாதாம்.

  ReplyDelete
 6. ப்ளாக் ஏதொ வெந்தயிர் மனசு... என்ரிருக்கிறது...
  உள்ளே வேறு பெயர் இருக்கிறது..இது என்ன பாரதியார் கனவில்வந்து கவிதை சொன்னாரா..எனக்கென்னவோ நீங்களே எழுதிக் கொண்ட மாதிரி இருக்கிறது...”குறவஞ்சி”

  ReplyDelete
 7. சரி சரி நான்தான் எழுதினேன் என்பதைச் சொல்லிவிடுங்கள்.

  ReplyDelete
 8. நல்ல கவிதைங்க... கவிதை என்ன சொன்னது என்றாலே வழக்கமாய் கொஞ்சம் முழிப்போம்,அத யாரு சொன்னதுன்னு கேட்டா....interesting

  ReplyDelete
 9. தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக .

  kv கவிதை நல்லா இருந்ததா? நான் எழுதல அதான்

  ReplyDelete
 10. நன்றி அஹமத் என்னா சுதந்திர தினத்துக்குப் பின் ஆளையே காணோம்

  ReplyDelete
 11. ரமேஷ் வைத்யா, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. நர்சிம்மின் ஆதர்ச எழுத்தாளர் எங்கள் வீதியில் உலா வந்தது மிக்க மகிழ்ச்சி.
  நன்றி.

  ReplyDelete
 12. நன்றி மோகன் G தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
  கவிதைக்கும் எனக்கும் காத தூரம் தான் எழுதுவதில்,
  மிக நெருக்கம் ரசிப்பதில்.

  ReplyDelete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!