Bio Data !!

10 October, 2010

எண்ணச் சிதறல்கள் !!

*** இதை பதியும் நேரம் 10:10:10:10:10
***சனியன்று இரவு "அழகிய தமிழ் மகன் " என்றொரு நிகழ்ச்சி, விஜய் டிவி யில், நல்லாத்தான் போயிட்டு இருந்தது. நிகழ்ச்சி இறுதி கட்டம் நிகழ்ந்து கொண்டு இருந்தது. நிகழ்ச்சியை நடத்துவது குஷ்பூ. அன்று சிறப்பு நடுவராக சினேகாவும்(கிளிப் பச்சை நிறத்தில் அரைத் தாவணியில் அழகாக இருந்தாலும் பொருத்தமாக இல்லை ), பூஜாவும். பொதுவாகவே பூஜா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் "நான் கடவுள்" படத்தில் பார்த்ததில் இருந்து ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

அழகு, அறிவு, திறமை, அன்பு என பல குணாதிசயங்களிலும் போட்டி வைத்து இறுதி கட்டத்துக்கு நான்கு பேர் தேர்வாகி இருந்தார்கள். அப்துல், சித்தார்த், சோம சேகர், ரவி ஷங்கர். Mr. smart, Mr. intelligent, Mr. entertainer போல பல பரிசுகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு பரிசு கொடுக்கு முன் பூஜா செய்த ஒரு காரியம் தான் இந்த பதிவு எழுத தூண்டிய விஷயம்.

அப்துலை பார்த்து "இந்த பரிசு வாங்கணும்னா என்னைத் தூக்கணும்" என்றார். அதற்கு  அப்துல் பூஜாவை தூக்கியது இயல்பான முறை. வீடுகளில் சந்தோஷ மிகுதியில் மகன்கள் தாயை கூட அப்படி தூக்குவது உண்டு. ஆனால் அதன் பின் " ஹேய்  , இப்படி இல்லப்பா ரொமாண்டிக்கா தூக்கணும்" என்றார்.
பாடல்களில் காதலன் காதலியைத் தூக்குவது போல தூக்க, குஷ்பூவின் முக பாவனையே அதை விரும்பாதது போல் வெளிப்படையாக காட்ட, அதற்கு அப்துலின் எதிர்வினை அதை இன்னும் மோசமாக்கியது.

இங்கே ஒரு விஷயம் சொல்லி யாக வேண்டும். பூஜா நடிகையானதால் பாடல் காட்சிகளில் நடித்து அது ஒரு சாதாரண நிகழ்வாக தெரியலாம். ஒரு லே மேனுக்கு அது ஒரு பரவசப் படுத்தும் நிகழ்வு. அப்துல் தான் தோற்றதால் தான்(எப்படியும் இறுதியில் ஜெயித்து அழகிய தமிழ் மகன் பட்டம் வென்றது அப்துல் தான்)  அந்த சந்தர்ப்பம் கிடைத்தது என்று ஜெயித்தவனுக்கு நன்றி கூறினார். பொது நிகழ்ச்சிகளில்  இதை போன்ற செயல்களைத் தவிர்க்கலாமே பூஜா ! இளைஞர்களின் மனது ஓசோன் படலம் போன்றதல்ல பல exploitation களைத் தாண்டி கிழியத் தொடங்க.  கண்ணாடிப் பாத்திரம் போன்றது. எளிதில் கீறல் விழும். பிறகு அந்தக் கீறலையே விரும்பி விரும்பி பெரிய பிளவு ஆக்கிக் கொள்ளும்.

இன்றைய எனது வருத்தமே பெண்கள் மேல் தான். செயல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. அறியாப் பாலக ஒன்பது வயதுப் பெண் குழந்தையே பாழ் படும் போது , சில்லறைச் சீண்டல்களால் சீறி எழும் இளைஞர்கள் சீரழித்து விடும் வாய்ப்பு அதிகம். பெண்களே கவனமாய் இருங்கள் உங்கள் சின்ன சின்ன செயல்களில்.அதுவும் 'அங்காடித் தெரு' படம் வந்த பிறகு மால்களில் இந்த சில்லறைச் சீண்டல்கள் கூடி இருப்பது போல் தெரிகிறது. இந்த மாதிரி செயல்கள் செய்யும் முன்னே ஒரு நிமிடம் ' சரியா? தவறா?' என நம் மனமே பட்டி மன்றம் நடத்தும். அப்படி நடத்தத் தொடங்கி விட்டாலே அது தவறு என்று தான் அர்த்தம். அதை தவிர்ப்பது சாலச் சிறந்தது.   சொல்லறதை சொல்லிப் புட்டேன். செய்றதை செஞ்சுக்குங்க.

***நேற்றைய "நீயா ? நானா? " அப்பா பெண் உறவு பற்றியது. காலத்தின் மாறுதல்களை அழகாக புரிந்து கொள்ள முடிந்தது. இறந்து போன என் அப்பாவின் நினைவில் மனது கொஞ்சம் ஏங்கியது. காதல் என்றாலே கத்தி களேபரம் பண்ணிய காலம் போய் இன்று, வந்திருப்பவர்களில் பாதிக்கு மேல் என் பெண்ணின் விருப்பம் தான் முக்கியம். பெண் விரும்பும் பட்சத்தில் ஜாதி மாறி இருப்பதை பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னது சமுதாய மாற்றத்தை புலப்படுத்தியது. 

***நண்பர் ஒருவர் கதை எல்லாம் எழுதுறீங்க என் கவிதை முயற்சி செய்யக் கூடாது என்றார். நேசமித்ரன்  , வசுமித்ர , சிவாஜி கவிதைகள் எல்லாம் பார்த்த பிறகு கவிதை எழுத இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் கரைந்து போனது கற்பூரமாய்.

***BSNL  இல் 7.10.10 முதல்  17.10.10 வரையும் ,   1.11.10. முதல்  12.11.10 வரையும் rs.55, 110, 220, 550 க்கு topup செய்தால் full talk time கிடைக்கிறது . உபயோகிப்பவர்களுக்கு பயன்படட்டுமே என்று இந்த தகவல். வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருப்பதால் இடையிடையே பகிர்ந்து கொள்ளலாம்னு நினைக்கிறேன்.     

*** நெல்லை ஹலோ FM அக்டோபர் பதின்மூன்றாம் தேதி நான்காண்டு வெற்றிகரமாக முடிக்கிறது. இதை முன்னிட்டு நேயர்களுக்கு மரக் கன்றுகள் கொடுக்கிறார்கள். பசுமையாய் வளர்ப்பதற்காக. வாழ்த்துகிறேன் ஐந்தாம் ஆண்டில் வெற்றிகரமாக கை குலுக்கி செல்வதற்கும், பசுமையை வளர்ப்பதற்கும். 

17 comments:

 1. இன்றைய எனது வருத்தமே பெண்கள் மேல் தான். செயல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. //

  மிக சரியா சொல்லி இருக்கீங்க. நாம உண்மையில் சிக்கல்களை புரிஞ்சுகலயா இல்ல புரிஞ்சுக்காத மாதிரி நடிக்கிறோமானு தெரியல.

  ReplyDelete
 2. இப்போது ந‌ட‌க்கும் இந்த‌ டிவி ஷோக்க‌ளை ப‌ற்றி க‌ருத்து சொல்ல‌வே கேவ‌ல‌மா இருக்கு.. ):

  ReplyDelete
 3. கதம்ப மாலை..... நிறைய தகவல்கள். அருமை.

  ReplyDelete
 4. கதை எல்லாம் நல்லா எழுதுறீங்க.,
  ஏன் கவிதை முயற்சி செய்யக் கூடாது..?? :)

  ReplyDelete
 5. ஊரில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் ஆண்கள் மேல் குற்றம் சாட்டும் இந்த பெண்ணாதிக்க நாட்டில் , பெண்களுக்கு அறிவுரை சொல்லும் உங்கள் நேர்மையும் சமூக அக்கறையும் பாராட்டத்தக்கது..

  "கவிதை எழுத இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் கரைந்து போனது கற்பூரமாய்."

  அட .. கவிதை நல்லா இருக்கே !!

  ReplyDelete
 6. //எனது வருத்தமே பெண்கள் மேல் தான். செயல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. //

  பழமைவாதி, அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்னு பெண்ணீயம் பேசுறவங்க முத்திரை குத்தப் போறாங்க உங்கமேல!! :-))

  என்ன சொன்னாலும், உண்மை அதுதான். ஆண்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்பதைவிட, பெண்கள் கவனமாக இருப்பதுதான் நல்லது எப்பவும்!!

  ReplyDelete
 7. நிறைய தகவல்கள். அருமை.

  ReplyDelete
 8. எண்ணச் சிதறல்கள் மிக நன்றாக இருந்தது!

  ReplyDelete
 9. கதம்பம் நல்லா வந்திருக்கு:)

  ReplyDelete
 10. ’எண்ணிச்’ சிதறிய எண்ணச் சிதறல்கள் நன்று:)

  ReplyDelete
 11. தமிழ், எவ்வளவு தான் வீராப்பு பேசினாலும், படைப்பு ஆணை விட பெண்களுக்கு பாதகங்களை அதிகமாக வைத்திருக்கிறது. அதனால் கவனமாய் இருக்க வேண்டியது பெண் தான்.

  ReplyDelete
 12. நாம் அன்னப் பறவை போல் இருப்போம் நாடோடி, நல்ல விஷயங்கள் என்ன கிடைக்கிறதோ அதை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்வோம்

  ReplyDelete
 13. நன்றி சித்ரா, அதென்ன அடிக்கடி காணாமப் போயிடுறீங்க

  ReplyDelete
 14. ஆமா சிவா, அப்படி சொன்னவரை பார்த்தால் சொல்லுங்க. கொஞ்சம் கவனிக்கணும். நீங்க ஒரு நாளைக்கு எப்போ கண்ணாடி பார்ப்பீங்க?

  ReplyDelete
 15. ஏமாற்றும் பெண்களின் சதவீதம் அதிகரிக்கிறதே என்பது தான் வருத்தம் ஹுசைனம்மா

  ReplyDelete
 16. நன்றி வினோ,
  நன்றி எஸ் கே
  நன்றி வானம்பாடிகள் sir

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!