Bio Data !!

01 November, 2010

எண்ணச் சிதறல்கள் !

எல்லோருக்கும் ஒரு நவம்பர் வணக்கம்.
ரொம்ப சந்தோஷமாத் தான் ஐம்பதாவது பதிவு தாண்டினேன்.
திடும்னு கணினி மூச்சை நிறுத்திடுச்சு. சரி தட்டிக் கொட்டி சரி பண்ணிடலாம்னு பார்த்தா கதைக்கு ஆகல. கணினிக்கான வைத்தியரை வைத்து சரி பண்ணிடலாம்னு நினைச்சேன். அவரோ சினிமா வைத்தியரைப் போல கண் கலங்காத குறையா "ஐ ஆம் வெரி சாரி " னுட்டார். கணினி மரணித்த விஷயத்தை சொன்னதும் நண்பர் ஒருவர் ஆழ்ந்த அனுதாபங்களை அனுப்பினார். "உங்கள் கதைகளின் சோகம் தாங்காமல் மூச்சை நிறுத்திக் கொண்டிருக்கும் " என்றார். நானும் ஜாலியா எழுதணும்னு தான் பார்க்கிறேன். முடியலியே.

எனக்கும் கூட பதினைந்து நாட்கள் பதிவுலகம் பக்கம் வராமல் பச்சை தண்ணி கூட பல்லில பட மாட்டேன்னுடுச்சு. இப்போ மறுபடி கால் பதித்ததும் தான் அப்பாடான்னு இருக்கு. டச் விட்டுப் போனதில எழுதக் கூட வரமாட்டேனுது.

கொஞ்ச நாளாவே செய்திகள் பக்கம் போகவே பயம்மா இருக்கு. பெங்களூரில் கொலை செய்யப்பட்ட நெல்லை பெண். உறவுப் பையன் விரும்பியும் அவள் கிடைக்காத காரணத்தால் எந்த பாவமும் செய்யாத அந்தப் பெண் பலியாகிறாள். இந்த செய்தியைப் பார்த்த அநேகம் பேர் சொல்லிய வார்த்தைகள் " அய்யோ பாவம், பொண்ணு அவ்வளவு அழகா இருக்கு. " இங்கே மனிதர்களின் சைக்காலஜி எனக்குப் புரிவதில்லை. அழகான பெண் கொலை செய்யப் பட்டால் அதிகம் பாவப் படுகிறார்களே ஏன்?

ஒரு சின்ன செய்தி, BSNL வாடிக்கையாளர்களுக்கு, நவம்பர் 1 லிருந்து நவம்பர் 12  வரை ஈசி சார்ஜ் செய்யும் Rs 55, Rs 110, Rs 220, Rs 550 ஆகிய தொகைகளுக்கு full talktime . புதிதாக கொடுக்கப்பட்ட "என் நண்பன் சூப்பர்" என்னும் ப்ளானில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏதாவது ஒரு landline  க்கு முழுவதும் இலவசமாக பேசும் வசதி உள்ளது. அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும்.

'எந்திரன்' படம் பற்றி இப்போ பேசினால் நல்லா இருக்காது. இருந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் என்னைப் போன்றவர்கள் அவரின் வேகத்தையும் ஸ்டைலையும் பிரமித்து பார்த்தது போல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞர்கள் ரசிப்பதை பார்க்கும் போது அழகு என்பது இளமையிலும், வெளித்தோற்றத்திலும் இல்லை என்பது ஆணித் தரமாக புரிகிறது.

இப்போதைக்கு இது போதும். வர்ர்ரட்ட்டா !

14 comments:

 1. நம்ம மக்களின் எண்ணம அப்படி!!! கொலையானவர்கள் கூட அழகானவர்களா இருந்தா அனுதாபம் அதிகம்!!!

  ReplyDelete
 2. வெல்கம் பேக் பாஸ்...
  உங்க பழைய கணினிக்கு ஆழ்ந்த இரங்கல். :(
  புது கணினிக்கு பிறந்தநாள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்..! :)
  என்னடா பதிவ காணோமே ன்னு நெதம் வந்து வந்து பாத்துக்கிட்டே இருந்தேன்.. என் நண்பன் வேற உங்க பதிவு காணலையே ன்னு சாப்டாம தூங்காம இருக்கான்..
  நல்ல நேரமா போட்டேங்க.. :) சந்தோஷம்ங்க.. :)
  இதோ திருநெல்வேலி கிளம்பிட்டேன்.. பாக்கலாம்.. :)

  ReplyDelete
 3. :)). அப்புறம் எப்படி உயிர் வந்தது கணினிக்கு :)).

  ReplyDelete
 4. இந்த செய்தியைப் பார்த்த அநேகம் பேர் சொல்லிய வார்த்தைகள் " அய்யோ பாவம், பொண்ணு அவ்வளவு அழகா இருக்கு. " இங்கே மனிதர்களின் சைக்காலஜி எனக்குப் புரிவதில்லை. அழகான பெண் கொலை செய்யப் பட்டால் அதிகம் பாவப் படுகிறார்களே ஏன்?

  ......அதானே? நீங்கள் குறிப்பிட்ட பின் தான் நானும் அப்படி யோசிக்கிறேன்....

  ReplyDelete
 5. மீண்டும் வந்ததற்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 6. "அழகான பெண் கொலை செய்யப் பட்டால் அதிகம் பாவப் படுகிறார்களே ஏன்? "

  அப்படி அல்ல.. ஒருவர் இறந்ததும் அவரது பிளஸ் பாயிண்டுகள் அதிகமாக கண்ணில் படும்.. நல்ல பையன்..சிரித்த முகமா எப்பவும் இருப்பான் என்றோ.. உதவும் மனப்பான்மை கொண்டவள் என்றோ சொல்லி, அநியாயமா சின்ன வயசுல போயிட்டாரே/னே / ளே , என புலம்புவோம.. உயிரிடுடன் இருக்கும்போது அந்த பிளஸ் பாயிண்டுகள் கண்ணில் பட்டு இருக்காது..
  செய்திகளில் போட்டோ மட்டும் தெரிவதால், அதன் ( வெளிப்புற தோற்ற ) அடிப்படையில் மட்டும் பாவப்படுகிறோம்.. பாவம்,,அழகான பெண் என்றோ,, சின்ன வயசுக்காரன் ,,, இப்படி ஆயிடுச்சே என்றோ பாவப்படுவது இதனால்தான்..

  ReplyDelete
 7. அது மட்டும் இல்ல சிவா சம்பந்தப் பட்ட இருவரில் கொஞ்சம் சுமாரான ஒருவர் தான் நிச்சயம் குற்றம் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் பொதுவாகஇருக்கிறது.

  ReplyDelete
 8. வாங்க சிவா வரவேற்கிறேன். நெல்லையில் கண்டிப்பா சிந்திப்போம் தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. கணினிக்கு எங்கே உயிர் வர்றது வானம்பாடிகள் சார், காலம் போன காலத்தில புதுக் கணினி வாங்க வேண்டி யாகிவிட்டது.

  ReplyDelete
 10. சித்ரா உங்க ஊரில தேர்தலாமே? ஓட்டு போட தங்க குடம் வெள்ளிக் குடம் லாம் கொடுப்பாங்களா?

  ReplyDelete
 11. நன்றி தமிழ்,
  நன்றி பார்வையாளன், எனக்கு உங்கள் கருத்தில் கொஞ்சம் மாறுபாடு உண்டு. பொதுவாகவே நமது நாட்டில் புற அழகுக்கு தேவைக்கு அதிகமாகவே இடம் கொடுக்கிறோம்
  அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 12. "என் நண்பன் சூப்பர்" என்னும் ப்ளானில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏதாவது ஒரு landline க்கு முழுவதும் இலவசமாக
  //

  ஏன் இப்படி புரியாம குழப்பமா..?
  நான் கூட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள landline FREE நினைச்சுட்டேன் :D

  `
  `
  `

  தமிழ்நாடு உள்ள ஏதாவது ஒரு landline க்கு முழுவதும் இலவசமாக ....

  இப்படி சொல்லலி இருக்கலாம் :-)

  ReplyDelete
 13. என் நண்பன் சூப்பர்" என்னும் ப்ளானில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள "ஏதாவது" ஒரு landline க்கு முழுவதும் இலவசமாக//
  அதே தானே நானும் சொல்லி இருக்கிறேன் சேது.
  ஆனாலும் உங்களுக்கு பேராசை

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!