Bio Data !!

05 December, 2010

அம்மாவுடன் ஒரு பேட்டி !!

என்ன! தலைப்பைப் பார்த்ததும் விர்ருனு வந்தீங்களா?
இது எங்க அம்மாப்பா,
எழுபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் அன்னை,செசிலி ரஞ்சிதம் , என் ஆதர்சத் தலைவியுடன் ஒரு பேட்டி.
நான்: அம்மா ! பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். எழுபத்தைந்தாம் வயதில் அடி எடுத்து   வைக்கிறீர்களா?
அம்மா : ஆமா , இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ.
நான்: அம்மா, உங்கள் குடும்பத்தைப் பற்றி, உங்கள் பள்ளி நாட்களை பற்றி சொல்லுங்க.
அம்மா: எங்க அப்பா நெல்லையில் St Xaviers கல்லூரியில் கணிதத்தில் மிகச் சிறந்த பேராசிரியர். கணிதத்தில் , மாநிலத்தில் முதலாவதாக வந்து தங்க மெடல் வாங்கினாங்க.  பெயர் சந்தியாகு பிள்ளை(மன்னிக்கவும் அந்த காலங்களில் ஜாதிப் பெயரும் ஓட்டிப் பிறந்த ரெட்டைப் பிள்ளைகள் போல் பெயரோடு இணைந்து கொள்கிறது.) கணிதத்தில் பல புத்தகங்கள் போட்டு இருக்கிறார்கள். அம்மாவுக்கு பிள்ளைகளை பார்ப்பதே பெரிய பணி. நாங்கள் பன்னிரண்டு பேர். நான் தான் மூத்த பெண். எனக்கும் கணிதத்தில் ஆர்வம் என்பதால் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பிள்ளை. காலையில் வாக்கிங் கூட்டிச் செல்வார்கள். அது தான் எனக்கு கணக்கு சொல்லித்தரும் நேரம். நடந்து கொண்டே அவர்கள் கணக்கை சொல்லித்தர நான் கற்பனையில் புரிந்து இடையே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.அது கவனம் திசை திரும்பாமல் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை அதிகரித்தது.
               
நான் படித்தது ST Ignatius  கான்வென்ட், கல்லூரி Sarah Tucker, மறுபடியும் B.ED படிக்க
ST Ignatius கே வந்தேன். B. Ed தொடங்கிய முதல் வருடம் (1957) படித்த பெருமை உண்டு
அப்போ  கணிதத்துக்கு ஆசிரியர் கிடைப்பது அரிது என்பதால் வீட்டுக்கே வந்து வேலைக்கு ஆர்டர் கொடுத்து கூட்டிச் செல்வார்கள். ( ம்ம்ம்ஹூம் )
மதர் அலெக்ஸ் ஹெட்மிஸ்ட்ரெஸ் ஆக இருந்த நேரம். ரொம்ப ஸ்ட்ரிக்ட்
நான் : அப்பா பற்றி சொல்லுங்களேன். முப்பத்தைந்து ஆண்டுகள் முன் இறந்து போன அவரைப் பற்றி கடந்த வருடம் ஒரு  பதிவு போட்டு இருந்தேன். 

அப்பாவோட மாணவர் ஒருவர் எனது பதிவில் கமெண்ட் போட்டு இருந்தார். சிலிர்த்துப் போனேன்.
அம்மா : He is a great man. ST. Xavier's college இல் Mr. Soosai Rathinam , (Physics) என்றால் மிகப் பிரபலம். மிகவும் அன்பான மனிதர். எங்கள் திருமணம் ஆகி பதினேழு வருடங்கள் என்னை உள்ளங்கையில் தான் தாங்கி இருந்தாங்க. பேராசிரியர் என்ற கர்வம் துளி கூட கிடையாது. நீங்கள் சின்ன பிள்ளைகளாய் இருந்த போது, அப்போல்லாம் கல்லூரியில் வகுப்பு எடுக்கும் நேரம் தவிர மீதி நேரம்  வீட்டில் இருந்து கொள்ளலாம். வேலைக்கு ஒரு சிறுமி இருந்தாலும், வகுப்பு இல்லாத நேரம் எல்லாம் வீட்டில் குழந்தைகளோடு தான் இருப்பாங்க. வாழும் விதிகளில் இருந்து சிறிது கூட விலகாத மனிதர். (இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் எங்கள் கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது.) அப்போ அப்பாவுக்கு 41; எனக்கு 38; ஆழ்ந்த ரசிப்போடு தன்னோடி ஈர்த்துக் கொண்ட திரைப்படம் திடீரென முடிந்தது போல் ஒரு டிசம்பர் 18 இல் மண்ணுலகை விட்டு மறைந்து விரைந்து   போனாங்க.
நான்: உங்கள் மேல் என் பிரமிப்பு கூடியது அதன் பின் தான். எப்படி அப்போவோட இறப்பை எதிர் கொண்டீங்க.
அம்மா: காந்திமதி ஸ்கூலில் ஆசிரியையாக பணி புரிந்து கொண்டு இருந்தேன்.
நான்: அங்கே உங்கள் எழுத்துக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்ததே!
அம்மா: ஆமாம். அப்போ திருமதி அம்மணி சுப்ரமணியம் தான் தலைமை ஆசிரியையாக இருந்தார்கள். ஒரு தாயைப் போல் ஆசிரியர்களை அவர்கள் நடத்துவார்கள். திறமைகளை ஊக்குவிப்பார்கள். ஆசிரியர்களின் குடும்பத்தோடு ஒரு குடும்ப நண்பரைப் போல பழகுவார்கள். அப்பா இறந்த நேரம் அவர்களும், சக ஆசிரியர்களும் எனக்கு மன ஆறுதலையும், தைரியத்தையும் அளித்தார்கள். திடீர்னு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அது வரை என் கணவன் தான் உலகம் என்று இருந்தேன். திடீரென மூன்று பெண் பிள்ளைகளுடன் தனியாய்ப் போனேன்.
அப்பா இருக்கும் வரை பி.எட் படிப்பே போதும் என்று இருந்தேன். அந்த இழப்பை மறக்க படிக்க ஆரம்பித்தேன். முதலில் M.Ed படித்தேன் .அதில் பல்கலைகழக  அளவில் முதலாவதாக வந்து தங்க மெடல்  வாங்கினேன். கணிதத்தில் M.Sc படிப்பதற்கு துணிச்சல் இல்லாததால் M.A (English ) முடித்தேன். அதில் வாங்கிய மதிப்பெண்கள் கொடுத்த தைரியத்தில் அடுத்து M.Sc (Maths)  என மூன்று மாஸ்டர் டிகிரிகள் வாங்கினேன். கல்வி கொடுத்த தைரியத்திலும், உறவுகளும் நண்பர்களும் கொடுத்த ஆதரவிலும் மூன்று பெண் குழந்தைகளுக்கும் உயர்ந்த கல்வி, உயர்ந்த பணி, உயர்ந்த இடத்தில் திருமணமும் செய்து கொடுக்க முடிந்தது.
நான்: ஆமாம் அம்மா . அப்பா இல்லை என்பது வலியாய் இருந்ததே ஒழிய எந்த சூழ்நிலையிலும் அந்த இழப்பை நாங்கள் உணராத படி தான் வளர்த்தீர்கள். இத்தனை ஆண்டு காலங்களில் நீங்கள் மிகச் சிறந்ததாய் உணர்ந்த தருணம் ஏது?
அம்மா : என் பேத்தியின் மகனை நான் கைகளில் ஏந்திய தருணம். நான்காவது தலைமுறை காணும் பாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றி. ஒரு இழப்பை தந்த இறைவன் பேரன், பேத்திகள் என நிறைவைத் தந்திருக்கிறார்.
எனது அறுபது வயதில் "இத்தனை ஆண்டுகள் எங்களுக்காக வாழ்ந்து விட்டீர்கள். உங்களுக்காக இதையாவது செய்யுங்கள்"என்று என் பிள்ளைகள் ரோம், ஜெருசலேம் போன்ற நாடுகளுக்கு தெரிந்தவர் குடும்பத்துடன் திருப்பயணம் அனுப்பி வைத்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மற்றும் ஒரு வெளி நாட்டு பயணம் இவை மிகவும் மகிழ்ச்சியாய் என்னை உணர செய்த நேரங்கள். 
நான்: நீங்கள் மிக மோசமாக உணர்ந்த தருணம் ஏது?
அம்மா: அப்பா இருக்கும் வரை தம்பதி சமேதராய் எங்களை பெருமைப் படுத்திய சமூகம் நான் கணவனை இழந்ததால், என்னை ஒரு சகுனத் தடையாய் பார்த்த நிமிடங்கள் என்னை மிக மோசமாய்ப் பாதித்தன.
நான்: இந்தப் பதிவின் மூலம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

அம்மா: சமூகத்துக்கு ஒரு வேண்டுகோள். துணையை இழந்து துடித்துக் கொண்டு இருப்பவர்களை, உங்கள் துரதிர்ஷ்டப் பார்வையால் இன்னும் குத்திக் கிளறாதீர்கள்.
இளம் வயதில் இணையை இழந்த பெண்களே! வாழ்வு ஒரு இருட்டான குகை போல் தெரியும். ஆனால் உள்ளே போகப் போக கண்கள் பழகி வெளிச்சமும், வழியும் தெரியும். எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையையும் , தைரியத்தையும்  மட்டும் இழக்காதீர்கள். இறைவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி கிட்டுவது நிச்சயம்.

26 comments:

 1. அற்புதமான அறிமுகம். உங்கள் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் வணக்கங்களும்.:)

  ReplyDelete
 2. சந்தியாகு பிள்ளை சாரோட பேத்தியா நீங்க? சூப்பர்! பாளையங்கோட்டையில் என் தாத்தா - திரு. அந்தோணி முத்து செல்லையா அவர்களின் நெருங்கிய நண்பர்களுள் அவரும் ஒருவர். அம்மாவுக்கு, எங்களது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்குதுங்க.

  ReplyDelete
 3. மிகவும் சிறப்பான பதிவு.

  அம்மாவுக்கு என் வணக்கங்கள்...

  ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த நீங்கள், முன்னோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் எழுதுவது , சிந்திப்பது பாராட்டத்தக்கது...

  உங்களிடம் தலைமைப்பண்பையும், நல்ல எண்ணத்தையும் பார்த்தவன் நான்...
  அது எங்கு இருந்து வந்த்தது என்பது இப்போது தெளிவாக புரிகிறது..

  இதெல்லாம் இருக்கட்டும்..

  அம்மாவின் பிறந்த நாளுக்கு , உங்கள் சகோதரிகளும் தங்கள் அன்பை வெளிக்காட்டி இருப்பார்கள்..

  அதைப்பற்றி எதுவும் சொல்லாமல், நீங்கள் மட்டுமே அம்மாவின் செல்லம் ,உங்களுக்கு மட்டுமே அம்மா மேல் அன்பு உண்டு என்பது போல காட்டிக்கொண்டது நியாயம் அல்ல :)

  ( இந்த பின்னூட்டத்தினால் சகோதரிகளுக்கிடையே வரும் மோதலை தனி பதிவாக வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் :) )

  ReplyDelete
 4. உங்கள் அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்.. She is great...

  ReplyDelete
 5. காந்திமதி பள்ளியில், திருமதி. அம்மணி அவர்கள் தலைமை ஆசிரியையாக இருந்த சமயம் நான் அங்கு படித்தேன். உங்கள் தாயையும் பார்த்திருக்கலாம்; படித்திருக்கலாம். பார்த்தால் ஞாபகம் வரும்.

  ReplyDelete
 6. அம்மாவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. உங்கள் தலைப்பை பார்த்தவுடன் உள் நுழைந்தேன்,தங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளும்,நல் வாழ்வும் பெற எல்லா நல்லா சக்திகளும் உதவ வேண்டும்.சில மாதங்களுக்கு முன் என் அம்மா இயற்கை எய்திவிட்டார்.அந்த வலியுடன் படித்தேன்.சமீபமாகதான் இணையதளத்தில் ப்ளாக் பற்றி தெரிந்துகொண்டேன்,அனைவரது படைப்புகளையும் படிக்க முடியாவிட்டாலும்,படிக்க நேர்ந்தவைகளை பார்த்து ஆச்சர்யப்பட்டேன்,என் அம்மாவிற்காக நானும் எனக்கு தெரிந்த நடையில் ப்ளாக் க்ரியேட் செய்துள்ளேன்,(ஆனால் முழுமையாக முடிக்கவில்லை,) என் ப்ளாக் www.maniamma.blogspot.com மற்றும் நீங்கள் http://www.sgtamilbloggers.com /index .php க்கு முறச்சி seithu வெற்றி பெறவும்.

  ReplyDelete
 8. நன்றி வானம்பாடிகள் ஐயா! உங்கள் வாழ்த்துக்கள் அம்மாவிடம் தெரிவிக்கப் பட்டன

  ReplyDelete
 9. நன்றி சித்ரா. நாம் ஒரு வகையில் உறவுக்காரர் தான். திருச்சி கல்யாணத்தில் சந்தித்து இருக்கிறோம். நீங்கள் நெல்லை வரும் சந்தர்ப்பத்தில் கண்டிப்பாகசந்திப்போம்

  ReplyDelete
 10. இந்த பின்னூட்டத்தினால் சகோதரிகளுக்கிடையே வரும் மோதலை தனி பதிவாக வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் :) ) //
  'அவரா' நீங்க?

  ReplyDelete
 11. நன்றி ஹுசைனம்மா . அம்மாவோட கையெழுத்து ரொம்ப அழகா இருக்கும். எழுதச் சொல்லி பதிவில் ஏத்த முயற்சித்தேன். பலிக்கவில்லை

  ReplyDelete
 12. "உங்கள் வாழ்த்துக்கள் அம்மாவிடம் தெரிவிக்கப் பட்டன"

  என் வணக்கங்கள் தெரிவிக்கப்பட்டனவா ?

  ”நன்றி சித்ரா. நாம் ஒரு வகையில் உறவுக்காரர் தான்”
  ”தலைமை ஆசிரியையாக இருந்த சமயம் நான் அங்கு படித்தேன்”

  இப்படி நீங்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து கொண்டு என்னை மறந்து விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..

  நானும் பக்கத்து ஊர்க்காரன் என்ற அடிப்படையில், எனக்கும் கூட்டணியில் இடம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  இதை ஏற்றால், இனிமேல் சிண்டு முடியும் பின்னூட்டம் இடம் மாட்டேன் என்ற உறுதி மொழி தருகிறேன்

  ReplyDelete
 13. நன்றி திருமதி. ஸ்ரீதர். ஆழ்ந்த அனுதாபங்கள். தொப்புள் கொடி பந்தம் முழுமையாய் மறைந்து போகும் சோகம் தாங்க முடியாதது. அதற்கு வலைப்பூ ஒரு நல்ல மாற்று மருந்து. உங்கள் ப்ளாக் பார்த்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 14. கூட்டணியில் இடமில்லை பார்வையாளன். No Vacancy. அது சரி பின்னூட்டத்தில் சிண்டு முடியிறோம்னு தெரிஞ்சே செய்தது தானா? U 2 Brutus?

  ReplyDelete
 15. Great!!
  அம்மாவுக்கு வாழ்த்துக்க‌ள்.... உங்க‌ளுக்கும்தான்....
  உங்க‌ளை ச‌ந்தித்த‌தில் ம‌கிழ்ச்சி.... தொட‌ர்கிறேன் இனி.. :-)

  ReplyDelete
 16. நன்றி பிரபு. தங்கள் வாழ்த்து அம்மாவிடம் தெரிவிக்கப் பட்டது. தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக !

  ReplyDelete
 17. என் ஆனந்தமான நன்றியை ஏற்றுக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 18. Gud writting. Ur mom is a great person congrats to u... :-)

  ReplyDelete
 19. "தங்கள் வாழ்த்து அம்மாவிடம் தெரிவிக்கப் பட்டது."

  என் வணக்கங்கள் தெரிவிக்கப்பட்டனவா ?

  ReplyDelete
 20. Hi
  ENga miss ku b'day
  santhosham
  Avargalin aasigaliai eppothum venudum
  Muthubalapushkarani

  ReplyDelete
 21. நன்றி சிந்தியா.
  நன்றி முத்துபாலா. அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. நான் எழுதியதையும், பின்னூட்டங்களாக வந்ததையும் பிரிண்ட் எடுத்து laminate பண்ணி தரணுமாம். சரின்னு சொல்லிஇருக்கேன்.

  ReplyDelete
 22. சொல்லாமல் இருப்பேனா பார்வையாளன். அம்மா வீட்டில நான் இருக்கும் போது ரிங் பண்ணி உங்களிடம் பேசச் சொல்லலாம்னு நினைத்தேன். ரொம்ப பிஸி யா ஊர் ஊரா சுற்றிக்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் பேசசொல்றேன்

  ReplyDelete
 23. மிக அருமையான பகிர்வு ரூஃபினா.. அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.. மிக நெகிழ வைத்த பதிவு..

  ReplyDelete
 24. Thank you so much for writing about Periyamma on her 75th birthday.
  It is hardly surprising that, Periyamma is one of my most favorite people in this world.
  Her perseverance in life is just astounding.
  But what I find most inspiring about her is how much love she has to give.
  It is amazing that she is still going strong, even after all these years. And what can I say about her sense of humor? :-)
  I can only envy my 3 akka's, their families, and relatives and friends, who get to live close to such an amazing person.

  ReplyDelete
 25. அம்மாவுக்கு வாழ்த்துகள்... :)

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!