Bio Data !!

02 January, 2011

திரை விமர்சனம் - மன் மதன் அம்பு

யார் சொல்லப் போகிறீர்கள் கமலிடம் நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் 'சூப்பர்'  என்று சொல்வோம் என்று இன்னும் எத்தனை நாள் எண்ணிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்.

த்ரிஷா போன்ற சின்னப் பொண்ணை ஜோடியாய்ப் போடுவானேன் அவள் அருகில் தான் ரொம்ப வயதானவனாய்த் தோன்றி விடுவோமோ என்று லாங் ஷாட் வைப்பானேன். நான் இறுதிக் காட்சியில் கப்பலில் புள்ளியாய் இருவரும் தெரிவதை சொன்னேன்.

த்ரிஷா ரொம்ப underplay . அது சில இடங்களில் நடிப்புக்கு சிறிதும்  சிரத்தை எடுக்காதது போல் தோன்றி விடுகிறது. ஆனால் ஒரு ரகசியம் தெரியாவிட்டால் தலை விக்ரமாதித்தன் கதையில் வருவது போல் வெடித்து விடும் போல் இருக்கிறது. இந்த ஜீரோ சைஸ் இத்தனை வருடங்கள் எப்படி மாறாமல் வைத்து இருக்க முடிகிறது.

மாதவன் சந்தேகப் படும் கணவன் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதை, தான் நம்புவதை நடப்பதாக சொல்லும் வரை தான் நம்பப் போவதில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக  நன்கு  செய்திருக்கிறார். இருந்தாலும் அவரது பாத்திரப் படைப்பு கொஞ்சம் கவனக் குறைவாகத் தான் படைக்கப் பட்டு இருக்கிறது.

பெண்களில் நகைச்சுவை சிறப்பாக செய்யும் ஊர்வசியை அநியாயத்துக்கு இப்படி ஒரு அழுமூஞ்சியாக காட்டி இருப்பது கண்டனத்துக்கு உரியது. கிடைத்த கேப் இல் அலை பேசியில் தன் தாலியை தட்டிக் காட்டி தன் கணவன் பிழைத்து விட்டான் என்பதை உணர்த்தும் இடம் சிறப்பு.

இப்படி எல்லாம் இருந்தும் படத்தில் என்னைக் கவர்ந்த ஒருவர் உண்டு. கமல் ? ம்ம்ஹும் இல்லை சங்கீதா. படம் தொடங்கும் பொழுதில் இருந்து முடியும் வரையில் தன் கதாப் பாத்திரம் இது தான் என்பதை அழுத்தமாக பதிய வைக்கிறார். கொஞ்சம் புத்திசாலித் தனம் குறைந்த பெண் என்பதை "சூப்பர் ஜீவனாம்சம் " என்பதில் காட்டுவதில் தொடங்கி படம் இறுதியில் மயங்கி விழும் வரை குரல் , நடை, உடை பார்வை என ஒவ்வொன்றிலும் அவர் முயற்சி சிறப்பு. இந்தப் பெண்ணுக்கு ஏற்ற தீனி கொடுக்கும் கதைப் பாத்திரம் யார் கையில் இருக்கிறது

காதல் மன்னன் கமலிடம் காதல் இன்னும் பாக்கி இருக்கிறது என்பதை சொல்லும் சில இடங்கள். அடல்ட்ஸ் ஒன்லி ஷோ பார்க்கும் இடத்தில் இருக்கையின் கம்பிகளுக்கு மேலும் கீழுமாக பார்வையை மாற்றி மாற்றி த்ரிஷாவிடம் செலுத்தும் இடமும், பதில் பார்வை அதே போல் மேலும் கீழுமாக மாறி மாறி வருவதும். கொடிது கொடிது வயதின் முதிர்ச்சி கொடிது. திரைப்படத்தின் இறுதி காட்சியில் காதல் கொப்பளிக்க கமல் பார்க்கும் பார்வை முப்பது ஆண்டுகளுக்கு முந்திய அதே பார்வை. அதை கண் இரைப்பைகளின் வீக்கம் அதன் பவர் குறைக்கிறது. ஆனால் உங்கள் முப்பது வயதில் பார்த்த பார்வையை பார்த்தவர்களுக்கு அந்த கண்களின் கூர்மை நினைவூட்டியது.

அதே அடல்ட்ஸ் ஒன்லி ஷோ முடிந்து வெளியே வரும் த்ரிஷா பார்க்கும் பார்வை "என்னை பின் தொடர்ந்து வா " என சொல்ல டிவி திரையில் நடனம் ஆடும் பெண்களும் இசைக்கு ஏற்றவாறு "பின் செல்" எனச் சொல்லும் இடம் சொல்லியது கதா நாயகனோ, இயக்குனரோ, துணை இயக்குனரோ யாரை இருந்தாலும் ஒரு பாராட்டு.

ஒளிப்பதிவாளருக்கு சிறப்பு பாராட்டு.
தேவி ஸ்ரீப்ரசாத் இசையில் ஒரு சில பாட்டுக்களில் கலக்கி இருக்கிறார். கமலும் த்ரிஷாவும் கப்பலில் கவிதை சொல்லும் இடம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது படத்தின் நடுவில் வந்திருந்தால். கமலின் படத்தை இசை அமைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரின் படத்தின் வசனங்கள் சில இடங்களில் மிகச் சிறப்பாக அமையும். அந்த இடங்களில் இசையை குறித்தோ, முழுவதுமாக நீக்கியோ உதவி செய்தால் அந்த வசனங்களில் நகைச்சுவையும், சிறப்பும் அனவைரும் ரசிக்கும் படி இருக்கும்.

படத்தின் அத்தனை குறைகளையும் சொல்லியும் விகடனில் மதிப்பெண்கள் ஏன் 40 ?
தைரியமாக விமர்சனம் செய்யுங்கள் அது கலையின் உச்சத்தை அடைந்தவர்களுக்கு சில நேரம் ஏற்படும் தொய்வை சரி செய்யும்.

எதிர்பார்ப்பில்லாத ஏமாற்றத்தை விட எதிர்ப்பார்த்து ஏமாறும் வலி அதிகம். அந்த வலியை இனி கொடுக்காமல் இருக்கப் பாருங்கள் கமல். யாரும் சொல்லா விடினும் நானே சொல்லி விடுகிறேன்
"நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் 'சூப்பர்'  என்று சொல்வோம் என்று இன்னும் எத்தனை நாள் எண்ணிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்."

6 comments:

 1. :-)
  Reverse song., Kutti pasanga.,
  Ramesh arvinth., ithellam sollaliye..

  ReplyDelete
 2. எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் அதே வலிதான் என்னையும் வேதனைப் பட வைத்தது!
  உங்கள் கேள்விக்குக் கமல் பதில் சொல்ல மாட்டார்.... தெரிந்துசெய்பவர்கள் திருந்துவதில்லை!

  ReplyDelete
 3. மிக மிக சிறப்பான விமர்சனம் . விகடனுக்கு குட்டு வைத்தது , துவேஷம் இல்லாத விமர்சன பார்வைக்கு உதாரணம் . அருமை

  ReplyDelete
 4. அட கலக்கல்.. விமர்சனம்.. ரூஃபினா..

  ReplyDelete
 5. உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
  நன்றி

  ReplyDelete
 6. நன்றி கவி, தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!