Bio Data !!

27 February, 2011

என் செல்லச் சீமானே !

சந்தனம் பூசி என்னை குளிர்விக்கும் செல்வம்,

ஓராண்டு முன்பு வளைகாப்பு நடத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றிருக்கும் பொழுது என் மூத்த மகள் "அம்மா நான் இங்கேயே இருந்துக்கிறேன். டெலிவரி ஆனதும் ஊருக்கு வரேனே " என்றாள். சின்ன சின்ன சில்லறை சிக்கல்களில் இருந்து அவளைக் காப்பாற்றி கடத்தி கொண்டு வந்திருந்ததால் அவள் கணவரும் "அவள் இங்கேயே இருக்கட்டும் நான் பார்த்துக்கிறேன் " என்றார். அனுபவம் இல்லாததால் இப்படிச் சொல்கிறார்களே என்று இருந்தாலும்  அங்கு மதுரையில் ஆரம்பத்தில் இருந்து  அவளைக் கவனித்த வைத்தியர் பிரசவம் பார்த்தால்  நலமாய் இருக்குமே என்ற எண்ணத்தில் என் மனதை என் மகளிடம் விட்டு நெல்லை வந்து சேர்ந்தேன்.

மதுரையில் உள்ள நண்பர்களிடம் உறவுகளிடம் அவளை ஒப்படைத்து ,குறித்த தேதிக்கு பத்து நாள் இருக்கும் போது வந்து விடுகிறேன் அதற்கு முன் வலி வந்து விட்டால் , நான் வரும் வரை அவளுடன் இருங்கள் என்ற வேண்டுகோளுடன் ஊர் வந்து சேர்ந்தேன். அது ஒரு நரக காலம். அவளை நான் வயிற்றில் சுமந்த அந்த நாள் நினைவுக்கு வந்தது. "இன்று போய் நாளை வா" படம் பார்த்து வயிறு குலுங்க சிரித்து வந்து படுத்த நள்ளிரவில்  வலி எடுத்து கணவர் மட்டுமே துணையாய், நடந்து சென்று பத்தே நிமிடங்களில் என் கைகளில் ஏந்திய என் மகள். அன்று எனக்கிருந்த துணிச்சல் இன்று எங்கே? 

நடு இரவில் உறக்கம் கலைந்து, இருட்டில் துழாவி அலைபேசியை எடுத்து ஒரு மெசேஜ் அனுப்புவேன் " உன் உறக்கம் கலையும் பொழுதில் ஒரு பதில் அனுப்பு மகளே! என் மனம் நிம்மதி அடையும் " என் தவிப்பு புரிந்து சில நேரம் நடு இரவில் அவளிடம் இருந்து அழைப்பு வரும் " அம்மா , பயப்படாதே நான் தைரியமாகத்தான் இருக்கிறேன். நிம்மதியாத் தூங்கு" அவள் தைரியம் என்னால் குலைந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் தைரியமாய் இருப்பது போல் நடிப்பேன். இல்லாத எதிர் மறை விஷயங்கள் தான் மனதை நிறைக்கும். 

இந்த வேதனை நீடிக்க விடாமல் என் பேரன் விரைந்து வந்தான். வலி எடுத்து அவளை மருத்துவ மனைக்கு என் உறவுகள் அழைத்து சென்ற செய்தி கேட்டு உடனே நான் புறப்பட, அட ! மதுரைக்கும் நெல்லைக்கும் இடையே இவ்வளவு தூரமா? இருந்தும் காத்திருந்தான் என் செல்வம். பிறந்த அந்த பச்சிளம் சிசுவை என் மருமகனை நோக்கி மருத்துவர் நீட்ட, அவர் என்னிடம் தரச் சொல்லி கை காட்டினார். கைகளில் ஏந்தும் பொழுது ஒரு நடுக்கம். "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாட்டி" என்று அந்த சிசு என் காதில் முணுமுணுப்பது போல் இருந்தது. 

அந்த செல்ல பேரனுக்கு ஓராண்டு முடிந்து விட்டது. என் தலையில் இன்னுமோர் சிறகு செருகப் பட்டது. 
வாழிய பல்லாண்டு என் செல்லச் சீமானே !

14 comments:

 1. Very cute smile :)

  முடி இழந்த மன்னரா,மன்னர் முடி இழக்கலாமா? வேண்டும் என்றால் தலைக்கணம் இல்லாத மன்னர் என்று சொல்லி கொள்ளுங்கள்

  ReplyDelete
 2. அப்புறம் உங்கள் மன்னர் 101 (followers) பிறந்தநாளுக்கு மொய் என்னுது :)

  ReplyDelete
 3. even though you are paatti ( grand mother) , writing is youthful...

  nice to c u back..

  welcome

  ReplyDelete
 4. உங்களின் செல்ல பேரனுக்கு, எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! He looks very cute!

  ReplyDelete
 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டிக்கு

  ReplyDelete
 6. அத்தை, உங்கள் பேரனுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். பயணம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?
  Take care, Jude.

  ReplyDelete
 7. இந்த அக்குரும்பை பார்த்தீங்களா எறும்பு , நீங்க வைச்ச 101 ல ஒண்ணை யாரோ அடிச்சிட்டாங்க . யாருப்பா அது?
  அவன் சிரிக்கும் சிரிப்பில் எனக்கு உலகமே மறந்து போகும்.

  ReplyDelete
 8. வஞ்சனை இல்லாமல் பாராட்டுறீங்க பார்வையாளன் சந்தோஷமா இருக்கு. நன்றி. புறப்பட்டுடோம்ல .

  ReplyDelete
 9. நன்றி சித்ரா. இப்போவாவது நான் உறவுன்னு ஒத்துக்கோங்க சித்ரா இல்லைனா பார்வையாளன் ரொம்ப கலாய்ப்பார்.

  ReplyDelete
 10. நன்றி வானம்பாடிகள் ஐயா.

  ReplyDelete
 11. jude , நீ கொடுத்த சூப்பர் treatukku ஒரு தேங்க்ஸ். அப்படித்தான்ப்பா கொஞ்சம் வெளிய வந்து பின்னோட்டம் எல்லாம் போடணும். முகமூடியை எடுத்துட்டு வலைப்பூவின் பெயரைக் கொடு.பயணம் சிறப்பாக இருந்தது. அடிக்கடி வருகைதரவும்

  ReplyDelete
 12. கொள்ளை அழகு செல்லச் சீமான் ரூஃபினா..:))

  பிடித்துக் கொஞ்சவேண்டும் போல் இருக்கிறது.. பிள்ளைக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்..

  ReplyDelete
 13. உங்க மன்னரின் சிரிப்பு எல்லாரையும் மயக்கிவிடும் :)

  அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களும்!

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!