Bio Data !!

13 March, 2011

பகல் வீடு!!

அது ஓர் முதியோர் இல்லம்.  அதன் பெயர் பகல் வீடு. பெயர்க்காரணம் நாள் முழுவதும் தங்குபவர்கள் மட்டும் இன்றி பகல் பொழுது மட்டும், வீட்டில் உள்ளவர்கள் வெளியே போகும் நேரம் வந்து மாலையில் வெயில் தாழ்ந்ததும் திரும்பி விடலாம். ரிசெப்ஷன் எல்லாம் போட்டு அங்கே இருக்கும் முதியவர்களை கூட இளைஞர்கள் ஆக்கும் கூடம். 

எனக்கு அந்த பகல் வீட்டைப் பற்றி தகவல் கிடைத்ததும் போய் பார்த்து வரலாமே என்று எண்ணம் வந்து விட்டது. என் மனைவி இறந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு வித தனிமை என் குணாதிசயங்களை மாற்றிக் கொண்டு இருப்பதை மெல்ல உணரத் தொடங்கி விட்டேன்.  இது வரை இல்லாத விதமாக தந்தை ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று மகன் குழம்புவதையும், சில நேரங்களில் பொறுமை என் எல்லை மீறிப் போவதால் குடும்ப அமைதி கெடுவதையும் பார்த்ததால் இந்த முடிவு. மகனிடம் சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் 
"இப்படியே கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன் " என் மருமகளிடம் சொல்லி கிளம்பி விட்டேன். 
"பகல் வீடு ! பகல் வீடு !  சார் பகல் வீடு இறங்கணும்னு சொன்னீங்களே?" கண்டக்டர் என் அருகில் வந்து குரல் கொடுத்ததும் திடுக்கிட்டு விழித்தேன். அதென்னமோ இப்போல்லாம் கோழி தூங்குறதைப் போல கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் கண் அசந்து விடுகிறது. எல்லோரும் தூங்குற நேரம் துளி கூட தூக்கம் வர்றதில்லை. ஏதாவது படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரிவதில்லை. விடி காலை ஐந்து மணிக்கு மருமகள் அடுப்படியில் புழங்கத் தொடங்கிய சத்தம் கேட்டு புத்தகத்தை மூடி வைத்திருக்கிறேன். 

"ஏம்ப்பா ! ராத்திரி தூங்கவே இல்லை போலிருக்கு " மகன் கேட்கும் போது அதில் நான் தூங்கவில்லை என்ற அக்கறையை விட தன் தூக்கம் கெட்டதே என்ற கோபம் இருப்பது போல் தெரியும். 

மெல்ல இறங்கி பகல் வீட்டினுள் சென்றேன். ரிசெப்ஷனில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி. கையில் ஜோ டி க்ரூஸின் "ஆழி சூழ் உலகு"  அவள் ஈடுபட்டு படிப்பதைக் கெடுத்து விடக் கூடாது என்று மெதுவாக அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். எனக்குள் ஏதோ "இது தான், இது தான் உனக்கான இடம் " என்று சொல்லிக் கொண்டே இருந்தது. 

உள்ளுணர்வு உந்த புத்தகத்தில் இருந்து தலை நிமிர்த்தி, என்னைப் பார்த்தவள் " சாரி சார்,  என்னை கூப்பிட்டு இருக்கலாமே. " என்றாள்.
"ரொம்ப ஆர்வமா படிச்சிட்டு இருந்த மாதிரி இருந்தது. அதான்..." என்றேன். 
"ஆமாம் சார், பெண்ணாப் பிறக்கிறதே ரொம்ப பாவம். "
"அந்த கர்ப்பிணிப் பெண் சாரா கற்பழிக்கப் படறது என் நினைவில் இருந்து அழிய ரொம்ப காலம் ஆச்சு. " 
திடுக்கிட்டு " நீங்க வாசிச்சிருக்கீங்களா?" 
"என் நுரையீரலுக்கான ஆக்சிஜன் தர்றதே புத்தகங்கள் தான்."
"என்ன விஷயமா வந்திருக்கீங்க" 
"ச்சும்மா பார்த்து விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்" 

அவள் இப்போது தன் பணிக்கு திரும்பி இருந்தாள். "இங்கே தங்குவதற்கு தனித்தனி அறைகள் எல்லா வசதிகளோடும் இருக்குது. மாதம் ஐந்தாயிரம் செலுத்தணும்.அது தவிர குடும்பத்தோட இருக்க விரும்பறவங்க பகல் நேரம் மற்ற எல்லோரும் வெளியே போற நேரம் மட்டும் இங்கே வரலாம். அதுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கறோம். எங்கள் வாகனமே உங்களை வீட்டில் வந்து அழைத்து வந்து விடும், மதிய உணவு இங்கேயே கொடுத்திடுவோம். மாதம் இரண்டு அல்லது மூன்று பேரை உரை நிகழ்த்த அழைப்போம். மற்றபடி புத்தகங்கள், தொலை காட்சி பெட்டி, இன் டோர் கேம்ஸ் எல்லாம் இருக்குது. வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பதற்கு உகந்த இடம். இதை மிஸ்டர் டேனியல் ஒரு சேவையாக செய்து வருகிறார். பணம் வாங்குவதற்கு காரணம் எந்த ஒரு செயலுக்கும் விலை இருந்தால் தான் மதிப்பு இருக்கிறது என்பதற்காகத்தான். 
ஒரு நீண்ட உரை ஆற்றி முடித்திருந்தாள். அவள் பேசியதே இந்த பணியை எவ்வளவு விரும்பி செய்கிறாள் என்பதை உணர்த்தியது. 
"சரிம்மா, வீட்டில பேசி முடிவு எடுத்திட்டு வரேன். எனக்கு என்னமோ இப்போ எல்லாம் என் வயதை ஒத்தவர்களுடன் இருந்தால் தான் ஒரு படபடப்பு இல்லாமல் நிதானமாக இருக்க முடியும் போல் தோன்றுகிறது. மகன் ஒத்துக் கொள்ள மாட்டான். பார்ப்போம். உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இங்கே வந்தால் நாம் பகிர்ந்து கொள்ள பொதுவான விஷயம் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன். மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி விடை பெற்றேன்.
(இன்னும் வரும்)


13 comments:

 1. " கேட்கும் போது அதில் நான் தூங்கவில்லை என்ற அக்கறையை விட தன் தூக்கம் கெட்டதே என்ற கோபம் இருப்பது போல் தெரியும். "

  " கையில் ஜோ டி க்ரூஸின் "ஆழி சூழ் உலகு" அவள் ஈடுபட்டு படிப்பதைக் கெடுத்து விடக் கூடாது என்று மெதுவாக அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன்"


  ஐ ஆம் பேக் அப்படீன்னு சொல்லிட்டு , மீண்டும் எழுத்து பயணத்துக்கு தயாராயிடீங்கனு இந்த வரிகள் சொல்லாம சொல்கின்றன...

  நல்ல ஆரம்பம் .சூப்பர்

  ReplyDelete
 2. அத்தை , கடைசி வரி... மீண்டும் சிந்திப்போமா-வா? மீண்டும் சந்திப்போமா-வா?

  -Jude

  ReplyDelete
 3. வித்யாசமான கதையா இருக்கு ரூஃபினா.. அடுத்து என்னன்னு யோசிக்க வைக்குது.. இது போல பெரியவங்க பிரச்சனை பற்றியும் நாம எழுதணும்னு எண்ணத் தோன்றிய கதை டா இது..

  ReplyDelete
 4. www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

  New Classified Website Launch in India - Tamil nadu

  No Need Registration . One time post your Articles Get Life time
  Traffic. i.e No expired your ads life long it will in our website.
  Don't Miss the opportunity.
  Visit Here -------> www.classiindia.com

  ReplyDelete
 5. நன்றி பார்வையாளன். பேக் னு தான் நினைக்கிறேன். கட்டப்பையா போயிறக் கூடாது.

  ReplyDelete
 6. திருத்தி விட்டேன் மருமகனே ! கதை பரவா இல்லையா?

  ReplyDelete
 7. பேரன் எடுத்ததும் வயசாயிட்டதால பெரியவங்களைப் பற்றி எழுதறேனோ ? அடுத்து ஜில்லுனு ஒரு காதல் கதை எழுதிடணும் நன்றி தேனம்மை

  ReplyDelete
 8. "சின்ன வயதில நான், ஆண்டு விடுமுறையில் சொல்லும் திகில் கதைகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. எல்லோருக்கும் பத்து வயதுக்குள் தான் இருக்கும்"

  எனக்கும் சின்ன வயதில் கதை கேட்ட அனுபவம் உண்டு... சித்திகள், பாட்டிகள், அத்தைகள், அக்காக்க்ள் என க்தை கேட்டு வளர்ந்தவன் நான்...

  எனவே...
  ”அடுத்து ஜில்லுனு ஒரு காதல் கதை எழுதிடணும் நன்றி தேனம்மை”

  இதை ஒத்தி வைத்து விட்டு, அடுத்து திகில் கதை எழுதுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

  ReplyDelete
 9. ஆமா அத்தை, first-part நல்லா இருந்துச்சு, அடுத்த part-க்கு வெயிட்டிங் ... - Jude

  ReplyDelete
 10. சுவாரசியமாக நகர்கிறது.. காத்திருக்கிறோம் ஆவலுடன்..

  ReplyDelete
 11. jude இதுக்கு பேர் தான் கேட்டு வாங்குறது.

  ReplyDelete
 12. பாரத்..... பாரதி நன்றி, நீங்கள் இளையவர்களை இருந்தால் இந்தக் கதை பிடித்தது என்பதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.

  ReplyDelete
 13. ப்ராக்டிக்கலான உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!