Bio Data !!

10 July, 2011

பூதம் காத்த புதையல் !!

எந்த ராசா ஆரம்பித்து வைத்தாரோ லட்சம் கோடிகளை? அதை தொடர்ந்து பல லட்சம் கோடிகள். தற்போதைய லேட்டஸ்ட் லட்சம் கோடி திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மனாபசாமி கோயிலில் இருக்கும், ஐந்து லட்சம் கோடிகளுக்கும் மேலான அரச நகைகள், வைரம், வைடூரியக் கற்கள். கூகிள் எர்த் இல் கடந்த ஒரு வாரமாக அதிகமாக பார்க்கப்பட்ட இடம் இது தானாம். தகவல் அறியும் சட்டம் என்பது ஒரு பாமரனுக்கு கிடைத்துள்ள புதையல். அதன் கீழ் தான் முதலில் இந்த பணி தொடங்கியது. ஆரம்பிக்கும் போது யாருமே இந்த அளவுக்கு விஷயம் தீவிரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை 
கோவிலில் மொத்தம் ஆறு அறைகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் திறக்கப்படாமல் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு அறையாக திறக்கத் திறக்க நகைக் குவியல்கள். ஐந்து அறைகளை திறந்து விட்டார்கள். இன்னும் ஒன்று பாக்கி. அதை திறந்தால் நாட்டுக்கு கேடு என்பதான ஐதீகத்தில் அதில் தாமதம். ஆனால் அதுவும் திறக்கப்பட்டு விடும். அந்த அறையின் கதவில் பாம்பு படம் வரைந்திருப்பதாகவும், அங்குள்ள நகைகளை அந்த பாம்பு காவல் காக்கலாம் என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது.
 
இன்னும் மூன்று அறைகள் குளத்தினுள் இருக்கும் கிணறுகளாய் இருக்கலாம் என்று அரச குடும்பத்தின் வாரிசுகள் தகவல் தந்திருக்கிறார்கள்.
அரசருக்கு இத்தனை நகைகள் எங்கிருந்து கிடைக்கும்?
நாட்டு மக்கள் வரிப்பணமாக செலுத்தியதாக இருக்கும்.
ஆனந்த சயனத்தில் இருக்கும் அனந்த பத்மனாபருக்கு பக்தர்கள் அளித்த காணிக்கையாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் நாய் உருட்டும் தெங்கம்பழமாக யாருக்கும் உதவாமல் இருப்பது சரியல்ல என்று காசர்கோடில் இருந்து ஒரு இயக்கம் இந்த செல்வங்கள் ஏழை மக்களுக்கு செலவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.
ஒரு சொடுக்கு போடும் நேரத்தில் திருப்பதி சாமியை விட பணக்கார சாமியாகி விட்டார் பத்மநாபர். வயிற்றுக்கே எதுவும் இல்லை என்றாலும் கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் நம் மக்களின் பாவப்பட்ட மனதின் மற்றுமொரு தரிசனம் இது

சாயிபாபா இறந்த பின் அங்கே இருப்பதாக சொல்லப்படும் சொத்துக்கள், ஸ்விஸ் வங்கியில் இருப்பதாக சொல்லப்படும் பணம், தற்போது திருவனந்தபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் புதையல் இவ்வளவுக்குப் பின்னும் நிலவலாமா நம் நாட்டில் வறுமை?  இன்னும் ஹோட்டல் வாசல்களில் ஒட்டிய வயிறுடன், கையில் குழந்தையுடன் பிச்சை எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வீட்டின் வறுமையை போக்க,  வேலைக்குப் போய், கிடைத்த ஒரு விடுமுறை நாளில் வாதாம் பருப்புக்காக உயிரை விடும் பாலகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வயதின் காரணமாக தோன்றும் நோய்களோடு மட்டுமல்லாமல் வறுமையோடும் போராடும் வயோதிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்று மாறும் இந்த நிலைமை?

ஆழ்ந்து சிந்தித்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. ஏழை நாடாக இருக்கலாம், பணக்கார நாடாக இருக்கலாம். இப்படி ஏழைக்கும் பணத்தில் மிதப்பவருக்கும் இடையில் இப்படி ஒரு அதல பாதாள இடைவெளி இருக்கலாமா? சிந்தியுங்கள் தோழர்களே?

டிஸ்கி :எங்கள் வீட்டு குட்டி செல்லம் இப்போ தான் நடக்கத் தொடங்கி இருக்கிறது. அது தடுமாறும் போது உடலை பின் புறம் வளைத்து பாலன்ஸ் செய்து கொள்கிறது. அதற்கு புவி ஈர்ப்பு விசையை சொல்லிக் கொடுத்தது யார்?

15 comments:

 1. அதை திறந்தால் நாட்டுக்கு கேடு என்பதான ஐதீகத்தில் அதில் தாமதம்//

  ஆனால் அம்மா நான் கேட்ட வரையில் அந்த கதவினை திறக்க முடியவில்லை என்றும் அதற்காக பூட்டு வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் சொல்லபட்டதே.!!

  ReplyDelete
 2. இப்படி ஒரு அதல பாதாள இடைவெளி இருக்கலாமா?//

  இத எல்லாரும் சொல்லிட்டாங்களே மா.. இந்த இடைவெளி போக்க என்ன செய்யலாம்னு சொல்லியிருக்கலாமே!

  ReplyDelete
 3. எங்கள் வீட்டு குட்டி செல்லம் இப்போ தான் நடக்கத் தொடங்கி இருக்கிறது. அது தடுமாறும் போது உடலை பின் புறம் வளைத்து பாலன்ஸ் செய்து கொள்கிறது. அதற்கு புவி ஈர்ப்பு விசையை சொல்லிக் கொடுத்தது யார்? //

  உங்களுக்கே இது ஓவரா தெரியல!? குழந்தைய ரசிக்கிறத விட்டுபுட்டு இப்படிலாமா செய்வாங்க.. சோ பேட்

  ReplyDelete
 4. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா......

  ReplyDelete
 5. //எங்கள் வீட்டு குட்டி செல்லம் இப்போ தான் நடக்கத் தொடங்கி இருக்கிறது. அது தடுமாறும் போது உடலை பின் புறம் வளைத்து பாலன்ஸ் செய்து கொள்கிறது. அதற்கு புவி ஈர்ப்பு விசையை சொல்லிக் கொடுத்தது யார்?//
  இயற்கை அன்னை!

  ReplyDelete
 6. ஹூம்... ஆண்டிலியாவிலிருந்து பார்த்தால் தாராவியும் தெரியும்தானே? என்ன சொல்ல..

  சமீப காலமாக ஒரே லட்சம், கோடி, லட்சத்துக் கோடி என்றுதான் செய்திகள் அடிபடுகின்றன. யாரோ சொன்னார்களாம், “இந்தியர்கள் ஏழைகள்; ஆனால், இந்தியா ஏழை நாடல்ல” என்று!! அரசின் நடைமுறைகள் மாறினாலொழிய வறுமையும் ஒழிக்கப்பட வழியில்லை.

  ReplyDelete
 7. டிஸ்கி - ரசித்தேன்; ஆனா, அதற்கான இடம் இந்த பதிவில்லையோன்னு தோணுது!! ;-))))))

  ReplyDelete
 8. ஆறாவது கதவு திறப்பதில் இரண்டும் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது, தம்பி.
  அதல பாதாளம் நிரம்ப என்னிடம் ஒரு வழி உண்டு. அவரவர் வசதிக்கேற்ப எண்ணிக்கையில் ஏழைகளின் ஏழ்மையை போக்கலாம். சிறுக சிறுக ஆரம்பித்தாலே பாதாளம் நிரம்பி விடலாம்

  ReplyDelete
 9. குழந்தையை ரசித்ததால் தான் வேளை கெட்ட வேலையில் டிஸ்கியே தம்பி

  ReplyDelete
 10. மனோ சார் பதிவுலக சந்திப்புக்கு வரும் போது அங்கே இருந்து ஆளுக்கு ரெண்டு வளையலாவது கொண்டு வந்திருக்கலாம் இல்ல

  ReplyDelete
 11. சங்கரலிங்கம் சார், குழந்தையின் ஒவ்வொரு செய்கையும் சிலிர்த்து போக செய்கிறது

  ReplyDelete
 12. ஹுசைனம்மா டிஸ்கி பொருத்தமில்லைன்னு எனக்கும் தெரிந்தது. நான் போட்ட முதல் டிஸ்கி இது தான். காரணம் அது தான் பதிவின் பொருளாய் வைத்திருந்தேன். அதன் இடத்தை பத்மநாப சாமி பறித்துக் கொண்டார்

  ReplyDelete
 13. சகோ அருமையா சொல்லி இருக்கீங்க...இந்த விஷயத்தில் நம்ம மக்களுக்கு சரியான சகோதரத்துவம் இல்லை என்பதே உண்மை!....குட்டி நடப்பது இயற்கையின் அழகான கண்ணுக்கு தெரியாத விசயாலோ!

  ReplyDelete
 14. நன்றி விசாலி தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக."என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ?
  என் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில் " னு அன்றே எழுதி வைத்தான்

  ReplyDelete
 15. டிஸ்கிக்கான பதில் இயற்கை

  மனோ எனக்கு மட்டும் கூலிங்க் கிளாச் வாங்கிட்டு வந்து தந்தானே... விடாதீங்க அவனை. ஹா ஹா

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!