Bio Data !!

17 July, 2011

தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்

விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு முகம் எடுக்கிறார்.
இதில் அப்பாவி, மன வளர்ச்சி குன்றியவர் முகம்.
பெயர் போடும் போது வலைப்பதிவர் அஜயன் பாலாவுக்கு நன்றி போடுகிறார்கள் அவர் பங்கு     இதில் என்ன  என்று கேட்க வேண்டும்
முதல் சீனில் ஓடி வரும் விக்ரம் அடி பட்டு கீழே விழுவதும், அவரைத்தாண்டி, 'மன நலம் மிகுந்தவர்கள்' சட்டை செய்யாமல் செல்வதும்,
சிறிது  நலமாகி  எழுந்து  செல்லும் விக்ரம்  அடிபட்டு  கீழே கிடக்கும்  மற்றவனுக்கு  உதவி  செய்வதும், வீணாகச் செல்லும் தண்ணீர் குழாயை அடைப்பதும் , ஒரு ஆள் கூட  இல்லாத சிக்னலில் பச்சை விளக்கு எரியும் வரை நின்று செல்வதும், மன நலம் குன்றியது விக்ரமா அவரைச் சுற்றியுள்ளவர்களா என யோசிக்க வைக்கிறது

அங்கேயே டாப் கியரில் தொடங்கும் டைரக்டர் விஜய் இறுதி வரை அந்த வேகம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் .
இரண்டு பாடல்கள் விக்ரம் தன் சொந்த குரலில் பாடி இருந்தாலும் "ப பா ப பா வருதே எனக்கு பாப்பா" பாடலில் நல்ல உணர்வு கொண்டு வந்திருக்கிறார்.


அடுத்து சின்ன பொண்ணு சாரா. பேபி அஞ்சு, பேபி ஷாலினி போன்ற சில செல்லக் குழந்தைகள் திகட்ட திகட்ட அத்தனை பேரையும் பேச வைத்திருக்கும் அந்த வரிசையில் சாராவும் வருவார். துல்லியமான உணர்வுகளை புரிந்து வெளிக் கொணர்ந்திருக்கிறார்.  அவள் தந்தையிடம் காட்டும் பாசம் எந்தத் தந்தைக்கும் தனக்கு அப்படி ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையை துளிர்க்க வைக்கும். கோர்ட்டில் நாசர் வாதாடிக் கொண்டிருக்க கூண்டுக்குள் இருந்து தந்தையும், தூரத்தில் இருந்து மகளுமாக சைகை மூலம் சமாதானம் ஆகிக் கொள்வது ரசிக்க வைக்கிறது.

அனுஷ்கா  எனக்கு மிகவும் பிடித்த நடிகை. பெரிய பொட்டும், நீள கூந்தலுமாக அருந்ததி அளவு வேறு எந்த படத்திலும் மிரட்டவில்லை என்றாலும் கோர்ட்டில் வாதாடும் போது மறைந்த சுஜாதாவின் 'விதி' யை நினைவூட்டுகிறார். படத்தின் ஆரம்பத்தில் விக்ரமிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் போதும், அதே நேரம் சந்தானத்தை கோபப்பார்வை பார்க்கும் போதும் அவர் முகத்தில் பல வித பாவனைகள் நர்த்தனம் ஆடுகின்றன. கிடைத்த பாலை சிக்ஸர் அடிக்காம விடுவதில்லை. ஊரின் மிகப் பெரிய ஒரு வக்கீலை கதாநாயகி என்ற காரணத்தாலேயே வென்று விடுவதாக காட்டாமல் அந்தக் கூட்டத்தின் ஒரு 'வெள்ளை ஆடு' வெற்றிக்கு உதவுவதாக காட்டுவதில் இயக்குனர் யதார்த்தத்துக்கு முயற்சி செய்வது தெரிகிறது. இருந்தாலும் இடி க்கு பயந்து
 அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் காதல் தோன்றி கனவுப் பாட்டு போட்டு அதை சரி செய்து விடுவது தான் உறுத்தல்.

இந்த படத்தை பெண்களே இல்லாமல் ஒரு புது விதமாக முயற்சி செய்து பார்த்திருக்கலாம். தமிழ் நாட்டு ஆண்கள் மேல் இயக்குனர்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு நம்பிக்கை வரவில்லை என நினைக்கிறேன். மதராச பட்டினம் என்னும் ஓவியத்தை  படைத்த இயக்குனர் விஜய் இதில் ஒரு நவீனம் படைத்திருக்கிறார். பாராட்டுக்கள் விஜய் புது புது முயற்சிகளுக்கு!!
கேமரா உறுத்தல் இல்லாமல் கதையோடு ஒன்றிச் செல்கிறது.
'மேலே சொல்லு' னு சொல்றீங்களா,
இன்னும் படம் பார்க்கலைனா உடனே கண்டிப்பா 'தியேட்டரில் ' சென்று பாருங்கள்.
பார்த்தாச்சுன்னா இன்னும் ஒரு ஒருமுறை பாருங்கள், நாம் கவனிக்காத விஷயங்கள் கண்ணில் படும், நல்ல முயற்சிகளுக்கு நாம் செய்யும் பதில் மரியாதை இது தானே ?

31 comments:

 1. என்ன இடையில் பெரிய வெற்றிடம்னு பார்க்கிறீங்களா மேட்டர் இருக்கு அங்கே ஒரு முறை சொடுக்கிப் பாருங்கள்

  ReplyDelete
 2. இன்னும் படம் பார்கலை ..விமர்சனம் நன்றாக உள்ளது ..
  நீங்களும் வித்யாசம் கான்பிக்கிறீங்க உங்க ப்ளாக் ல .அந்த வெற்றிடம் ..

  ReplyDelete
 3. விமர்சனம் மற்றும் உங்க வித்தியாசமான முயற்சிக்கும் ஒரு சபாஷ்!

  ReplyDelete
 4. நன்றி பாபு, படம் கண்டிப்பா பாருங்க.அருமையா இருக்கு

  ReplyDelete
 5. அதி விரைவாக படம் பார்த்து , விமர்சனமும் எழுதிவிட்டீர்களே ! கிரேட் .அதி விரைவாக படம் பார்த்து , விமர்சனமும் எழுதிவிட்டீர்களே ! கிரேட் .

  ReplyDelete
 6. மிகச் சிறப்பான படம் பார்வையாளன் . நடிப்பில் விக்ரமுக்கும் பேபி சாராவுக்கும் தான் போட்டி

  ReplyDelete
 7. >>அவரைத்தாண்டி, 'மன நலம் மிகுந்தவர்கள்' சட்டை செய்யாமல் செல்வதும்,

  அழகிய கவனிப்பு

  ReplyDelete
 8. >>. இருந்தாலும் இடி க்கு பயந்து
  அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் காதல் தோன்றி கனவுப் பாட்டு போட்டு அதை சரி செய்து விடுவது தான் உறுத்தல்.

  அதைத்தான் சினிமா உலகில் காம்ப்ரமைஸ் என்பார்கள் . நோ பிராப்ளம்..

  ReplyDelete
 9. >>என்ன இடையில் பெரிய வெற்றிடம்னு பார்க்கிறீங்களா மேட்டர் இருக்கு அங்கே ஒரு முறை சொடுக்கிப் பாருங்கள்

  ஹா ஹா பெரிய டெக்னிக்கல் பதிவர்னு நினைப்பு ஹா ஹா பட் ஐ லைக் தட் ஐடியா.

  ReplyDelete
 10. நன்றி ஷர்புதீன் உங்க ப்ளாக் ல கமெண்ட் போடுறதை simplify பண்ணுனீங்களா?

  ReplyDelete
 11. அழகிய கவனிப்பு
  thanks sibi
  பெண்கள் இல்லாத சினிமா படம் எடுப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன சிபி

  ReplyDelete
 12. சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!

  ReplyDelete
 13. முகம் தெரியாத நல்ல உள்ளங்களையும் வாழ்த்த வழி செய்யும் இணைய தளம் வாழ்க! வாழ்க !

  ReplyDelete
 14. //கவனிக்காத விஷயங்கள் கண்ணில் படும், நல்ல முயற்சிகளுக்கு நாம் செய்யும் பதில் மரியாதை இது தானே ?//


  உண்மை தான்.
  வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. //கவனிக்காத விஷயங்கள் கண்ணில் படும், நல்ல முயற்சிகளுக்கு நாம் செய்யும் பதில் மரியாதை இது தானே ?//


  உண்மை தான்.
  வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. நன்றி இந்திரா எதையும் செய்யாதீங்கன்னு சொன்னா கண்டிப்பா செய்ற நம்ம மக்களோட மென்டாலிட்டி புரிந்து வைத்த பெயர் "படிக்காதீங்க" Good

  ReplyDelete
 17. nice review...read my review if u have time http://ags70mm.blogspot.com/2011/07/deiva-thirumagal.html

  ReplyDelete
 18. நல்ல விமர்சனம்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. விமரிசனம் படம் பார்க்க வைக்கும். நன்றி

  ReplyDelete
 20. நன்றி அருண் குஹன் செந்தில் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக உங்கள் விமர்சனமும் பார்த்தேன். ஆங்கிலத்தில் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு ஆசை வந்திருக்கு

  ReplyDelete
 21. நன்றி ஜா ரா ரமேஷ் பாபு. தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

  ReplyDelete
 22. நன்றி சங்கரலிங்கம் சார், கண்டிப்பா பாருங்க. சுபெர்ப் படம்

  ReplyDelete
 23. தங்கள் விமர்சனம் படித்தவர்கள்
  நிச்சயம் படம் பார்க்காம இருக்கமாட்டர்கள்
  அவ்வளவு அருமை
  உடன் பார்த்து விமர்சித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 24. உண்மை தான் ரமணி சார், எனக்கு ஏற்கனவே அப்பா, மகள் உறவில் ஒரு பிரேமை உண்டு(தந்தையை பதினாறு வயதில் இழந்ததால்) இந்த படத்தில் அந்த உறவு மிக அழகாக புனையப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 25. இந்த படத்தை பெண்களே இல்லாமல் ஒரு புது விதமாக முயற்சி செய்து பார்த்திருக்கலாம். தமிழ் நாட்டு ஆண்கள் மேல் இயக்குனர்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு நம்பிக்கை வரவில்லை என நினைக்கிறேன்./// சரிதான்..:))

  உணவுலகம் போய் தேடிப் தேடிப் பார்த்தேன். எந்த விடியோவில் நீங்க பேசி இருக்கீங்கப்பா..;((

  ReplyDelete
 26. என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
  என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

  ReplyDelete
 27. நான்காவது முறை பார்க்க போகிறேன். மனசு அலைகிறது நல்ல படம் தேடி. இந்த படம் ஓடுற வரைக்கும் என்னால முடிஞ்ச அளவு தியேட்டர்ல பார்க்க போறேன்.

  ReplyDelete
 28. அழகிய திரைப்பட விமர்சனத்துக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ ...

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!