Bio Data !!

04 September, 2011

'star vijai nite' -Tirunelveli

முக்கிய செய்தி !! 
நண்பர் "உணவு உலகம்" சங்கரலிங்கம் அவர்களின் தாயார் 3.9.11 அன்று மரித்து விட்டார். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனையை உரித்தாக்குகிறோம் !! 
 
3.9.2011 அன்று நண்பர் ஒருவரிடம் இருந்து அலைபேசிக்கு அழைப்பு நெல்லையில் நடைபெறப் போகும் 'star vijai nite'  க்கான டிக்கெட்களை பெற்றுக் கொள்ளுமாறு.AIRTEL SUPER singer போட்டியாளர்கள் வருவதாகப் பார்த்ததும் , அதிலும் என் வீட்டுக்காரருக்கு பிடித்தமான பூஜா & எனக்கு பிடித்த சத்ய பிரகாஷ் இருவரும் வந்ததால் பயணப் பட்டோம்.நிகழ்ச்சி நடக்கும் இடம் நெல்லை டவுன் பொருட்காட்சித் திடல். எப்போ தான் நேரத்துக்கு போக முடிஞ்சிருக்கு, நுழையும் போதே இரண்டு பாடல்கள் முடிந்ததாய் தீபக்கின் அறிவிப்பு. தீபக்கும் பாவனாவும் அறிவிப்பாளர்கள். DD மிஸ்ஸிங். 

 கார் பாஸ், சைக்கிள் பாஸ் மாதிரி ரெட் பாஸ், ப்ளூ பாஸ் எல்லாம் கொடுத்து பிரித்து வைத்திருந்தார்கள். எட்டத்தில் மேடையும் கிட்டத்தில் ஒரு giant size  ஸ்க்ரீனும் தெரியும் இடத்தில் வாட்டமாக அமர்ந்து கொண்டோம். 

நிகழ்ச்சியின் சிறப்பு பெரியவர் P.B. Srinivaas அவர்கள் கலந்து கொண்டதுதான். கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்து வந்தார்கள். இந்த தள்ளாத வயதிலும் தானே எழுதிய ஒரு பாடலை மேடையில் பாடினார். 
                                     "காலங்களில் வசந்தம் விஜய் டிவி 
                                        கலைகளில் ஓவியம் விஜய் டிவி
                                        மாதங்களில் மார்கழி விஜய் டிவி
                                        மலர்களில் மல்லிகை விஜய் டிவி"
. இப்படி போனது பாடல். எல்லோரும் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். கை தட்டுங்கள், ஆரவாரப் படுத்துங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நெல்லை ரசிகர்கள் கொஞ்சம் இறுக்கமான ரசிகர்கள் தான்

   தீபன் சக்கரவர்த்தி, அவரது அண்ணன் T.L மகாராஜன் இருவரும் பாடினார்கள். மாணிக்க விநாயகம் தூள், சாமி படப் பாடல்களை பாடினார். இந்த வயதிலும் அவரது energy  வியக்க வைத்தது. இரு கைகளிலும் பெரிய பெரிய மோதிரங்கள். இடது கையில் வெள்ளைக் கல் மோதிரங்கள் மூன்று. வலது கையில் சிவப்பில் ஒன்று, பச்சையில் ஒன்று பல வண்ணங்களில் ஒன்று. மாணிக்க விநாயகம் சார், தங்கம் விலை உச்சத்தில் இருக்குது பத்திரம். 

  சத்ய பிரகாஷ் பாடும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. ரசிகர்கள் கேட்கவில்லை என்று இரு கைகளை உயர்த்தி ஆட்டினார்கள். போகச் சொல்கிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ முகத்தில் கொஞ்சம் மேடை பயம் தெரிந்தது. பூஜா 'பட்டத்து ராணி' போல் மஞ்சளும் பச்சையும் கலந்த சுரிதார் அணிந்து வந்து அதே பாடலை பாடினார்.ஒரிஜினல் பாடலை பாடியவரின் குரலில் இருக்கும் மயக்கம் மறைந்திருந்தது. 

   சாய் சரணும் மன்மத ராசா பாடிய ராணி மாலதியும் 'துள்ளுவதோ இளமை" ரீமிக்ஸ் பாடலை பாடினார்கள். மாலதி துள்ளுவதோ இளமை, துள்ளுவதோ தனிமை " என்று தவறாக பாடினார் சாய் சரண் சரியாக பாடுவதைக் கவனித்து பல்லவி முடிந்ததும் "தேடுவதோ தனிமை" என்று சரி செய்து கொண்டார். I appreciate your dedication sai saran !

    மாளவிகாவுக்கு தான் பலத்த கரகோஷம். ரசிகர் ஒருவர் "மாளவிகா" என நரம்பு புடைக்க கத்தியதாக தீபக் விமர்சித்தார். எனக்கு பக்கத்தில் இருந்த ஒருவர் "மாளவிகா" னு பேர் வைச்சாலே கும்முன்னு தான் இருப்பாங்களோ என்றார். நெல்லைக் குசும்பு!! மாளவிகாவின் குரல் சிறப்பாக இருந்தாலும் எதோ ஒன்று அவரது பாடலை முழுமையாய் ரசிக்க முடியாமல் தடுக்கிறது. அது தான் அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வராமல் தடுத்தது. அது என்னனு கண்டு பிடிச்சு சரி பண்ணினால் பரிசு பெற வாய்ப்புண்டு. 

     தொடர்ந்து பழைய பாடல்களாக பாடிக் கொண்டே இருந்ததால் ரசிகர்கள் கலையத் தொடங்கியதும் உஜாலாவுக்கு மாறி  குத்துப் பாடல்கள் மேடைக்கு அணி வகுத்தன. சந்தோஷும் தன்யஸ்ரீயும் பாடிய பாடலின் நடுவே பூஜாவும், மாளவிகாவும் வந்து சில நடன அசைவுகள் செய்து விலகினார். மாளவிகா உங்கள் பாடல் மட்டும் அல்ல நடனமும் நளினமாக இருக்கிறது. போட்டியாளர் ஸ்ரீநிவாசும் பூஜாவும் "என் உச்சி மண்டையில சுர்ருங்குதே.. " என்ற மிகத் தத்துவார்த்தமான பாடலை பாடினார்கள். ஸ்ரீநிவாசுக்கு பரிசு, கிடைக்கும் கிடைக்காது என்பதைப் பற்றி எல்லாம் பெரிய கவலை இல்லை தான் பாடும் பாடலை ரசித்து பாடுகிறார்.

 பெண் அறிவிப்பாளர் திரு மாணிக்க விநாயகம் தனக்கு ஜோசியம் சொன்னதாகவும் அது பலித்து விட்டதால் தீபக்குக்கும் பார்த்து சொல்லுமாறு  சொன்னார். அதை சொன்னால் ஆபத்தாக முடியும் என்று மா. வி சார் சொல்லவும் தீபக் அவர் காலை தொட்டு வணங்கினார். என்ன நடக்குது தீபக்?

    நாங்கள் நீண்ட தொலைவில் இருந்து வந்திருந்ததால் நிகழ்ச்சி நீண்ட நேரம் செல்லும் என்று நினைத்து எழுந்தோம். ஆனால் சரியாக பத்து மணிக்கு முடித்து விட்டார்கள். இந்த மாதிரி நிகழ்சிகளில் ஆரம்பங்களில் வகுப்பு வாரியாக விடுவார்கள் பின்னர் எல்லாம் கலைந்து ஒரு ஒழுங்கின்மை வந்து விடும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் securities  முடியும் வரை நின்று இடையில் வெளியே போனவர்கள் திரும்பி வந்தால் கூட டிக்கெட் செக் செய்தார்கள். சிறப்பு பாராட்டுக்கள்!!

எனது கணிப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்குள் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பும் கொடுக்கப் பட்ட வரிசையிலேயே.

  பூஜா - அதிக வாய்ப்பு இவருக்கு தான். முகத்தில் பாடலுக்கேற்ற உணர்வை இன்னும் கொஞ்சம் கொண்டு வரலாம்.வாழ்த்துக்கள்!!

    சத்ய பிரகாஷ் - முதல் பரிசு  ஒருவருக்கு மட்டும் தான் கிடைக்க முடியும் அதை நினைத்து கூலாக பாடுங்கள். பூஜாவுக்கும் உங்களுக்கும் தான் பாடும் திறமை யுடன் உங்கள் குரலும் ஆண்டவன் கொடுத்த வரம்.  வாழ்த்துக்கள் !

   சாய் சரண் - உங்கள் dedication க்கு ஒரு பாராட்டு. குரல் உயர்த்தினால் சுதி பிசகுவது தெரிந்து விடுமோ என suttle  ஆக பாடுகிறீர்கள். குரல் உயர்த்தி பாடுங்கள். வாழ்த்துக்கள்!!

  சந்தோஷ் - அநேகம் பேருக்கு பிடித்த பாடகர். முறைப்படி இசை பயிலாதது காரணமாக இருக்கலாம். தன்னம்பிக்கை மட்டும் தான் மிக வலுவான ஆயுதம் வாழ்த்துக்கள்!!

  மாளவிகா - இங்கு பரிசு கிடைக்கிறதோ இல்லையோ commercial  ஆக மிகப்  பெரிய வெற்றி உங்களுக்கு காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்!!

   டிஸ்கி: அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!! யார் வென்று வந்தாலும் நான் சொன்ன ஆளு தான்னு சொல்லிக்கலாமே அதான்

8 comments:

 1. அண்ணனின் தாயாரின் மறைவுக்கு அஞ்சலிகள்...
  பகிர்வுக்கு நன்றி சகோ....

  ReplyDelete
 2. U HAVE ENJOIED .......THATS IT...!!

  ReplyDelete
 3. ஆப்பிசரின் தாயாரின் மறைவிற்கு என் அஞ்சலியினையும், இரங்கலையும் பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 4. அண்ணனின் தயாரின் ஆத்மா சாந்தியடைய
  பிரார்த்திக்கிறேன்
  நிகழ்ச்சியை நேரடியாகப் பார்ப்பதைப் போல்
  இருந்தது வர்ணனை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

  ReplyDelete
 6. உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

  ReplyDelete
 7. ஆஃபீசர் அம்மா இறப்புக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

  ReplyDelete
 8. >>ஒருவர் "மாளவிகா" னு பேர் வைச்சாலே கும்முன்னு தான் இருப்பாங்களோ என்றார். நெல்லைக் குசும்பு!!

  ஹ்ஹி ஹி ஹி

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!