Bio Data !!

12 October, 2011

'செல்'லத் தொல்லைகள் 'சவால் சிறுகதை-2011 '

"உங்க பேரு S .பிரபாகரன். உங்களை எல்லோரும் S .P னு தான் கூப்பிடுவாங்க ரைட்." தன எதிரே இருப்பவனைப் பார்த்து சொல்லிக் கொண்டு இருந்தார் கிருஷ்ணகுமார். இவரது செல்லப் பெயர் KK . கோவையில் மிகப் பெரிய மனோ தத்துவ டாக்டர். கோவையில் இன்றைய லேட்டஸ்ட் டெக்னாலஜி யால் வரும் மன வியாதிகளை சரி செய்வதில் இவர் எக்ஸ்போர்ட் என்பதால் பல சீனியர் மருத்துவர்கள் கூட இவரை கன்சல்ட் செய்வதுண்டு. சில வேளைகளில் தன்னிடம் வருபவர்களுக்கு இவரை கை காட்டுவதும் உண்டு.

அப்படி வந்தவன் தான் பிரபாகரன். இருபத்தியைந்து வயது இருக்கும். ஆண்மை நிறைந்த வாலிபன். இவன் கண்களில் புதிது புதிதாக எதாவதுசெய்து பிறரிடம் பறை சாற்றத் துடிக்கும் பத்து வயது சிறுவனின் ஆர்வமும் துடிப்பும். இப்பொழுது தனியாக வந்திருக்கும் பிரபாகரனை முதலில் அழைத்து வந்தது அவருடைய அக்கா. ஒரு ஐந்து ஆறு வயது இவனை விட பெரியவளாக இருப்பாள் . சிறு வயதிலேயே தாயை இழந்ததாலேயே தன தம்பிக்கு தாயாகிப் போனவள்.

தனக்கு ஏதோ சிக்கல் இருப்பதாக சொல்லி தம்பியை அழைத்து வந்திருந்தாள். 
"தம்பி இங்கேயே இருடா. நான் டாக்டரை பார்த்திட்டு வந்திடுறேன். நீ  அப்புறமா வரலாம். " என்று வெளியே அவனை அமர்த்தி விட்டு வந்தவள் டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் . 
" டாக்டர், எனக்கு ரெண்டு வருஷம் முன்ன திருமணம் நடந்தது. அது வரை நார்மலாத் தான் இருந்தான். நான் தான் அவனுக்கு எல்லாம். நண்பர்கள் அதிகம் கிடையாது. அம்மா அவனுக்கு ஏழு  வயதிருக்கும் போது தவறிட்டாங்க. அப்பா சாப்பிட்டு தூங்கத்தான் வீட்டுக்கு வருவார். தனிமை அவனை ரொம்ப பாதிச்சிருச்சுன்னு நினைக்கிறேன்". என்றவள் அன்று தான் பார்த்ததை சொல்லத் தொடங்கினாள். 

" டேய், சாப்பிட வாடா. நான் வேலையை முடிச்சிட்டு படுக்க வேண்டாமா? " இரண்டு மூன்று முறை குரல்  கொடுத்தும்  பதில் வராததால் முணுமுணுத்துக் கொண்டே எழுந்து வந்தாள்.  
" உன்னோட பிறந்த நாள்னு தானே மதுரையில் இருந்து புறப்பட்டு வந்தேன். சேர்ந்து சாப்பிட்டா என்னடா? " னு கேட்டுக் கொண்டே அவன் அறையை நெருங்கியவள் திடுக்கிட்டாள். தரையில் அமர்ந்திருந்தான் அவனை சுற்றிலும் நீலம் சிவப்பு என கலர் கலராய் சிம் கார்டுகள் பரவிக் கிடந்தன. 
"இத்தனை சிம் கார்டை வச்சிக்கிட்டு என்ன பண்றான் ஸ்டாம்ப் கலெக்க்ஷன் மாதிரி இதை சேர்த்திக்கிட்டு இருக்கானா? அவன் இரண்டு கைகளிலும் இரண்டு செல்கள். வேக வேகமாக SMS செய்து கொண்டிருந்தான். பூனை போல் பாதம் பதித்து அவன் பின்னே சென்றாள். வலது கை செல்லில் இருந்து SMS  அனுப்புதும் அதை உடனே இடது கை செல்லில் பெற்று அதில் இருந்து பதில் அனுப்புவதுமாக இருந்தான். தனக்கு தானே SMS செய்து கொள்கிறானா? ஏதோ தப்பாக போய் கொண்டு இருக்கிறது என உள்ளுணர்வு சொல்ல சத்தமில்லாமல் வெளியே போய் அப்போது தான் வந்தவள் போல் "பிரபா " எனக் கொஞ்சம் சத்தமாகவே கூப்பிட்டாள். 

திடுக்கிட்ட பிரபாகரன் அவசரமாக அத்தனை சிம் கார்டுகளையும் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் மேல் புறம் அழுத்தி நீவி விட்டு தன் கட்டிலின் மெத்தையை தூக்கி அடியில் ஒளித்து வைத்தான். " இதோ வந்திட்டேன்க்கா " என பதில் கொடுத்த படி வந்தான். 
"என்னடா பண்ணிக்கிட்டு இருந்தே இவ்வளவு நேரமா கூப்பிடுறேன் ?"
"புஸ்தகம் படிச்சிக்கிட்டு இருந்தேனா கவனிக்கல " என்றான் அவள் கண்களை தவிர்த்தபடி.   இது தான் டாக்டர் நடந்தது. தனது தனிமையை போக்க ஏதோ விளையாட்டுத் தனமா தொடங்கி சிக்கல்ல மாட்டிக் கிட்டான் போல தெரியுது. 

"மறு நாள் காலையில எங்க வீட்டு பக்கத்தில உள்ள கடைக்கு போனேன். 4க்கு 
10   நீளவாக்கில அமைந்த அரை. ஓரமா ஒரு மேஜையை போட்டு கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாவின் நண்பன். என்னை பார்த்ததும் கணினியில் இருந்து மெமரி கார்டுக்கு பாட்டு ஏற்றிக் கொண்டிருந்த ஒருவனிடம் " சதா, அக்காவுக்கு ஒரு ஸ்டூல்   போடு " என்றான்.
" வாங்கக்கா, தண்ணி வேணுமா?" அவன் மினரல் வாட்டர் விற்பனைக்கு கொடுத்துக் கொண்டு இருந்தான். 
"இல்ல ராஜா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்."
"உட்காருங்கக்கா" என்றான் சதா என்னும் சிறுவன் எடுத்து போட்ட ஸ்டூலை பார்த்து. 
" பிரபா செல்லுக்கு பணம் ஏத்த இங்க தான் வருவானா? "
என் கேள்வி அவனை திடுக்கிட வைத்தது. குரலை கொஞ்சம் தழைத்துக் கொண்டு "நானே உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன். அவன் செல் நம்பர் எனக்கு நல்லாத் தெரியும். ஒரு நாள் வேற நம்பருக்கு பணம் ஏத்தினான்.சந்தேகம் வந்து கவனித்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது எண்ணுக்கு பணம் ஏத்தறான். ஏதோ பொண்ணு பிள்ளைங்க விஷயத்தில மாட்டிக்கிட்டானோ என்னவோன்னு உங்களை பார்த்து சொல்லணும்னு இருந்தேன். நேரமே ஒழியல" என்றான். 
நான் நினைத்தது சரியாப் போச்சுது ராஜா. ரொம்ப தாங்க்ஸ் வரட்டுமா" என எழுந்தேன். 
"நீங்க கவலைப் படாதீங்க நான் வேணா பேசிப் பார்க்கட்டுமா?"
" வேண்டாம், வேண்டாம் தேவைப்பட்டா நானே கேட்கிறேன்"

"நான்  அவசரத்தில தப்பான ஸ்டெப் எடுத்து வச்சிட்டேன். அவன் பின்னாடி போய் இருந்த நேரத்தில கட்டிலுக்கு அடியில இருந்த பையை தூக்கி ஒளிச்சு வச்சிட்டேன் . திரும்பி வந்தவன் சிம் கார்ட் இருந்த பையை காணோம்னதும் வேக வேகமா தேட ஆரம்பிச்சான். வெறி எடுத்தவன் போல் தேடினவன் உள்ளே போய் ஒரு கத்தியை எடுத்திட்டு வந்து மெத்தையை குத்திக் கிளற ஆரம்பித்தான். நான் என்ன விஷயம்னு கேட்டதும் அந்த கத்தியை என் பக்கம் திருப்பி " நீ தானே எடுத்தே ?நீ தானே எடுத்தே ? கொடுத்துடு" னு கத்த ஆரம்பித்தான்.இது வரை அவனை இவ்வளவு ஆக்ரோஷமா பார்த்ததில்லை.Dr பிரகாஷிடம் கூட்டிட்டு போனேன் அவர் ரெபர் பண்ணி தான் உங்களிடம் வந்தோம்.  

என் தம்பியை இந்த சிக்கல்ல இருந்து எப்படியாவது வெளியே கொண்டு வரணும். இந்த மாதிரி விளையாட்டினாலே வேலைக்கு போகணும் ன்ற எண்ணமே இல்லை  "
"கண்டிப்பா கொண்டு வந்திடலாம். என் வேலையில பாதியைத்தான் நீங்களே செஞ்சிட்டீங்களே? "
அதன் பின் பிராபாகரனை உள்ளே வரவழைத்து தொடங்கிய வைத்தியம் நான்கு சிட்டிங்குகள் முடிந்து இன்று ஐந்தாவது.  
"உங்க பேரு S .பிரபாகரன். உங்களை எல்லோரும் S .P னு தான் கூப்பிடுவாங்க.சரிதானா?"
"ம்ம்" என்று முனகினார்  போல் சொல்லி தலையாட்டினான் பிரபாகரன்.
"உங்க செல்ல குடுங்க புதிசா என்ன வசதி இருக்குது பார்க்கலாம்."
கையில் வாங்கிய கிருஷ்ணகுமார் " ரெண்டு சிம் போட்டு இருக்கீங்களா?" என்றபடியே சென்ட் மெயில் பகுதியை நோட்டம் விட்டார். அதில் SP , கோகுல் என்ற இருவருக்கு கொடுக்கப்பட்ட குறுஞ் செய்திகள் ஒரு சிறு கதையே சொல்லின. அவன் இன்னொரு செல்லையும் கையில் வைத்திருப்பதை பார்த்து "அது என்ன நம்பர் ?" என்றார்.
அவன் தயங்கி தயங்கி "98421xxxxx" என்றான். சொல்லி முடிக்கும்முன் தன் கையில் இருந்த அவன் அலைபேசியில் இருந்து அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். 
சிரித்தபடியே அவன் கையில் இருந்த அந்த அலைபேசியையும் கைப்பற்றினார்.
" விஷ்ணு இன்போர்மர் " என்ற பெயர் வந்தது. 
"விஷ்ணு, கோகுல் ,SP  என்ற மூன்று கதாபாத்திரங்களை, ஒரு துப்பறியும் கதை போல  தன் வசனக் கையிற்றால் இணைத்து ஒரு குறுங் கதை உருவாக்கி இருந்தான். தன் உதவி யாளரிடம் செல்லை கொடுத்து குறுஞ் செய்திகளை பிரிண்ட் செய்து கொண்டு வரச் செய்தார் KK . 
அத்தனை துண்டு செய்திகளையும் அடுக்கினார் 

"பாருங்க பிரபாகரன் அத்தனை செய்திகளும் உங்க செல்லில இருந்து தான் எடுத்திருக்கேன். ரெண்டு மூணு கதா பாத்திரங்களா கற்பனை பண்ணிக்கிட்டு உருவாக்கி இருக்கிற கதை புரியுதா பாருங்க."
பொறியில் மாட்டிக் கொண்ட எலியின் பரிதவிப்போடு தவித்தான். 
" உங்களோட நல்ல காலம் மனோ வியாதியின் ஆரம்ப கட்டத்தில கண்டு பிடிச்சிட்டோம். அதுக்கு நீங்க உங்க அக்காவுக்கு தான் நன்றி சொல்லணும். எதையும் மேலோட்டமா விட்டுடாம உங்களோட சிக்கலின் நுனியை கண்டு பிடிச்சு என் கையில கொடுத்திட்டாங்க. அதனால சிக்கலை பிரிப்பது எனக்கு எளிதாய்ப் போனது. 
உங்கள் கற்பனைகளை காகிதத்துக்கு கடத்துங்களேன். தமிழ் நாட்டுக்கு மிகச் சிறந்த ஒரு எழுத்தாளர் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்குது  .நான் தர்ற மருந்துகளை எடுத்துக்கிட்டீங்கன்னா பரபரக்கிற மனசு கொஞ்சம் நிலைப்படும். எல்லாம் சரி பண்ணிடலாம் . பீ சியர்புல்.கொஞ்ச நாள் செல்லையே தொடாம இருந்தீங்கன்னா ரொம்ப நல்லது." என்றார். 

பிரபாகரனின் தோளில் கை வைத்த படியே வாசல் வரை வந்த மருத்துவர் 
" முதல்ல நீங்க செய்ய வேண்டிய வேலை ஒண்ணு இருக்கு SP , நோ நோ பிரபாகரன் நீங்க சேர்த்து வைத்திருக்கிற எல்லா சிம் கார்டுகளையும் முதல்ல மூட்டை கட்டி பரண்ல போடுங்க. ஒரு புது வாழ்க்கையை ஆரம்பியுங்க. எந்த ஒண்ணுலயும் அளவுக்கு அதிகமான ஈடுபாடு ஆபத்தானது. " என்று அவனை வழி அனுப்பிய கையோடு அவனுடைய அக்காவை அழைத்து, 
"வாழ்த்துக்கள், மேடம் உங்கள் தம்பி சீக்கிரமே நார்மலா ஆயிடுவார்னு நம்பறேன் " என்றார். 
"இது இன்றைய நாளில் எனக்கு கிடச்ச பரிசு டாக்டர் ரொம்ப நன்றி " என்றாள் தளுதளுத்தபடியே.

18 comments:

 1. http://www.udanz.com வலைத்தளத்தில் தங்கள் பொன்னான வாக்குகளை இடுங்கள் நான் மேயராக அதாங்க முதல் பரிசு பெற

  ReplyDelete
 2. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு Superb.

  PHOTO க்கு பொருத்தமா
  இன்றைக்கு சில பேரோட பிரச்னை கலந்து ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. என்னாது மேயர் ஆகப்போரீங்களா, சீக்கிரம் சீக்கிரம், கூலிப்படை தலைவன் நான்தான்...

  ReplyDelete
 4. சவாலை ஜெயிக்க வாழ்த்துக்கள்!
  வாக்களிதுவிடுவோம்!

  ReplyDelete
 5. நன்றி சேது கதை எழுதத் தொடங்கியது உங்களால் தான் என்பதை இந்த இடத்தில் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்

  ReplyDelete
 6. அப்பாடா பலமான கூலிப் படை தயாரா இருக்குது எப்படியும் மேயராகிட வேண்டியது தான் நன்றி மனோ

  ReplyDelete
 7. நன்றி கோகுல் வாக்குப்பட்டை இன்னும் சேர்க்க வில்லை சேர்த்திடுவோம்

  ReplyDelete
 8. சிறுகதை நல்லா இருக்கு...

  ReplyDelete
 9. மேயராகவும் சவாலில் ஜெயிக்கவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. நன்றி ரெவேரி, இந்திரா அப்படியே udanz ல ஒரு வோட் போட் போய்டுங்க

  ReplyDelete
 11. ஹா...ஹா...நாய்க்குட்டி மனசு மேயர்!!!

  ReplyDelete
 12. பயமுறுத்தும் கதை. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 13. இன்றைய சூழலுக்கு ஏற்ற்ற கதை
  மிகப் பிரமாதமாக உள்ளது
  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. நாட்டு நடப்பு, நல்லா இருக்கு.

  ReplyDelete
 15. மேயராயிட்டா முதல் action சிபி மேல் தான். ஹா !ஹா!

  ReplyDelete
 16. சில நேரங்களில் பயம் நல்லது ஸ்ரீராம் .

  ReplyDelete
 17. நன்றி ரமணி சார், பரிசு கிடைக்க வாழ்த்துங்கள் .

  ReplyDelete
 18. நன்றி FOOD நாட்டு நடப்பு நல்லாவா இருக்கு ?

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!