Bio Data !!

24 October, 2011

சமையல் தேர்வு

கொஞ்சம் கொசுவத்தி சுத்தி பழைய நினைவுகளை அசை போட ஆசை வந்தாச்சு
அப்போ நான் காலேஜ் மாணவி. வீட்டில எப்போவும் சமையலுக்கு ஆள் உண்டு. அந்த அம்மா எப்போவாவது லீவ் போட்டா எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். ஏன்னா அம்மாவுக்கும் ரொம்ப விசேஷமா சமைக்கத் தெரியாது. அதனால வடகம், துவையல், பருப்பு கடஞ்சதுன்னு எல்லாம் எங்களுக்கு பிடிச்சதா இருக்கும். அப்படியாப்பட்ட ஒரு நாளில் எங்கள் தெருவில்  உள்ள ஆண்கள் "உனக்கு டைனிங் டேபிள் போனாத்தானே என்ன சமையல்னே தெரியும்னு " ரொம்ப கலாச்சதாலும், அன்று எனக்கு விடுமுறையா இருந்ததாலும் "அம்மா இன்று நான் சமையலை கவனிச்சிக்கிறேன்" னு ரொம்ப பெருமையா சொல்லிட்டேன். மெனு என்ன தெரியுமா ரசம், வாழைக்காய் பொரியல். (பெரிய்ய்ய்யா மெனு!) ஆனா அன்னிய தேதிக்கு அதுவே பெரிய விஷயம். இப்போ நான் சமையல்ல கில்லாடி தைரியமா சாப்பிட வரலாம்.

எதிர் வீட்டு பாட்டியிடம் ரசம் எப்படி வைப்பதுன்னு எல்லாம் கேட்டுட்டு வந்திட்டேன். எல்லாம் அவங்க சொன்னபடியே செய்தாச்சு. அந்த நேரம் பார்த்து எங்க பக்கத்து வீட்டில இருந்த எங்க சித்தி உள்ளே வந்ததும் நான் ரொம்ப ஆர்வமா "சித்தி இன்னைக்கு நானே ரசம் வச்சிட்டேன். டேஸ்ட் பண்ணி எப்படி இருக்குனு சொல்லுங்க" னு சொன்னதும் 
"கொஞ்சம் நேரம் ஆகட்டும் சூடா இருக்கும்ல "ன்னாங்க.
எனக்கு அப்போ தான் உள்ளுக்குள்ள திகீர்னது. "சூடா இருக்குமா?" 
ஏன்னா எல்லா செய்முறையும் சொன்ன அந்த பாட்டி அவ்வளவையும் அடுப்பில வைச்சு செய்யணும்னு சொல்லாததாலே எல்லாம் கீழேயே வைத்து செய்து முடிச்சிட்டேன். 

எனக்கு ஒரு தங்கச்சி இருக்குது. அறுந்த வாலா அப்போ இருந்தது. இப்போ ரொம்ப அமைதி. அதுக்குள்ளே வாசலுக்கு போய் அங்கே நின்னவங்க கிட்டே எல்லாம் "எங்க அக்கா அடுப்பிலேயே வைக்காம ரசம் வச்சிட்டுது" னு தண்டோரா போட்டுட்டா. அந்த அவப் பெயரை நீக்க எனக்கு ரொம்ப காலம் ஆச்சுது. என்னோட வீட்டுக்காரர் வேற ஒற்றை நாடி சரீரமா இருப்பார். 
"என் இப்படி இருக்கீங்க " னு யாராவது கேட்டுட்டா 
"அடுப்பிலேயே வைக்காம சமைச்சு கொடுத்தா இப்படித்தான் இருப்பார்" னு என்னை மண்டை காய வைப்பாங்க.

ஆனா இத்தனை வருஷத்துக்கு அப்பறம் எனக்கு சாதகமா ஒரு விஷயம் கிடைச்சிருக்கு.  குழம்பு கூட்டறது தரையிலேயே வைச்சு செய்றது தானே  அதையே தான் அன்னைக்கும் செய்திருக்கேன் என்ன ஒரு தடவையாவது அடுப்பில வச்சிருக்கணும்......

புளிக்குழம்பு சுவையாக செய்ய செய்முறை:
புளியும் உப்பும் போட்டு கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். அதில் மல்லித்தூளை போட்டு கரைத்து விடவும். தேங்காய், வற்றல், சீரகம், மூன்று பல் பூண்டு எல்லாம் போட்டு மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து அதையும் புளித் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், வாழைக்காய் ஏதேனும் ஒரு காயை தண்ணீரில் வேக வைத்து அதையும் குழம்பு கூட்டியதில் போடவும். வெண்டைக்காய் புளிக் குழம்புக்கு மட்டும் வெண்டைக்காயை தனியாக சிறிது எண்ணை விட்டு நன்கு வதக்கி போட்டால் போதும் வேக வைக்க வேண்டாம். இது வரை அடுப்புப் பக்கமே போற வேலை இல்லை.

எண்ணை விட்டு கடுகு,சிறிது வெந்தயம் (வெந்தயம் கூடினால் கசப்பு வந்து விடும்) கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, நான்கு பூண்டு பல் போட்டு வதக்கவும். புளி கரைத்ததில் உப்பை கொஞ்சம் குறைவாக போட்டு மீதியை வெங்காயம் வதக்கும் போது போட்டால் தக்காளி நன்கு மசிந்து விடும்.  வெங்காயம் பொன் நிறமாக வெந்ததும் குழம்பு கூட்டியதை ஊற்றி சிம்மில் வைத்து மூடி விட்டால் நீங்கள் அடுத்த வேலையை பார்க்க போய் விடலாம். குழம்பின் வாசம் தயாராகி விட்டது என்பதை உங்களுக்கு சொல்லி கூட்டி  வந்து விடும் 

செய்து பார்த்திட்டு சொல்லுங்களேன் நான் சமையலில் தேறி விட்டேனா என்று 

15 comments:

 1. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சகோ கலக்கல் பதிவு...ரசம் மேட்டர் டாப்பு ஹஹஹா!இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!

  ReplyDelete
 3. ha,ha,ha,ha,ha.... super rasam!

  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. சைபரில் ஆரம்பித்து 100 க்கு வந்து
  அதையும் மிக அழகான
  பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
  இனியதீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ///ஏதேனும் ஒரு காயை தண்ணீரில் வேக வைத்து அதையும் குழம்பு கூட்டியதில் போடவும். வெண்டைக்காய் புளிக் குழம்புக்கு மட்டும் வெண்டைக்காயை தனியாக சிறிது எண்ணை விட்டு நன்கு வதக்கி போட்டால் போதும் வேக வைக்க வேண்டாம். இது வரை அடுப்புப் பக்கமே போற வேலை இல்லை.///

  ஒரு சந்தேகம்.....
  அடுப்பு பக்கமே போகாம எப்படி காய் வேகும் ..?

  ReplyDelete
 6. 'தைரியமா சாப்பிட வரலாம்.'

  அதற்கென்ன..கண்டிப்பா எல்லோரும் வந்துட்ரோம்

  ReplyDelete
 7. >>
  எனக்கு ஒரு தங்கச்சி இருக்குது.

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 8. >>செய்து பார்த்திட்டு சொல்லுங்களேன் நான் சமையலில் தேறி விட்டேனா என்று

  ம்க்கும், அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே. இனி தேறுனா என்ன? ஆறுனா என்ன? ஹா ஹா ஹய்யோ ஹய்யோ

  ReplyDelete
 9. நன்றி ரத்னவேல்சார், தீபாவளி நன்நாள்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. நன்றி விக்கி ரசம் விஷயம் பணி புரியும் இடங்களில் எல்லாம் என் பிள்ளைகள் மூலம் பரவி இன்றும் என்னை பார்த்ததும் " இன்னைக்கு உங்க வீட்டில ரசமானு?" கிண்டல் பண்ணுவாங்க
  வளத்தோடும் நலத்தோடும் தீபாவளி கொண்டாடிட வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  ReplyDelete
 11. welcome back chitra . அமெரிக்காவில் தீபாவளி உண்டா??

  ReplyDelete
 12. ரமணி சார், 100 க்கு வந்திட்டேனான்னு தெரியல but நல்லாவே சமைப்பேன் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 13. கோவை நேரம் அலெர்ட்டா இருக்கீங்களே! தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 14. நானும் புது ரெசெபிகளை பரிசோதனை பண்ண ஆள் தேடிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக வாங்க பார்வையாளன். தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 15. இவ்வளவு எழுதி இருக்கிறேன். கவனம் எதிலே போகுது பாரு இந்த சிபிக்கு ,
  வயசானா என்ன நாக்கு ருசி கெட்டா போகும் . தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் !!

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!