Bio Data !!

17 November, 2011

"இமயத்து ஆசான்கள்"

பதிவர் சந்திப்பின் இறுதிக்கு வந்தாச்சு.
மதியம் இரண்டு மணி அளவில் திரு செல்வகுமாருக்கு மற்றும் ஒரு மீட்டிங் இருந்ததால் மனமில்லாமலே முடித்துக் கொண்டோம். எனக்கு இரவு ஏழு மணிக்கு தான் ட்ரெயின்.அப்படியே லஞ்சுக்கு வெளியே போவோமா என யோசித்தோம். தேனம்மை " வேண்டாம் ரூபி, இங்கே ஹைதராபாத் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும்.பார்ஸல் வாங்கிட்டு போய் வீட்டில வச்சு சாப்பிடுவோம். " னு சொன்னாங்க.
உண்மையிலேயே அப்படி ஒரு ருசி, பிரியாணிக்கும் அதனுள்ளே உறங்கிக் கொண்டிருந்த சிக்கென் துண்டுகளுக்கும்.    பேசிக் கொண்டே கலைந்து கிடந்த பொருட்களை ஒதுக்கும் போது எனக்கு  சிந்து பைரவியின் சுகாசினி நினைவுக்கு வந்தார். பேசினோம் பேசினோம் எல்லா திசையின் விஷயங்களையும் அலசினோம். "உங்கள் எழுத்துக்கள் வந்த புத்தகங்களைக் காட்டுங்க பார்ப்போம்" னு சொன்னேன். ரெண்டு பை நிறைய, சின்ன குழந்தைகள் விளையாட்டு சாமான் பை யை கொண்டு கவுத்துறதைப் போல கொண்டு வந்து வெளியே போட்டார்கள். நல்ல எழுத்துத் திறமை தேனம்மைக்கு, அது காய்ந்து விடாமல் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள வேண்டும். 

என் கொழுந்தன் எழுதும் தீவிரவாதம் புத்தகம் பற்றி பேச்சு வந்தது. தீவிரவாதம் பற்றி அவர்கள் பேசிய பல விஷயங்கள் எனக்கு ஆச்சர்யம் அளித்தன. தீவிரவாதத்தில் மதத்தின் பங்கு பற்றி நீள நெடுக பேசினோம். "ஆச்சியின்" வெள்ளந்தித்தனம் , பிறரை வெளிப்படையாக பாராட்டும் தன்மையும் என்னை மிகவும் கவர்ந்தன. எனது படைப்பை காகிதப் படைப்பாக்கியதில் தேனம்மையின் பங்கு பெரும் பங்கு.

ஒரே ஊர்க்காரர்களாய் இருந்தால் இடைஇடையேயாவது பார்த்துக் கொள்ளலாமே என்ற மன ஆதங்கத்தோடு புறப்பட்டேன். வாசலுக்கு வந்து வழி அனுப்பிய அந்த விழிகளிலும் அதே ஏக்கம்.

என் கொழுந்தனின் உதவியோடு எக்மோர் வந்து சேர்ந்தேன். அங்கும் இறுதியாக ஒரு  நண்பரை சந்திக்கும் ப்ளான் இருந்தது. ஆனால் அவர் அயல் நாட்டு நண்பர்களிடம் மாட்டிக் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. என்று சொன்னார். அதனால் அவருக்கு வாங்கி வைத்திருந்த "இமயத்து  ஆசான்கள்" என்ற புத்தகம் அவர் நினைவாக என்னிடமே தங்கி விட்டது. முந்தின நாளே ஒரு அவசர இடைவெளியில்  எக்மோர் ஸ்டேஷன் பக்கம் நின்று ஒரு  ஐந்து நிமிடம் சந்திப்பதாக ஏற்பாடு.  எலெக்ட்ரிக் ட்ரெயினில் வந்து கொண்டு இருந்தேன். அம்மா தொலைந்து போகாமல் பத்திரமாகத் தான் இருக்கிறாளா என்ற தன் சந்தேகத்தை என் மகள் நிவர்த்தி செய்து கொண்டிருந்தாள்.  

இடையில் அவரது அழைப்பு "ரூபினா, எங்கே இருக்கீங்க?"  ரொம்ப புத்திசாலியாக ஜன்னல் வழி பார்த்து " இப்போ தான் போர்ட் ஸ்டேஷன் தாண்டுறேன்"  என்றேன். அவர் மெல்லிய சிரிப்பினூடே " போர்ட் ஸ்டேஷன் ? எக்மோர் தாண்டிட்டீங்க போல் இருக்கே? சரி இறங்கி அடுத்த ட்ரெயின் பிடிச்சு வாங்க நான் வெயிட் பண்றேன்" என்றார்.  இதில கொடுமை என்னானா  அருகில் இருந்த பெண் "நீங்க யார்ட்டயோ "எக்மோர் போறேன்" னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே அப்போ தான் எக்மோர் போச்சு!!!" னு சொன்னாங்க. இது தான் நகரமா?? 

எப்படியோ மறுபடியும் எக்மோரை தாண்டி போகாமல் சரியாக இருங்கி ஐந்தே ஐந்து நிமிடங்கள் சந்தித்தேன்.  அந்த நண்பர் யார் என்றா கேட்கிறீர்கள். வேண்டாமே!! என்னை பொறுத்த வரை ஒரு நல்ல நண்பர். 

சென்னையில் சந்தித்த, பழகிய, அன்பு காட்டிய . வழி மேல் விழி வைத்து எனக்காக காத்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

30 comments:

 1. சகோ உங்களுக்கு சென்னைய ட்ரைன் மூலமா பாக்கனும்னு ஆசைன்னு நெனைக்கிறேன்!

  ReplyDelete
 2. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  ReplyDelete
 3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 4. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  ReplyDelete
 5. ஹாஹாஹா //ரெண்டு பை நிறைய, சின்ன குழந்தைகள் விளையாட்டு சாமான் பை யை கொண்டு கவுத்துறதைப் போல கொண்டு வந்து வெளியே போட்டார்கள்//

  அப்புறம் உங்களுக்கு சென்னையில ட்ரெயின்களும் தோழர்களாயிட்டமாதிரி இருக்கே..:)

  ReplyDelete
 6. உண்மையிலேயே அப்படி ஒரு ருசி, பிரியாணிக்கும் அதனுள்ளே உறங்கிக் கொண்டிருந்த சிக்கென் துண்டுகளுக்கும்.//

  என்னாது சிக்கன் உறங்கிட்டு இருந்துச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 7. நல்ல எழுத்துத் திறமை தேனம்மைக்கு, அது காய்ந்து விடாமல் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள வேண்டும். //

  அது அவர் எழுத்துகளில் நன்றாக தெரிகிறது, உயிர்ப்போடு வைத்தும் இருக்கிறார் வாழ்த்துக்கள், யாம்மாடி நீங்க நெல்லை வந்து சேர்ந்தீர்களா இல்லையா ஹி ஹி....

  ReplyDelete
 8. நல்ல சுவாரஸ்யமான சந்திப்பும் நிகழ்வுகளும்!

  ReplyDelete
 9. இந்த கவிதையையும் பாருங்களேன்!
  http://blossom111111.blogspot.com/2011/11/little-sparrow.html

  ReplyDelete
 10. அம்மா தொலைந்து விடுவாள் என்னும் என் பெண்களின் பயம் நியாயம் தான் என்று புரிகிறதா? விக்கி

  ReplyDelete
 11. ஏன் TEMPLATE கமெண்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க சூர்யா?

  ReplyDelete
 12. நன்றி லக்ஷ்மி மேடம் எங்காவது விரைவில் உங்களையும் சந்திக்க விருப்பம்

  ReplyDelete
 13. தேனம்மை பதிவில் நன்றி சொல்ல மறந்து விட்டேன் நீங்கள் தந்த இலங்கையை பற்றிய "வாசல் ஒவ்வொன்றும் " புத்தகத்துக்கு சிறப்பு நன்றி

  ReplyDelete
 14. ஹா !! ஹா!! மனோ எப்படியோ ரெண்டு திசையிலேயும் மாறி மாறி பயணம் செய்து வர வேண்டிய இடத்துக் கரக்டா வந்திடுவேன்

  ReplyDelete
 15. எங்க சந்திக்கலாம் சொல்லுங்க ரூபினா?

  ReplyDelete
 16. என்னை தவிர எல்லோரையும் பார்த்துட்டீங்க போல.. எல்லோருக்கும் புத்தகம் வேற கொடுத்து இருக்க்கீங்க. ஹ்ம்ம் , :( எனக்கும் ஒரு காலம் வரும்

  ReplyDelete
 17. இதே போல ஒரு நேரம் வரும் லக்ஷ்மி அம்மா

  ReplyDelete
 18. எனக்கும் ஒரு காலம் வரும் // என்னாதிது பார்வையாளன். வீட்டுக் கல்யாணம் முடிந்ததும் பல முனை தாக்குதல் வருமே "என்னைக் கூப்பிடலைன்னு" அது போல தாக்குதல்களை எதிர் நோக்கிக் கொண்டு இருக்கிறேன். நீங்க வேறயா?

  ReplyDelete
 19. உண்மையிலேயே அப்படி ஒரு ருசி, பிரியாணிக்கும் அதனுள்ளே உறங்கிக் கொண்டிருந்த சிக்கென் துண்டுகளுக்கும்.//

  பதிவர் சந்திப்பு சுவாரஸ்யம்....
  நெல்லையில் இது போல் சாப்பாடு கிடைக்கும் இடங்கள் சொல்லுங்களேன்...உங்கள் இல்லம் தவிர்த்து...-:)

  ReplyDelete
 20. 2 பேரும் செம சிரிப்பு போல.. ஃபோட்டோ கிராஃபர் ஜோக் அடிச்சாரா?

  ReplyDelete
 21. >>. தேனம்மை " வேண்டாம் ரூபி, இங்கே ஹைதராபாத் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும்.பார்ஸல் வாங்கிட்டு போய் வீட்டில வச்சு சாப்பிடுவோம். " னு சொன்னாங்க.

  இந்த பதிவுல இருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா தேனம்மைக்கு சொந்தமா சமைக்கவே தெரியாதுன்னு ஹய்யொபொ அய்யோ

  ReplyDelete
 22. ஆமா இதுல "இமயத்து ஆசான்கள்" யாரு... தேனம்மை ஆச்சியா... ரூபினா ஆண்டியா... :))

  ReplyDelete
 23. நெல்லையில் இது போல நான் சாப்பிட்டதே இல்லப்பா ரெவேரி

  ReplyDelete
 24. சும்மா தேனம்மையை வம்புக்கு இழுத்தா நான் சும்மா இருக்க மாட்டேன் சிபி (சும்மா கொஞ்சம் மிரட்டிப் பார்த்தேன்)

  ReplyDelete
 25. யாரும் இந்த கேள்வியை கேட்டிறக் கூடாதேன்னு நினைச்சேன். அந்த புத்தகம் பெயர் நல்லா இருந்துச்சு அதான்.
  அது சரி ஒண்ணு தெரியுமா துபாய் ... எனக்கு இங்கிலீஷ் ல பிடிக்காத ஒரே...... வார்த்தை aunty தான்

  ReplyDelete
 26. அக்கா..! அருமையான பகிர்வு. உங்கள் மொத்த பயணமும் கண்முன் நிற்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றியும், மகிழ்ச்சியு..!

  ReplyDelete
 27. //இங்கே ஹைதராபாத் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும்.பார்ஸல் வாங்கிட்டு போய் வீட்டில வச்சு சாப்பிடுவோம்.//
  இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? நாங்க இதைப் படிச்சிட்டு சென்னைக்கு போயா அந்த பிரியாணியை சாப்பிட முடியும்!

  ReplyDelete
 28. மிக்க நன்றி வேடியப்பன், வரவுக்கும் வேண்டுகோளுக்கிணங்க 'மேடம் ' என்று அழைப்பதை தவிர்த்ததற்கும்

  ReplyDelete
 29. FOOD என்னைப் பார்த்தா பாவமா இல்ல நான்கு ஆண்டுகள் கழித்து சென்னை செல்லும் ஒருவர் தண்ணி குடிக்கிறதை கூட 'தக தக ' னு தான் சொல்வாங்க கண்டுக்காதீங்க !

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!